பாதிக்கப்பட்ட இதயத்தில் திசுக்களை சரிசெய்து மீண்டும் துடிப்புடன் செயல்பட வைப்பதற்கான புதிய செல் தெரபி முறையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த முறையின் மூலம் திசுக்கள் தாங்களாகவே சரி செய்து கொண்டு செயல்படுகின்றன. இந்த ஆய்வு குறித்த கட்டுரை நேஷனல் அகாடமி ஆப் சயின்சில் வெளியிடப்பட்டுள்ளது. கொலம்பியா பல்கலைகழகத்தின் ப்யூ பவுண்டேஷன்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங்கின் உயிரி மருத்துவ துறை பேராசிரியர் கார்டெனா வுன்ஜிக் நோவகோவிக் தலைமையில் நடந்த ஆய்வில் இந்த புதிய செல் தெரபி முறை கண்டறியப்பட்டுள்ளது. மாரடைப்பு காரணமாக இதயம் மயோ கார்டியஸ் இன்பார்க்கஷன் என்ற பாதிப்பு நிலைக்கு ஆளாகிறது. இந்த பாதிப்பை சரி செய்ய சேதம் அடைந்த திசுக்கள் பகுதியில் ரத்த ஓட்டம் உச்ச நிலையில் இருக்கும் வகையில் மனித சீரமைப்பு செல்களை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். புதிய மருத்துவ தொழில்நுட்பம் நல்ல பலனை அளித்துள்ளது என டொக்டர் வுன்ஜக் நோவகோவிக் தெரிவித்தார். இந்த புதிய முறையின் மூலம் பாதிப்படைந்த செல்களை தாங்களாகவே சேதத்தை சரிசெய்து கொண்டு மீண்டும் சிறப்பாக செயல்படுகின்றன. இதனால் இதய ரத்த ஓட்டமும் தடையின்றி நடைபெறும். இதய நோய்களும் தவிர்க்கப்படுகின்றன. இதய தசை கட்டமைப்பு மற்றும் இதர இதய சீரமைப்பு ஆராய்ச்சிகளுக்கு மனித ஆதாரச் செல்லின் இதர வகைகளை பயன்படுத்தப் போவதாகவும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். ஆதாரச் செல்கள் மூலம் பாதிக்கப்பட்ட இதய ரத்த குழாய்கள் நன்கு வளர்கின்றன. புரதமும் உரிய அளவில் உற்பத்தி ஆகிறது. இதன் மூலம் இதய தசை பகுதியில் சேதமடைந்த பூர்விக திசு தன்னை சரிசெய்து கொண்டு இயல்பு நிலைக்கு திரும்புகிறது. |
Search This Blog
Wednesday, May 11, 2011
இதய திசுக்கள் பாதிப்படைந்தால் தானாகவே சரிசெய்து கொள்ளும் முறை: விஞ்ஞானிகள் சாதனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment