Search This Blog

Wednesday, August 26, 2015

ஈழத்து படைப்பாளி மாதவனை வாழ்த்துவோம்



சமீப காலமாக நான் சந்திக்கும் நபர்கள் பெருமை தொனிக்க சொல்வது , நான் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்றேன் . அல்லது short film பண்றேன் . இப்படி சொல்பவர்களுக்கு என் பதிலாக "ஓ " என்று சொல்லி கடந்து போய் விடுவேன் . அதேபோல் என் சமீபத்திய இலங்கை பயணத்தில் மாதவன் என்ற ஒரு ஈழ இளைஞனை சந்தித்தேன் . அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்த வசந்தம் வானொலியின் செபஸ்டின் கூறியது , " "திறமைசாலி , குறும்பட இயக்குனர் "என்று . மாதவனிடம் குறும்படத்தில் "என்ன எதிர்காலம் இருக்கிறது ? என்று கேட்டேன் . அவர் இதுவரை 8 குறும்படங்களை இயக்கி உள்ளதாகவும் , முதலில் சிரமமாக இருந்தது என்னுடைய "அப்பால் " என்ற குறும்படத்திற்கு பிறகு இரு மிகபெரிய நிறுவனங்கள் அவருக்கு தயாரிப்பு முதலை கொடுக்க முன்வருவதாகவும் அதனால் இப்பொழுது சர்வ தேச தர வரிசை குறும்படங்களை தான் இயக்கி வருவதாகவும் குறிப்பிட்டார் .வியப்பாக இருந்தது . அவருடைய "அப்பால்" பார்த்தேன் . நான் இரண்டு மணி நேரம் சொன்ன நர்த்தகி திரைப்பட கதையை சில நிமிடங்களில் அழகுற சொல்லியிருக்கிறார் . நேர்த்தியான ஒளிப்பதிவு , அருமையான கருத்தாக்கம் .. எத்தனை வலிகள் , வேதனைகள் ,இருண்டு கிடக்கும் வாழ்க்கையில் எங்காவது வெளிச்சம் தெரிகிறதா என்று தேடும் வாழ்வின் இடையில் இப்படியொரு அருமையான சிந்தனைகளுடன், சாதிக்கும் வெறியுடன் ஓடிக்கொண்டு இருக்கும் இந்த ஈழத்து இளைஞன் மேல் எனக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டது . செயல்வீரர்கள் என்றும் இல்லை என்று சொல்லாது இருப்பதிலேயே தங்கள் சாதனைகளை புரிவார்கள் . ஈழத்தில் தமிழ் திரையுலகு அத்தனை வலுவாக இல்லை . ஆனால் அதன் செம்மைபடுத்தும் முயற்சியில் முதல் கல்லை வைப்பவர் மாதவனாக இருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை . மாதவன் என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். "இலங்கையில் உங்கள் நர்த்தகி திரைப்படம் பார்த்தேன் . அது என்னை மிகவும் பாதித்தது . உங்களுடன் பணிபுரிய வேண்டும் என்று ஆவல் பிறந்தது . எனக்கு உங்கள் அடுத்த திரைப்படத்தில் பணிபுரிய வாய்ப்பு கொடுப்பீர்களா என்று . பல ஆர்வமுள்ள இளைர்கள் இப்படி என்னிடம் கேட்பதுண்டு . அவர்களுக்கு என் புன்னகையை தான் பதிலாக கொடுப்பேன் . இன்று அப்பால் பார்த்ததும் முடிவு செய்து விட்டேன் . மாதவன் என் அடுத்த திரைப்படத்தில் உதவியாளராக பணிபுரிவார் .வாழ்த்துக்கள் மாதவன்


ஜி விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர்

No comments:

Post a Comment