Search This Blog

Monday, September 5, 2011

-"செருப்பு' (ஒரு வரலாற்றுப் பார்வை)


இந்திய நாட்டை ராமனது செருப்பு ஆண்டது என்பது அனைவரும் அறிந்த புராணச் செய்தி. ராமனது காலில் அணியப்பட்டதால் அச்செருப்புக்கு ஆளும் தகுதியை நம் புராண ஆசிரியர்கள் வழங்கியுள்ளார்கள். ஆனால் கல்லிலும், முள்ளிலும் அலைவதற்காக உழைக்கும் மக்கள் அணியும் செருப்பு இழிவானதாகக் கருதப்பட்டுள்ளது. சில சாதியினர் காலில் செருப்பணியக்கூட உரிமையற்றவர்களாக இருந்துள்ளனர். மேட்டிமை சாதியினரின் தெருக்களில் செருப்பணிந்து நடக்கஉரிமை மறுக்கப்பட்ட கிராமங்கள் இன்றும் கூட உள்ளன. நிலவுடமைக் கொடுமை மேலோங்கியிருந்த காலத்தில் தன் குடிசையின் முன்னால் ஆண்டையின் செருப்பு கிடந்தால், அவர் தன் வீட்டில் பெண்களுடன் சல்லாபித்துக் கொண்டு இருக்கிறார் என்று புரிந்து கொண்டு வீட்டிற்குள் நுழையாமல் அவர் வெளியே வரும்வரை காத்திருக்க வேண்டிய அவலம் கூட நிலவியது.

-"செருப்பு' (ஒரு வரலாற்றுப் பார்வை) என்ற நூலில் செ.ஜெயவீரதேவன்.


No comments:

Post a Comment