Search This Blog

Tuesday, August 25, 2015

சங்கப் பெண்பாற் புலவர்களைப் பற்றி

ஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை அதற்குத் தொடர்புடைய ஆணிடம் சொல்லிவிடுவதற்கும் வெளிப்படுத்துவதற்குமான வழிமுறைகள் நிகழ்காலத்தில் எளிமைப்பட்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம் . ஆனால் இன்றும் கூட ஒரு பெண் தன்னுடைய காதலை சக மனிதர்களிடம் சொல்ல இயலாத நிலை தான் இருக்கிறது . காதலை மட்டுமல்ல தன்னுடைய கோபம் , இயலாமை , துயரம் ,கனவு மற்றும் அவளின் முறையீடுகள் இவற்றை தன்னுடைய சக மனிதர்களிடம் அவள் பகிர்ந்து கொள்வதை விடவும் இயற்கையிடமே அவள் அதிகம் பகிர்ந்திருக்கிறாள் .
நிலத்தின் தன்மையும் அதன்மேல் வாழுகிற மக்களின் மனமும் கூட இன்றைக்கு மாறியிருக்கிறது . எனவே இயற்கையும் கூட அவளைக் கைவிட்டுவிட்டதாக நினைக்கிறாள் . இவ்வாறு நிலமும் அதன் பண்புகளும் திரிபடைந்திருக்கும் நிகழ்காலத்தில் தன்னுடைய துயரையும் மகிழ்வையும் பெண் யாரிடம் சொல்வாள் ? இன்றைய பெண்களின் கண்ணீரும் அவளின் துயரமும் அவளுடைய சொல்லும் இயற்கையிடமும் சேராமல் உரியவரிடமும் சேர்ப்பிக்க இயலாமல் நான்கு சுவர்களுக்குள் மோதி அதற்குள்ளேயே எதிரொலித்து அடங்குகிறது .



Sakthi Jothi

No comments:

Post a Comment