Search This Blog

Sunday, December 18, 2011

சிறுநீரக கோளாறு போக்கும் எருக்கன் பூக்கள்!



தேவ மூலிகை அல்லது விருட்சம் என்று கூறப்படும் வெள்ளெருக்கு அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் குப்பை மேடுகளிலும், தரிசு நிலங்களிலும் காணப்படும் எருக்கன் செடியை விஷ செடி என்று நாம் ஒதுக்கி விடுகிறோம். எருக்கன் செடியில் பூக்கும் பூக்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. விஷக்கடிக்கு மருந்தாக பயன்படும் இந்த பூக்கள் சிறுநீரக கோளாறுகளை மூன்று நாட்களில் குணமடையும்.
ஆஸ்துமா குணமடையும்
வெண்மை நிற எருக்கன் பூக்கள் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும். வெண்ணிற எருக்கன் பூக்களை அவற்றில் உள்ள நடு நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை மட்டும் எடுத்து அதனுடன் சம அளவு மிளகு, கிராம்பு, சேர்த்து மை போல அரைத்து கிடைத்த விழுதை மிளகு அளவு மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி கொள்ளவும். இதனால் இரைப்பு நோய் அதிகரிக்கும் சமயம் ஒரு உருண்டை சாப்பிட்டு நீர் அருந்த உடனே தணியும்.
10 கிராம் இஞ்சி,3வெள்ளெருக்கன் பூ,6 மிளகு இவற்றை நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தினம் இருவேளை பருகி வர இரைப்பு குணமாகிவிடும்.
வாதவலி வீக்கம்
எருக்கன் பூவை தேவையான அளவு எடுத்து வதக்கி வீக்கம், கட்டிகள் மீது வைத்துக்கட்ட வீக்கம், கட்டி குறையும். ஆறாத புண்கள் இருந்தால் எருக்கன் பூக்களை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த பொடியை புண்களின் மீது மருந்தாக போட்டு வர சீக்கிரத்தில் புண்கள் ஆறிவிடும்.
பாம்பு கடி விஷமருந்து
நல்ல பாம்பு கடித்து விட்டால் உடனே எருக்கன் பூ மொட்டு 5 எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று சாப்பிட சொல்ல வேண்டும். இதனால் விஷம் இறங்கிவிடும். இதன்பின்னர் மருந்துவரிடம் சென்று சிகிச்சை அளிக்கவேண்டும்.
(நன்றி வீரமுனை இணையம்)

No comments:

Post a Comment