Search This Blog

Friday, May 4, 2012

''எங்க வீட்டுல மட்டும் மின்வெட்டு பிரச்னை கிடையாதுங்க''


''எங்க வீட்டுல மட்டும் மின்வெட்டு பிரச்னை கிடையாதுங்க'' என்று ஜாலியாகச் சிரிக்கிறார் சுரேஷ். சென்னை கீழ்ப் பாக்கத்தில் வசிக்கும் இவர், தனியார் நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்கு நர். தன்னுடைய வீட்டில் சோலார் தகடுகளைப் பொருத்தி, அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்திவருகிறார்.

''மழை நீர் சேகரிப்புத் திட்டம் உள்பட ஏகப்பட்ட திட்டங்களை நம்ம அரசு அறிமுகப்படுத்துவதற்கு முன்னாடியே என் வீட்டுல அறிமுகப்படுத்திட்டேன். காரணம், நல்ல விஷயங்கள்ல நாம மத்தவங்களுக்கு முன் மாதிரியா இருக்கணும்கிற எண்ணம்தான். வீட்டுல சோலார் தகடுகளைப் பொருத்தின இந்த மூணு மாசமா ஒரு செகண்ட் கூட எங்க வீட்ல கரன்ட் கட் கிடையாது. மின் விசிறி, லைட்டுகள்னு எங்க வீட்டுக்கான மின்சாரத் தேவை சுமார் ஒரு கிலோ வாட். அதுக்காக, 10 சோலார் தகடுகளைப் பொருத்தி இருக்கேன். சூரியஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரம், நேரடியா மெயின் போர்டில் சேரும்படி இணைப்புக் கொடுத்து இருக்கேன். அப்படி கிடைக்கிற மின்சாரத்தை 10 இன்வெர்ட்டர் பேட்டரிகளில் சேமிச்சுவெச்சுப் பயன்படுத்துறேன்.

சோலார் தகடுகளில் இருந்து கிடைக்கிற மின்சாரத்தைக் காலையில் இருந்து சாயங்காலம் வரை மட்டுமே பயன் படுத்த முடியும். இரவு வேளைகளில் பேட்டரியில் சேமிக்கப் பட்டு உள்ள மின்சாரத்தைப் பயன்படுத்துவோம். இங்கே நான் பொருத்தி இருக்கிற சோலார் தகடு, இன்வெர்ட்டர் பேட்டரிகளுக்குக் கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாய் செலவாச்சு. இது பெரிய தொகைதான். ஆனால், இதில் 80 ஆயிரம் ரூபாயை அரசாங்கம் மானியமாக் கொடுத் தாங்க. 20 ஆயிரம் ரூபாய் செலவில்கூட சோலார் தகடுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம். இப்ப பெரும்பாலான வீடுகள்ல டிஷ் ஆண்டனா இருக்கிற மாதிரி வருங்காலத்துல எல்லா வீட்டு மாடிகளிலும் சோலார் தகடுகள் இருக்கும். என்கிட்ட ஏகப்பட்ட பேர் இதைப் பற்றி விசாரிக்கிறாங்க. இதை ஃபாலோ பண்ணினா பவர்கட்டுக்கு கட் சொல் லலாம்!'' சிரிக்கிறார் சுரேஷ்.
நன்றி:ஆ.வி

No comments:

Post a Comment