Search This Blog

Friday, May 6, 2011

பிரிட்டனில் அதிகரித்து வரும் பேஸ்புக் குற்றங்கள்


பிரிட்டனில் அதிகரித்து வரும் பேஸ்புக் குற்றங்கள்

பிரிட்டனில் பேஸ்புக்கைப் பாவித்து இடம்பெறும் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.பாலியல், மிரட்டல், கொள்ளை, கொலை என எல்லா வகையான குற்றச் செயல்களும் பேஸ்புக் வழியாக இடம்பெறுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
பேஸ்புக் பல குடும்பப் பிரச்சினைகளுக்கும், வாழ்க்கைப் பங்காளிகளுக்கிடையில் கருத்து மோதல்களுக்கும் கூட காரணமாகியுள்ளது. அதே போல் அது பல பிரச்சினைகளைத் தீர்த்தும் வைத்துள்ளது.
இந்த சமூக இணையத்தளத்தைப் பயன்படுத்தி சில குற்றவாளிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். சிலர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களையும் பேஸ்புக் வழியாகக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
எவ்வாறாயினும் கடந்தாண்டில் பேஸ்புக் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாகவே மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. சென்ற ஆண்டில் இடம்பெற்ற குற்றச்செயல்களில் 6200 குற்றச் செயல்கள் பேஸ்புக் வழியாக இடம்பெற்றவை.
ஒரு மணிநேரத்துக்கு ஒன்று என்ற ரீதியில் பேஸ்புக் குற்றங்கள் அதிகரித்துள்ளன. 14 வயதான ஒரு பெண் பேஸ்புக் வழியாக தொடர்பான ஒருவருடன் உடல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
இதுபோல் இன்னும் பல சம்பவங்களும் பேஸ்புக் வழியாக இடம்பெற்றுள்ளன. பிரிட்டனின் பல பாகங்களிலும் பேஸ்புக் வழியான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளமை பதிவாகியுள்ளது. சமூக இணையத்தளங்கள் அளவுக்கு அதிகமான வெளிப்படைத் தன்மை கொண்டிருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment