Search This Blog

Friday, May 20, 2011

பெரியார்

தான் எழுதிய புத்தகங்களின் விற்பனையில் வரும் லாபத்தில் கட்சியை நடத்திய தலைவர் அவர். கூட்டத்தில் பேச, உடன் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்ள என்று ஒவ்வொரு விஷயத்திற்கும் தனித்தனியே நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் உண்டு.

இதில் எனக்கு முழு உடன்பாடுதான். தலைவனோடும், கட்சியின் கொள்கையோடும் ஒன்றிப் போயிருக்கும் ஒரு தொண்டன் தரும் அன்பளிப்பில்தான் கட்சிகள் நடத்தப் படவேண்டும்.

தன் குழந்தைக்குப் பெயர் வைக்க, உரிய கட்டணமான ஒரு ரூபாயைக் கொடுத்து விட்டு அந்தத் தலைவர் முன் பணிவாக நின்றார் ஒரு தொண்டர். அதை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டுவிட்டு, " இன்னும் ஒரு ரூபாய் கொடு, ஒரு நல்ல பெயர் வைக்கிறேன் ! " என்றார் தலைவர். தொண்டரும் பணிந்தார்.

வைக்கப்பட்டப் பெயர் : காமராஜ் !
வைத்தவர் : பெரியார் !

No comments:

Post a Comment