மதிப்பிற்குரிய முஸ்லிம் பெரியவர் !
சாய் பாபா பற்றி பல்வேறு தவறான தகவல்களால் அவரை நிந்திக்கும் ஒரு சிலர் இருக்கின்றனர் . உண்மையில் அவர் யார் என்பதை ஆராய்ந்தால் பிரமிக்க வைக்கும் தகவல்கள் கிடைக்கின்றன . அதில் ஒரு சில விசயங்களை இங்கு கொடுக்கிறேன் .
சாய்பாபாவின் பிறப்பு யாரும் அறியாதது .பதினாறு இருக்கலாம் என்று உத்தேசமாக சொல்லகூடிய வயதில் ஒரு சிறுவன் மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷ்ரிடி என்ற ஊரின் எல்லையில் உள்ள வேப்ப மரத்தடியில் யோக நிலையில் கண்மூடி அமர்ந்திருப்பதை அந்த ஊரில் உள்ள மனிதர்கள் பார்த்திருக்கிறார்கள் . எந்த வித அசைவும் இல்லாமல் வருட க்கணக்கில் அச்சிறுவன் தவக்கோலத்தில் அமர்ந்திருக்க , அது பின்தங்கிய கிராமம் என்பதால் அந்த ஊரின் மக்களுக்கு அச்சிறுவன் வித்தியாசமாக தோன்றுகிறான் . அவனை நெருங்கி பேசினாலும் கூட அவன் கண் திறக்கவில்லை . காற்று மழை குளிர் எதையும் பொருட் படுத்தாது , உணவு கூட எடுத்து கொள்ளாமல் அசைவின்றி இருப்பது கண்டு ஊர் மக்கள் ஆச்சரியம் கொண்டு அவன் ஏதோ தெய்வ அவதாரம் என்று அச்சிறுவனுக்கு முன் உணவினை வைக்கிறார்கள் . அதைஅவன் தொடக்கூட இல்லை .அந்தக் காலத்தில் அந்த எல்லையை சுற்றி காடு இருந்தது . பல துஷ்ட மிருகங்கள் வரலாம் என்றாலும் அது குறித்த எந்த வித அச்சத்தையும் வெளிப்படுத்தாது அச்சிறுவன் வருடக் கணக்கில் தவத்தில் இருந்தது ஒரு சிலருக்கு வியப்பாக இருந்தாலும், அவனுடைய உடையமைப்பு காணும் போது அவன் முஸ்லீம் போன்ற தோற்றம் இருந்ததால் , அவ்வூரில் இருந்த இந்துக்கள் இவன் யாரோ முஸ்லிம் சாமியார் இவனை துரத்த வேண்டும் என்று தவக்கோலத்தில் இருக்கும் சிறுவனை கற்களால் அடிக்கத் துவங்குகின்றனர் .. ஒரு வருடமாக தவத்தில் இருப்பவன் சாதாரண மனிதன் அல்ல என்று அவனை துன்புறுத்த துவங்கும் போது அவன் எதுவும் மறுப்பு சொல்லாமல் கண்ணை திறந்து எல்லோரையும் பார்த்து விட்டு அந்த ஊரை விட்டு போய் விடுகிறான் .
மீண்டும் 1858 ல் அச்சிறுவன் வளர்ந்த வாலிபனாக ஷ்ர்டி க்கு திரும்பி வருகிறான். அப்பொழுது ஷீரடியில் உள்ள கண்டோபா ஆலயத்திற்கு வருகிறார் .அந்த ஆலய குருக்கள் " ஆவோ சாய் " என்று அவரை அழைக்கிறார் . சாய் என்பதற்கு " ஏழை பக்கிரி " என்பது பொருள் . அப்பொழுது sai அவர்களின் உடை ஒரு "சூபி " சாது வினுடைய உடை போலவே இருந்ததால் அப்படி அழைக்கப் பட்டார். வருடங்கள் கடந்து வயோதிகம் வரும்போது கிராம மக்கள் அவரை " ஆன்மிக பெரியவர் " என்ற அர்த்தம் வருமாறு " சாய் பாபா " என்றழைத்தனர் .

வாழ்நாள் முழுவதும் ,""Sabka Malik Ek" ("One God governs all")," என்று சொல்லிக்கொண்டே இருந்தார். திருக்குர்ரானை தினமும் தபேலா இசையுடன் படித்து மக்களுக்கு சொல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார் . தான் தங்கியிருந்த மசூதியில் இந்துக்கள் பூக்களால் அலங்காரம் செய்து ஹிந்து வழக்கப்படி ஆராதனை செய்வதை வரவேற்றார். வாழும் முஸ்லீமாக இருந்தாலும் , ஹிந்து தத்துவங்களைப் பேசுவதுமாக இருந்த பாபா தன்னை நோக்கி ஏதாவது குறை என்று வந்தால் அவர்களுக்கு , தன் இருப்பிடத்தில் என்றும் எரிந்து கொண்டு இருக்கும் விறகிலிருந்து வரும் சாம்பலை கொடுப்பது வழக்கம் .
Zoroastrianism என்ற பார்சிய மதத்தை சார்ந்தவர்கள் எரியும் நெருப்பை கடவுளாக வணங்குவர் . பாபாவும் தன் வாழ்நாள் முழுவதும் தனக்கு எதிராக தானே சென்று காடுகளில் விறகு பொறுக்கி வந்து நெருப்பை உருவாக்கி அதை வழிபடுவதை வழக்கமாக வைத்து இருந்தார். அவர் இறக்கும் வரையிலும் இந்த நெருப்பு அணையவில்லை . பாபா என்ற மனிதர் பிரிட்டிஷ் இந்திய அதிகாரத்தில் அவர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியாக மதங்களை கையில் எடுத்து ஆங்காங்கே மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தினார்கள் . அந்த சமயங்களில் ஷீரடியில் மட்டும் எங்குமே மதக்கலவரம் ஏற்படாமல் பாபா ஆட்கொண்டார் . இந்தியாவின் மிகப்பெரிய கொடிய தாது வருடப் பஞ்சக்காலங்களில் , ஷ்ரிடி பாபா தானே உணவு சமைத்து அக்கிராம மக்களுக்கு வழங்கி உள்ளார். தன்னைத் தேடி வரும் பணக்காரர்களிடம் கறாராக காசு, உணவு தானியங்களை வாங்கி அதை தானே சமைத்து அனைத்து உயிர்களுக்கும் ஒரே உணவை வழங்கி உள்ளார். தன் வாழ்நாளில் இரண்டு தடவை உடலை விட்டு 72 மணி நேரம் வெளியேறி பின் மீண்டும் உடலுக்கு திரும்பி உள்ளார். இது யோக நிலையில் கரை தேர்ந்தவர்கள் மட்டுமே செய்யக் கூடிய ஒன்று .
அன்பான முஸ்லிம் பெரியவரான பாபா , குர்ரான் சொன்ன அத்தனை விசயங்களையும் தன் வாழ்நாளில் கடைப்பிடித்து வாழ்ந்தவர் . அல்லா மாலிக் என்று அல்லாவின் பெயர் சொல்லி வாழ்ந்தவர் . அனைத்து மதங்களும் ஒன்றே. இறைவன் ஒருவனே .. அவனே பெரியவன் " என்று சொன்னவர். இவருடைய தத்துவங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ..." உன்னைத் தேடி வரும் ஒரு உயிர் ..அது இறைவனால் அனுப்ப பட்டது . அதனுடைய தேவைகளை நீ பூர்த்தி செய் . முடியாவிட்டால் கோபபட்டு துரத்தாதே .. அது இறைவனை நிந்திப்பதாகும் . யாரும் யாரையும் எந்த வித முன் காரணமும் இல்லாமல் சந்திப்பதேயில்லை . யாருக்கு கொடுத்தாலும் அது இறைவனுக்கு செய்வது . இறைவன் உனக்கு அதன் பலனை இரண்டு மடங்காக கொடுப்பான். " என்ற விசயம்தான் . இன்றைக்கு முகநூலில் என்னிடம் மிக நெருக்கமான நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கும் எனக்கும் கூட ஏதோ முன் ஜென்ம தொடர்பு இருந்திருக்குமோ என்னமோ ..? அல்லா மாலிக் .சாய்பாபா என்ற மனிதர் வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.அவர் இறந்த பிறகு அவருடன் இருந்தவர்களை துரத்திவிட்டு ஹிந்துக்கள் ஷ்ரடி கோவிலை கட்டி விட்டார்கள்.அது மசூதி என்பதால்தான் பாபா சிலையின் காலடியில் சமாதி இருக்கும்.தயவு செய்து அன்றைய காலத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட ஒருவரை சரியாக புரிந்து கொள்ளுங்கள். அவரை கடவுளாக்கி மூட நம்பிக்கைகளின் மொத்த இருப்பிடமாக மாற்றியது சில பிராமணர்கள். அவர்களின் பெயரும் சத்சரிதத்தி ல் கூறப்பட்டுள்ளது.பாபா வரலாறு கூட யார் யாரோ எழுதிய துதான்.இன்றைக்கும் அங்குள்ள வயது முதிர்ந்தவர்கள் தெளிவாக அவர் விவரங்களை கூறுகிறார்கள்.1917ல்தான் பாபா மரணமடைந்தார்.

No comments:
Post a Comment