Search This Blog

Wednesday, April 12, 2017

அழிந்து போன புகைப்படங்களை பத்திரமாக மீட்பது எப்படி தெரியுமா?

Android ஸ்மார்ட்போன்களில் தவறுதலாக அழிந்து போன புகைப்படங்களை பத்திரமாக மீட்பது (ரீஸ்டோர் செய்வது) எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.
Android ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று டேட்டா சேமிப்பு தான் எனலாம்.
புகைப்படம், வீடியோ, என பல்வேறு தரவுகளை தினசரி அடிப்படையில் ஸ்மார்ட்போனில் சேமித்து வரும் போது திடீரென அவை காணாமல் போயிருக்கும்.
தகவல்கள் எப்படி காணால் போனது என்பதே நினைவில் இல்லாத நிலையில், அவற்றை எப்படி மீட்க வேண்டும் என பற்றி இங்கு பார்ப்போம்.
குறிப்பு: பின்வரும் வழிமுறைகளை பின்பற்றும் முன் உங்களது ஸ்மார்ட்போன் அல்லது புகைப்படங்கள் காணாமல் போன மெமரி கார்டினுள் மீண்டும் தரவுகளை சேமிக்க வேண்டாம்.
இவ்வாறு செய்தால் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது கடினமாகி விடும்.
சில சமயங்களில் அவற்றை மீட்க முடியாத நிலை கூட ஏற்படலாம்.

மென்பொருள் டவுன்லோடு:
ஸ்மார்ட்போனில் அழிந்து போன புகைப்படங்களை மீட்க உங்களது கணினியில் Android டேட்டா ரெக்கவரி (Android Data Recovery) என்ற மென்பொருள் அவசியம் தேவை.
முதலில் இந்த மென்பொருளை டவுன்லோடு செய்து கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
அடுத்து கணினியில் இன்ஸ்டால் செய்த மென்பொருளை இயக்கி டேட்டா ரெக்கவரி (Data Recovery) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும், இனி உங்களது Android ஸ்மார்ட்போனை கணினியுடன் இணைக்கலாம்.
குறிப்பு: ஒருவேளை கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்ட மென்பொருள் உங்களின் ஸ்மார்ட்போனை டிடெக்ட் (Detect) செய்யவில்லை எனில், கணினியில் டிரைவர் இன்ஸ்டால் செய்து, போனை ரீஸ்டார்ட் செய்து பின் மென்பொருளுடன் இணைக்கலாம்.
USB debugging:
மென்பொருள் உங்களது ஸ்மார்ட்போனை டிடெக்ட் செய்து விட்டால் நேரடியாக அடுத்த வழிமுறையினை பின்பற்றலாம். இல்லையெனில் உங்களது சாதனத்தில் யுஎஸ்பி டீபக்கிங் (USB debugging) செய்ய வேண்டும்.
* இதற்கு ஸ்மார்ட்போனின் “Settings” < “About Phone” < “Build number” ஆப்ஷனை “You are under developer mode” என்ற வார்த்தை திரையில் தெரியும் வரை கிளிக் செய்ய வேண்டும்.
* அடுத்து< மீண்டும் “Settings” < “Developer options” < “USB debugging” ஒப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.
குறிப்பு: மேலே வழங்கப்பட்ட யுஎஸ்பி டீபக்கிங் செய்யும் வழிமுறை எண்ட்ராய்டு 4.2 மற்றும் அதற்கும் மேல் இருக்கும் அப்டேட்டில் மட்டுமே வேலை செய்யும்.

Android ஸ்மார்ட்போனினை ஸ்கேன் செய்யவும்:
அடுத்த திரையில் “Gallery”, ஆப்ஷன் சென்று “Next” கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் மென்பொருள் உங்களது சாதனத்தை புரிந்து கொள்ளும்.
இனி “Standard mode” அல்லது “Advanced mode” ஆப்ஷன்களை கிளிக் செய்து சாதனத்தை ஸ்கேன் செய்ய உங்களுக்கு ஏற்ற மோடினை தேர்வு செய்யலாம்.
குறிப்பு: இந்த வழிமுறையை துவங்கும் முன் உங்களது சாதனத்தின் பேட்டரி அளவு 20%-க்கும் அதிகமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இனி உங்களது சாதனத்தை ஸ்கேன் செய்ய துவங்கலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் புகைப்படங்கள், மெசேஜ்கள், கென்டெக் மற்றும் வீடியோக்களையும் மீட்க முடியும்.
இதன் பின் உங்களது சாதனத்தில் “allow” ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
இனி கணினி திரையில் உங்களது அழிக்கப்பட்ட டேட்டா ஸ்கேன் செய்யப்படுவதை பார்க்க முடியும்.
பிரீவியூ மற்றும் ரீஸ்டோர்:
ஸ்கேன் செய்து முடிந்த பின் உங்களது சாதனத்தில் அழிந்து போயிருந்த புகைப்படங்களை திரையில் பார்க்க முடியும்.
அடுத்து திரையில் தெரியும் ரெக்கவர் “Recover” பட்டனை கிளிக் செய்து அவற்றை கணினியில் சேமித்து கொள்ளலாம்.
புகைப்படம்: .android-recovery-transfer.com

No comments:

Post a Comment