Search This Blog

Saturday, May 5, 2012

உலகில் முதன் முதலில் விமானத்தை கண்டுபிடித்த குபேரன் சகோதரர்கள் ,,





உலக வரலாற்றில் விமானத்தை கண்டு பிடித்தது யார் என்று கேட்டால் உடனே கொடுக்கப்படும் பதில் வில்வர் ரைட் ஒலிவர் ரைட் ,,என்பது என் காதில் பல தடவை ஒலித்த விடை இது . இதை நானும் 8 ம் வகுப்பு பரிட்சையில் பெயர் தெரியாததால் ரைட் சகோதரர்கள் என்று எழுதி சரி வாங்கிய ஞாபகம்,, ,,இதிகாசங்களில் ஆரியர்கள் எழுதிய அனைத்தும் உண்மை என்று நம்பி,அதில் இருக்கும் இலக்கிய சுவையோடு உறவாடிக்கொண்டு இருக்கும் என் தமிழ் உறவுகளே !புட்பக விமானத்தில் வந்து இராவணன் சீதையை கடத்தி சென்றான் என்று அதே வான்மீகி சொன்னதை கம்பன் கவித்துவத்தோடு எழுதியதை நம்பும் தமிழர்கள் நாம் ,ஏன் விமானத்தை கண்டு பிடித்தது குபேரன் சகோதரர்கள் என்று சொல்ல முன்வரவில்லை ,,,,,,சிந்திக்கவும் ,,,,,,,
இராவணன் யார் என்ற கேள்விக்கு பதில் கொடுக்க முனையும் நான் அவன் முன்னோர்களின் விபரங்களை தரவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றேன் .மலை களை கோட்டைகளாக வைத்தே தங்கள் அரண்களை அமைத்து பூர்வீக அரசர்கள் நாட்டை ஆண்டார்கள் சுகேசன் என்ற அரசன் குமரிக்கண்டத்தில் ஒரு பெரிய மலையில் இருந்து ஒரு பேரரசை ஆண்டான் இவன் மகேந்திர மலை அல்லது மணி மலை என்று சொல்லப்படுகின்ற நாகர்களின் அரச பரம்பரையில் தெய்வ வதி என்ற பெண்ணை திருமணம் செய்தான் இவர்களுக்கு மாலியவான் ,சுமாலி .என இரண்டு புத்திரர்கள் .இவர்களில் பராயம் வந்ததும் மாலியவான் ஈழத்துக்கு அரசன் ஆனான் .இவனே பத்து நாடுகளை வென்று முதலில் தனது கிரீடத்தில் பத்து நாடுகளின் முடியையும் பதித்து ஒரு கிரீடத்தை அணிந்து இருந்தான் இவனே இராமாயணம் வர்ணனை செய்ததை விட மேன்மையான இலங்கா புரியை அமைத்து இருந்தான் .இவனது ஆட்சியின் முடிவில் இவன் தம்பி சுமாலி நாட்டை ஆண்டான் .சுமாலி மாதோட்ட நாகர் குல இளவரசி கேது மதியை திருமணம் செய்தான் .இவர்களுக்கு ஆண்பிள்ளை இல்லை ஒரே ஒரு மகள் அவள் பெயர் கை கேசி ,,( தசரதன் மனைவி கைகேயி அல்ல )இதனால் மாதோட்ட அரசை ஆண்ட புலஸ்தியர் குணவதி ஆகியோரது மகனும் கேது மதியின் அண்ணனும்
ஆகிய வச்சிர வாகு என்பவன் நாட்டை ஆண்டான் .வச்சிர வாகு அழகா புரி இயக்கர் குல தேவ கன்னி என்ற இளவரசியை திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான் அவனே வச்சிர வாணன் ,இவன் தந்தைக்கு பின் அழகாபுரியையும் இலங்காபுரியையும் ஆண்டான் இவன் நாட்டில் பெருமளவு செல்வம் இருந்த தாலும் பூமியின் மிகப்பெரிய தேசத்தை ஆண்டதாலும் இவனுக்கு காலப்போக்கில் குபேரன் என்ற புகழ் பெயர் வரலாயிற்று .இவனே முதன் முதலில் சூரிய பிரகாசம் ,என்றும் புஷ்பக விமானம் என்று இரு கடல் விமானங்களை வைத்திருந்தான் .குபேரனுக்காக மண்டோதரியின் தந்தை மாயன் என்பவரே இவ்விரு விமானங்களையும் வடிவமைத்தான் .குபேரன் காலத்திலேயே மயனின் தொழில் நுட்பத்தில் ஈழத்தில் முதன் முதலில் கோபுரங்களை கொண்ட சிவாலயங்கள் கட்டப்பட்டதாகவும் அறியப்படுகின்றது ,..இவன் ஆட்சி புரிந்த காலத்திலேயே அழகா புரியில் இருந்து இயக்கர் குலத்தவர் ஈழத்துக்கு வந்ததாகவும் வரலாறு உண்டு ,.இவன் தந்தை வச்சிர வாகு சுமாலி கேதுமதியின் மகள் கைகேசியையும் இரண்டாம் தாரமாக திருமணம் செய்தான் இவர்களுக்கு பிறந்த பிள்ளைகளே .இலக்கிய ரசனைக்காக ஆரியர் தம்மை உயர்வாய் காட்ட அரக்கர்களாய் சித்தரிக்கப்பட்ட இராவணன் ,கும்மகர்ணன்,விபூசணன் ,சூர் பனகை , .இவர்களுக்கு பெற்றவர்கள் இட்ட பெயர் முறையே சிவதாசன் ,பரமன் ,பசு பதி ,உமை அம்மை ,,,சிவதாசன் வளர்ந்ததும் ,குபேரன் அதாவது வச்சிர வாணன் வம்சத்தில் தம்பிக்கே உரிமை உள்ள ஈழதேசத்தை கொடுத்து விட்டு ,புட்பக விமானம் என்ற ஆகாய ஊர்தியையும் கொடுத்துவிட்டு தான் அழகா புரி அரசை ஆள செல்கின்றான் .

கால ஓட்டத்தில் ஆரியர்கள் தென்னிந்தியர்களை ஏமாற்றி அவர்களை தங்கள் கைபோம்மைகள் ஆக்கி ஈழத்தில் மீது படை எடுத்து பத்து தேசங்களுக்கு முடிக்கு உரிய அரசனாய் இருந்த சிவதாசனை வஞ்சகமாய் அவன் தம்பி பசுபதியையே தங்களுக்கு சாதக மாக்கி அவனது போரியல் நுணுக்கங்களையும் படை பல.இரகசியங்களையும் அறிந்து சிவா தாசன் என்கின்ற உலக மகா வீரனை வென்றார்கள் ,,,
,,,,,அன்பான உறவுகளே உங்களுடன் என்னும் சில நிமிடம் ஈழத்தவர்களை அழிப்பதற்கு பல்வேறு வழிகளில் தென் இந்தியர்களை ஆரியர்கள் பயன்படுத்தினார்கள் .தென்னிந்தியர்களின் உதவியே சிவதாசன் என்கின்ற இராவணனின் ஈழதேசம் வீழ்சி அடைய காரணம். அவர்களே பசு பதி ஆகிய விபூசணனையும் ஆரியர்கள் பக்கம் மாற்றினார்கள் . திராவிட மாயையில் தெளிவில்லாமல் மயங்கி நிற்கும் தென்னிந்திய உறவுகளே .இராமாயணம் உண்மை என்று உணர்சி போங்க வாதிடும் உறவுகளே ,,,,,, இராமாயணம் கடைசியில் உங்களை குரங்குகள் என்றும் எங்களை அரக்கர்கள் என்றும் தான் தான் சொன்னதே தவிர உயர் குல அரசுகள் என்று சொல்லி மாலை போடவில்லை ,,,,,,,,,,,
ஆரிய திராவிட மாயையில் உங்களை இழந்த தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் ,,,,எங்களை நாங்கள் யாரென்று உணர்ந்து கொள்வோம் ,,,,,,,,,,,,நன்றி வணக்கம் ,,சிவ மேனகை ,,,,,,

No comments:

Post a Comment