Search This Blog

Thursday, December 29, 2011

Tamil

தமிழில் தோற்றம் கொண்டு வளர்ந்தமைந்த இலக்கியங்களைத் தமிழ் இலக்கியங்கள் எனக் கூறலாம். எழுந்த காலம், மற்றும் இலக்கியத்தின் யாப்பியல், கருப்பொருள் முதலியன தொடர்பாகத் தமிழ் இலக்கியங்களை வேறு பிரித்து ஆராயும் முறை நிலவி வருகிறது. தமிழ் எந்த ஒரு மதத்திற்கும் மட்டும் உரியதன்று. அது பொதுவானது. பல மத இலக்கியங்களும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு துணை புரிந்திருக்கின்றன.

தமிழ் உரைநடை வளர்ச்சியின் பின்புலம்

ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர்த் தமிழ்ச் சமூகத்தில்
மாற்றங்கள் நிகழ்ந்தன. புதிய சமூக அமைப்பிற்குச் செய்யுள்
இலக்கியத்தை விட உரைநடை வளர்ச்சியே ஈடுகொடுத்து வந்து
உள்ளது. இதைக் கீ்ழ்வருமாறு பகுத்துக் காணலாம்.

• நிர்வாகத் தேவை
• மதப் பிரச்சாரம்
• பத்திரிகைத் துறை வளர்ச்சி
• கல்வி வளர்ச்சி

* நிர்வாகத் தேவையும் உரைநடையும்

கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆங்கிலேய
அரசு ஆண்டது. புதிய நிர்வாக முறை அறிமுகம் செய்யப்
பெற்றது. இதனால் கடிதத் தொடர்புகள், கணக்கேடுகள்,
பட்டியல்கள் என எல்லாம் மாற்றம் பெற்றன. இத்தேவைகளைச்
செய்யுள் வடிவ மொழி நிறைவு செய்யாது. பழைய
உரைநடையின் வளர்ச்சி அல்லது மாற்றம் நிர்வாகத்
தேவையை நிறைவு செய்தது. இதனால் தமிழ் உரைநடை
வளர்ச்சி விரைவு பெற்றது.

ஆங்கிலேய அரசு 1835 இல் அச்சகம் அமைக்க அனுமதி
வழங்கியது. இதுவரை பாதிரிமார்கள் மட்டுமே அச்சகம் நிறுவி
இருந்தனர். அரசின் புதிய ஆணையால் அச்சகம், அதை
ஒட்டிய தமிழ் உரைநடை இரண்டும் வளர்ந்தன. இந்நிலையில்,
1849 இல் ஆறுமுக நாவலர் சென்னையில் அச்சகம்
நிறுவினார். தமக்கெனத் தனி உரைநடையை வளர்த்தெடுத்தார்.

ஆங்கிலேய அரசு மேலும் ஒரு வகையில் தமிழ்
உரைநடை வளர்ச்சிக்குத் துணை புரிந்து உள்ளது. 1812 இல்
சென்னைக் கல்விச் சங்கம் (The College of Fort St.
George) அரசால் நிறுவப் பெற்றது. இதனால் நூல் நிலையம்,
புத்தக விற்பனை நிலையம், அச்சகம் ஆகிய துறைகள்
வளர்ந்தன. இதனால் தமிழ் உரைநடையும் வளர்ச்சி பெற்றது.

* சமயப் பிரச்சாரமும் உரைநடையும்

தத்துவ போதக சுவாமிகள், வீரமாமுனிவர்,
ஞானப்பிரகாச சுவாமிகள் ஆகிய மூவருமே கிறித்தவ
மதத்தைத் தமிழகத்தில் பரப்பினர். இந்தச் சமயம் பரப்பும்
முயற்சிக்காக அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டதுதான்
உரைநடை. அதிலும் மக்களின் பேச்சு வழக்கில் உரைநடையை
எழுதியதன் நோக்கம் சமயம் பரப்பும் முயற்சிதான் எனலாம்.

இதே போன்று ஆறுமுக நாவலரின் உரைநடைப்
படைப்புகளுக்கும் சமயம் பரப்புவதே நோக்கமாக இருந்தது.
பாதிரிமார்களுக்கு எதிராக நாவலர் பிரச்சாரம் செய்தார்; சைவ
சமயத்தைப் பரப்பினார். பேச்சு வழக்குக்கு எதிரான எளிய
செவ்விய தமிழ் உரைநடையைக் கட்டமைத்தார்.

ஆக, உரைநடை வளர்ச்சியில் மதப் பிரச்சாரம் முன்னிலை
வகித்தது எனலாம்.

தொடர்புடைய குறிப்புகள் @ 
https://www.facebook.com/note.php?note_id=406102279709 
https://www.facebook.com/note.php?note_id=405146539709
https://www.facebook.com/note.php?note_id=403681399709
https://www.facebook.com/note.php?note_id=403681279709

இயல், இசை, நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கியது தமிழ் மொழி. பண்டைய காலத்தில் மூன்று துறைகளுடன் ஆன்மிகமும் கலந்து தமிழ் மொழி வளர்க்கப்பட்டது. இலக்கியம், நாடகம் மூலமாக தமிழ் மொழி வளர்க்கப்பட்டாலும், பெரிய அளவில் ஆன்மிகம் தான், தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக
அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவராம், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் போன்ற பன்னிரு திருமுறைகள், மற்றும் கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், ஆகிய சைவ சமயத்தின் மூலமாக தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளது. அதே போல் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகிய வைணவ சமயத்தின் மூலம் தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு ஆன்மிகமும் தமிழ் மொழியும் பிரிக்க முடியாதவகையில் பின்னிப்பிணைந்திருக்கிறது. தமிழ் மொழி வளர்ச்சியில் ஆன்மிகத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்றும் என்றும் இருந்து வருவது மறுக்க முடியாத உண்மையாகும். 
ஆன்மிகத்தின் மூலம் தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள்:
பதினென் சித்தர்கள்:
அகத்தியர்,போகர், கோரக்கர், மச்சமுனி, சட்டைமுனி, திருமூலர், நந்தி, கொங்கணர், ராமதேவர், பதஞ்சலி, குதம்பை முனிவர், கரூவூரார், தன்வந்திரி, வாசமுனி, இடைக்காடர், கமலமுனி, சுந்தரானந்தர், பாம்பாட்டி சித்தர் 
மன்னர்கள்:
சேரன் செங்குட்டுவன், கரிகால் சோழன், ராஜசோழன், உக்கிர பாண்டின், அதிவீரராம பாண்டியன்.
புலவர்கள்:
நக்கீரர், அவ்வையார்,காரைக்கால் அம்மையார், 
பாணபத்திரர், சீத்தலை சாத்தனார், கம்பர், பாரதியார், திரிகூட ராசப்பக்கவிராயர், இரட்டைப்புலவர்களான இளஞ்சூரியர், முதுசூரியர், இளங்கோவடிகள், திரு.வி.க., ஆன்மிக வாதிகள்
பாம்பன் சுவாமிகள், முத்துக்குமார சுவாமிகள், குமரகுருபரர், சங்கரதாஸ் சுவாமிகள், வள்ளலார், கிருபானந்த வாரியார்.

No comments:

Post a Comment