உயில் எழுதுவதில் குழப்பம்.
முல்லாவின் நண்பர் ஒருவர் பெரிய பணக்காரர். அவர் வீட்டுக்கு முல்லா செல்லும் போதெல்லாம் பணக்காரர் தமது திரண்ட சொத்துக்களை தம் மக்களுக்கு எவ்வாறு பிரித்து உயில் எழுதி வைப்பது என்பது பற்றியே அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்.
உயிலை எழுதுவதில் அவருக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் தம்முடைய செல்வச் செருக்கினை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே, யாரைக் கண்டாலும் உயிலைப் பற்றிப் பேச்செடுத்து மணிக்கணக்கில் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார். அவருடைய பணச் செருக்கு முல்லாவுக்கு எரிச்சலாக இருக்கும்.

ஒருநாள் செல்வந்தர் முல்லாவைத் தேடிக் கொண்டு முல்லாவின் வீட்டுக்கு வந்தார். அப்போது முல்லா ஒரு தாளில் ஏதோ தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டார் அந்த செல்வந்தர்.
உடனே, "இவ்வளவு தீவிர சிந்தனையுடன் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்?" என்று கேட்டார்.
"நான் என் உயிலைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன. இந்த உயிலைத் தயாரிப்பதில் ஒரே குழப்பம் சிக்கல் " என்றார் முல்லா.

"நீரும் உயில் எழுதுகிறீரா? உயில் எழுதும் அளவுக்கு உம்மிடம் சொத்தோ பணமோ ஏது? ஒன்றும் இல்லாத போது குழப்பமும் சிக்கலும் எங்கிருந்து வந்தது?" என்று செல்வந்தர் வியப்புடன் கேட்டார்.
"சொத்தோ, செல்வமோ இல்லாததால்தான் இந்த உயில் எழுதுவதில் சிக்கல். இல்லாத சொத்து அல்லது செல்வத்தை எவ்வாறு என் மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பது என்றுதான் எனக்கு சிறிதும் விளங்கவில்லை" என்று கூறியபடி சிரித்தார் முல்லா.
தம்மை மட்டம் தட்டவே முல்லா இவ்வாறு கூறுகிறார் என்று உணர்ந்த செல்வந்தர் வெட்கத்துடன் தலை குனிந்தார். .
"சொத்தோ, செல்வமோ இல்லாததால்தான் இந்த உயில் எழுதுவதில் சிக்கல். இல்லாத சொத்து அல்லது செல்வத்தை எவ்வாறு என் மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பது என்றுதான் எனக்கு சிறிதும் விளங்கவில்லை" என்று கூறியபடி சிரித்தார் முல்லா.
No comments:
Post a Comment