உங்கள் கணணியில் வைரஸ் நுழைந்து விட்டதை அறிந்து கொள்ள |
ஆரம்ப காலத்தில் பி.சி.ஸ்டோன் என்று ஒரு வைரஸ் டாஸ் இயக்கத்தில் வந்தது. அந்த வைரஸ் உள்ளே புகுந்து இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் கணணி கற்களால் தாக்கப்பட்டுள்ளது என்று திரையில் காட்டும்.சில வேளைகளில் நாம் வைரஸ் இணைந்த அல்லது வைரஸால் பாதிக்கப்பட்ட கோப்பு ஒன்றை இயக்குவோம். வைரஸ் கணணி உள்ளே புகுந்து கொள்ளும். ஆனால் அப்போது நமக்கு எதுவும் தெரியாது. ஆனால் அதன் பின் கணணி இயக்கத்தில் பல மாறுதல்கள் தெரியும். அதனைக் கொண்டு நம் கணணியில் வைரஸ் வந்துள்ளது என அறியலாம். அத்தகைய மாறுதல்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். 1. முதலில் வழக்கத்திற்கு மாறாக உங்கள் கணணி மெதுவாக இயங்கும். 2. ஒரு சில கட்டளைகளுக்குப் பணிந்து விட்டு பின் கணணி இயங்காமல் அப்படியே உறைந்து போய் நிற்கும். இந்நிலையில் என்ன நடக்கிறது என்ற பிழைச் செய்தி கிடைக்காது. ஒரு சில வேளைகளில் இந்த பிழைச் செய்தி கிடைக்கலாம். 3. உங்கள் கணணி கிராஷ் ஆகி உடனே தானே ரீ பூட் ஆகும். இது ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறை தானே நடக்கும். ஏனென்றால் உங்கள் கணணியின் பாதுகாப்பு சிஸ்டத்தினை கணணி உள்ளே வந்துள்ள வைரஸ் உடைக்க முயற்சிக்கிறது. அப்போது விண்டோஸ் தானாக ரீபூட் செய்கிறது. ஆனால் அவ்வாறு ரீபூட் ஆன பின்னரும் அது முடங்கிப் போய் நிற்கும். 4. வன்தட்டில் உள்ள தகவல்கள் உங்களுக்குப் பிரச்சினையைத் தரலாம் அல்லது வன்தட்டை அணுக முடியாமல் போகலாம். 5. திடீர் திடீர் என தேவையற்ற பிழைச் செய்தி வரலாம். உங்கள் கணணியை ஸ்கேன் செய்திடுங்கள். உங்கள் கணணியில் வைரஸ் உள்ளது. இலவசமாக ஸ்கேனிங் செய்து தருகிறோம் என்று ரிமோட் கணணியில் இருந்து செய்தி வரும். இதன் மூலம் வைரஸை அனுப்பி உங்கள் கணணியைத் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேறு ஒருவர் தன் கணணி மூலம் முயற்சிக்கிறார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். 6. கணணியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருளிலும் இ.எக்ஸ்.இ கோப்புகள் அங்கும் இங்குமாய் பல நகல்களில் இருக்கும். ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஷார்ட் கட் ஐகான்களில் கிளிக் செய்தால் அதற்கான புரோகிராம் இயங்காது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளெல்லாம் பொதுவாக தற்போது உலா வரும் வைரஸ்களினால் ஏற்படும் மாற்றங்கள். இன்னும் பல வகைகளில் வைரஸ் பாதிப்பினை கணணியில் அறியலாம். வழக்கமான வகையில் இல்லாமல் கணணி இயக்கத்தில் இணைய இணைப்பில் மாறுதல் இருந்தால் உடனே எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது. முதலில் உங்கள் தகவல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்துவிடுங்கள். ஆண்டி வைரஸ் தொகுப்பினை அவ்வப் போது அப்டேட் செய்திடுங்கள். நேரம் கிடைக்கும் போது மாதம் ஒரு முறையாவது ஆண்டி வைரஸ் தொகுப்பினை இயக்கி அனைத்து டிரைவ்களையும் சோதித்து விடுங்கள். |
Search This Blog
Friday, May 6, 2011
உங்கள் கணணியில் வைரஸ் நுழைந்து விட்டதை அறிந்து கொள்ள
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment