" ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம். " - ஹெலன் கெல்லர்
இள வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தும் தன்னம்பிக்கை விடா
முயற்சியால் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய அமெரிக்கக் பெண் தான் ஹெலன் கெல்லர்.
அருகில் இருப்பவர் கெல்லரின் ஆசிரியர் ஆன் சல்லிவன் .
பிறர் பேசும் பொழுது அவர் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் அவர் பேசுவதை புரிந்துகொள்ளும் கலையை கெல்லருக்கு சல்லிவன் கற்பித்தார். மேலும், கெல்லரின் உள்ளங்கைகளில் எழுதி, எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பழக்கினார்.
உதாரணத்திற்கு தண்ணீர் என்று கைகளில் எழுதி காட்டும்போது ஹெலன் கெல்லருக்கு எழுத்துக்கள் புரியும் ஆனால் அது தண்ணீர் என்று தெரியாது. ஒருமுறை ஒரு தண்ணீர் குழாய்க்குக் கீழ் கெல்லரின் வலது கையில் தண்ணீர் படுமாறு வைத்து அவரது இடது கையில் தண்ணீர் என்று எழுதி காட்டினார்.
ஹெலன் கெல்லர் சிறந்த எழுத்தாளராகவும் சமூக ஆர்வலராகவும் உருவானார். ஊனமுற்றோருக்கான தன் வாழ் நாள் முழுவதையும் செலவிட்டார்.
உழைப்பாளர் உரிமைகளையும், சோசியலிச தத்துவத்தையும் ஆதரித்து பல கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதினார்.
No comments:
Post a Comment