வணங்கத் தக்கவர்கள் - தாய், தந்தை
வந்தால் போகாதது - புகழ், பழி,
போனால் வராதது - மானம், உயிர்
தானாக வருவது - இளமை, முதுமை
நம்முடன் வருவது - பாவம், புண்ணியம்
அடக்க முடியாதது - ஆசை, துக்கம்
தவிர்க்க முடியாதது - பசி, தாகம்
நம்மால் பிரிக்க முடியாதது - பந்தம், பாசம்
அழிவைத் தருவது - பொறாமை, கோபம்
அனைவருக்கும் சமமானது - பிறப்பு, இறப்பு
கடைத்தேற வழி - உண்மை, உழைப்பு
ஒருவன் கெடுவது - பொய்சாட்சி
வருவதும் போவதும் - இன்பம், துன்பம்
மிக நல்ல நாள் - இன்று
மிகப்பெரிய வெகுமதி - மன்னிப்பு
மிகவும் வேண்டாதது - வெறுப்பு
மிகப்பெரிய தேவை - சமயோஜித புத்தி
மிகக் கொடிய நோய் - பேராசை
மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
கீழ்த்தரமான விசயம் - பொறாமை
நம்பக்கூடாதது - வதந்தி
ஆபத்தை விளைவிப்பது - அதிகப் பேச்சு
செய்யக்கூடாதது - தவறுகள்
செய்ய வேண்டியது - உதவி
விலக்க வேண்டியது - விவாதம்
உயர்வுக்கு வழி - உழைப்பு
நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
Search This Blog
Thursday, May 26, 2011
நழுவ விடக் கூடாதது எது?
தொகுப்பு: முனைவர் சு. செ. பொன் சக்தி கலா, கடையம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment