Search This Blog

Tuesday, May 3, 2011

அபூர்வத் தகவல்கள்


லைரே பறவ
லைரே பறவை
லைரே பறவை (Lyre birds) பல் குரலில் பாடும் சக்தி கொண்ட அதிசயமான பறவையினம். லைரே பறவை மிகவும் பிரமிக்கும் வகையில் தனது சூழலில் இருக்கக்கூடிய அனைத்து இசைகளையும் பல குரலில் (மிமிகிரி) செய்யும் ஆற்றல் படைத்தது. இந்தப் பறவையினம் ஸ்திரெலியாவின் கிழக்கு பகுதியில் காணப்படுகின்றது.  இந்தப் பறவைகள் மயிலின் தோகையினையும் குயிலின் உடலினை ஒத்தும் காணப்படுகின்றன. இந்தப் பறவை வெப்பப் பிரதேசங்களிலுள்ள ஈரவலைய அடர் காடுகளில் வாழ்கின்ற. இந்தப் பறவை முக்கிய உணவாக உக்கிய மரப் பாகங்களில் காணப்படும் புழுக்கள் மற்றும் பூச்சிகளை உண்கின்றது. இந்தப் பல் குரல் பாடும் சக்தி ஆண் லைரே பறவைக்கு மட்டுமே உள்ளது. இது தனது பெண் இனத்தினைக் கவருவதற்காக இந்த பல் குரல் விநோதம் செய்கிறது. இந்தப் பறவைக்கு வைத்திருக்கும் பெயரான லைரே (Lyre) என்பது ஒரு பழமையான இசைக்கருவி.
டைட்டன் ஆரம் மலர்
டைட்டன் ஆரம்
இந்தோனேசியாவின் சுமத்திரா காட்டுப் பகுதியில் உள்ள டைட்டன் ஆரம் (Titan Arum) தாவரம் உலகில் மிகப்பெரிய மலர்களை கொண்டுள்ளது. இந்த டைட்டன் ஆரம் தாவரம் தனி ஒரு மலரை மட்டுமே கொண்டிருக்கும். இதனை தாவரவியலில் Talipot palm  எனும் இன வகையில் சேர்த்துள்ளனர். இம்மலர் சராசரியாக 10 அடி (3 மீட்டர்) உயரம்,  மூன்று முதல் நான்கு அடி சுற்றளவு உடையதாக உள்ளது. இதன் வாசனை அழுகிய மீன் மணத்தை ஒத்ததாக இருக்கும். இந்தத் தாவரம் உலகிலுள்ள பல தாவரவியல் பூங்காக்களிலும் முக்கியம் கருதி வளர்க்கப்படுகின்றது. இந்த மலர் இராட்சத அளவில் உள்ள போதிலும் மற்றய சிறிய மலர்களில் நிகழக்கூடிய சிறிய பூச்சியினம் மூலமான மகரந்தச் சேர்க்கை மூலமாக மட்டுமே இனப்பெருக்கம் நடைபெறுகின்றது.
நீலதாமரை மலர்
நீலதாமரை
நீலதாமரை (Udumbara) மலர்கள் 3,000 வருடத்திற்கு ஒரு தடவை மலர்கின்றதாம். இந்து மதம், பெளத்த மதம் இரண்டும் இதனைப் புனித மலர்களாகப் போற்றி வருகின்றன.  மிக மிகச் சிறிய அளவுடைய இந்த மலர்கள் சந்தன வகையை ஒத்த நறுமணம் உடையவை. வெண் நிறம் கொண்ட இந்த நீலதாமரை மலர்கள் 1997 ம் வருடம் ஜூலை மாதத்தில் கொரிய நாட்டில் மலர்ந்திருக்க காணப்பட்டது. நீலதாமரை புத்தபிரான் அவதரித்து 3,024 வருடங்களுக்குப் பின்பு மலர்ந்திருப்பது நல்லசகுனம் என்று பெளத்த மதத்தினர் நம்புகின்றனர்.
சீஹொயா மரம்
பூமியில் இருக்கக்கூடிய தாவரங்களில் உயரத்திலும் பருமனிலும் மிகவும் பெரியது  சீஹொயா (Sequoia) எனும் மரம்தான். இத்தாவரத்தின் இனத்தினை ஒத்த ரெட்வூட் (Red Wood) எனும் மர வகையும் உலகின் மிக உயரமானதும் மிகவும் பிரமாண்டமானதுமாகக் காணப்படுகின்றன. இந்த மரங்கள் டைனஸோர் எனும் இராட்சத விலங்குகள் வாழ்ந்த காலத்திலிருந்து (200 மில்லியன் வருடங்கள் முன்பு) பூமியில் வாழும் தாவரமாக இருந்திருக்கின்றன என்பது ய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதர்கள் முதல் தாவரவியல் ஆராய்ச்சியாளர் என அனைவரிடத்திலும் பல வினாக்களையும் ஆச்சரியங்களையும் உருவாக்கி இருக்கும் இம்மரம் குறித்த மேலும் சில தகவல்கள்:
சீஹொயா மரம்
  • சீஹொயா (Sequoia) மரங்கள் 180 மில்லியன் வருட காலமாக பூமியில் காணப்படுகின்றன.
  • இந்த மரம் அதிகபட்சமாக 310 அடி உயரம் வரை வளர்கின்றன.
  • இம்மரத்தின் அடிப்பகுதி விட்டம் 45 அட ிவரை காணப்படுகின்றது. இதனால் இம் மரத்தினைக் குடைந்து போக்குவரத்துக்கான பாதைகளை குகை போல் சில இடங்களில் உருவாக்கியுள்ளனர். பண்டைய காலத்தில் இம்மரத்தின் உட்பகுதியில் மனிதன் குடியிருப்பாகப் பயன்படுத்தியிருப்பதும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
  • இம்மரம் விதை மூலமாகத் தனது இனவிருத்தியைச் செய்கின்றது. இந்த இராட்சத மரத்தின் இலைகளும் விதைகளும் கால் (1/4) அங்குலத்திலும் மிக சிறியதாக உள்ளது.
  • இம்மரத்தின் வயது 3,200 வருடங்களுக்கும் அதிகமாக உள்ளது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • நல்ல முதிர்ச்சியான ஹொயாவின் வேர்கள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகின்றது.
  • முற்றிய மரத்தின் வெளிப்பட்டை மட்டும் இரண்டு அடியிலும் மேலான தடிப்புடையது.
  • இந்த மரங்கள் தற்போது வடக்கு அமெரிக்காவில் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த மரங்கள் ஐரோப்பாவிலும் வடக்கு அமெரிக்காவிலும் 135 மில்லியன் வருடம் முன்பு அதிக அளவில் காணப்பட்ட போதிலும் இன்று வடக்கு அமெரிக்காவில் மட்டுமே அதிகமாக ள்ளன.
-கணேஷ் அரவிந்த்.

No comments:

Post a Comment