Search This Blog

Saturday, July 8, 2017

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் தமிழில்



🍀"ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது, "வறுமை விலக்கி எல்லா வளங்களையும் தரக் கூடியது."🍀

ஸ்ரீ ஆதிசங்கரர் பிட்சைக்குப் போகும் போது ஒரு ஏழைப் பெண்மணியின் வீட்டின் முன் நின்று பிட்சை கேட்டார். வறுமை தாண்டவமாடிக் கொண்டிருந்தது அந்த வீட்டில். அப்படியிருந்தும், 🍀அந்த வீட்டில் ஒரு வாடிய நெல்லிக்காய் மட்டுமே உணவுப் பொருளாக இருந்தது! பிட்சை கேட்கும் பிள்ளைக்கு இதைத் தவிர கொடுக்க ஏதுமில்லையே என்று பெரிதும் மனம் குமைந்தாள் வீட்டுக்காரப் பெண்மணி. 🍀ஆனாலும், மனம் குறுகி அந்த தெய்வக் குழந்தைக்கு அந்த நெல்லிக்காயை பிட்சையிட்டாள். அடுத்த வேளை உணவுக்கு எந்தப் பொருளும் இல்லாத வறுமையிலும், தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்காயைத் தந்த அந்தப் பெண்மணியின் தாய்மைக் கனிவைக் கண்டு பெரிதும் நெகிழ்ந்தார் ஆதிசங்கரர்.🍀
- 🍀மகாலட்சுமியிடம் அப்பெண்ணுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருளுமாறு உள்ளம் உருகப் பிரார்த்தித்தார். அதைக் கேட்ட திருமகள், ‘‘இப்பெண்மணி, அவளது முந்தைய ஜென்மத்தில் குசேலரின் மனைவியாக வாழ்ந்தவள். 🍀கஷ்டங்கள் அனைத்தும் கண்ணன் அருளால் நீங்கி குபேர வாழ்க்கையை மேற்கொண்டபோது, தன் பழைய ஏழ்மைச் சம்பவங்களை மறந்து செல்வச் செருக்கால் ஒருவருக்கும் உதவி செய்யாமல் இருந்தாள். அந்தப் பாவமே இன்று அவளை தாத்ரியமாக வாட்டுகிறது’’ என்றாள்.🍀
🍀‘‘அம்மா! எது எப்படியிருந்தாலும் நாளை பாரணைக்கு வைத்திருந்த ஒரே ஒரு வாடல் நெல்லிக்கனியைக்கூட எனக்கு பிட்சையிட்டதால் அவளது அனைத்துப் பூர்வ ஜன்மப் பாவங்களும் நீங்கி விட்டன. 🍀தங்கள் கடைக்கண் பார்வை இந்தப் பெண்மணி மீது விழவேண்டும்’’ என்று கூறி கனகதாரா ஸ்தோத்திரத்தால் திருமகளைத் துதித்தார். 🍀அதனால் மனமிரங்கிய திருமகள் அந்த பெண்மணியின் இல்லத்தில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிய வைத்தாள். இந்தக் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் தன் நல்லருள் கிடைக்கும் என உருதி மொழிந்தார்.🍀

No comments:

Post a Comment