Search This Blog

Wednesday, September 7, 2011

இன்டர்நெட் தோற்றமும் பயன்பாடும்


 

Join Only-for-tamil

இன்றைய மனித இனத்தின் சிந்தனைப் போக்கை மாற்றியதில் இன்டர்நெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகையாகாது. தகவல் பரிமாற்றம், உருவாக்கி சேமித்தல் என்ற இரு பரிமாணங்களில் தினந்தோறும் புதிய மாற்றங்களைத் தந்து வரும் இந்த இன்றியமையாத சாதனம் உலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன

1960ஆம் ஆண்டுவாக்கில், அமெரிக்காவின் டார்ட்மவுத் மற்றும் பெர்க்லீ பல்கலைக் கழகங்களில் ஐ.பி.எம். கம்ப்யூட்டர்களைப் பகிர்ந்து பயன்படுத்த எண்ணியபோது இன்டர்நெட் உருவானது. இந்தக் கட்டமைப்பை மக்களும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டது. இந்தக் கட்டமைப்பு ரஷ்யா 1957ல் ஏவிய ஸ்புட்னிக் சாட்டலைட்டையும் பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவர் ARPA என்னும் நெட்வொர்க் அமைப்பை கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிற்காகவும், தகவல் தொழில் நுட்ப தொடர்புகளுக்காகவும் உருவாக்கினார்.
இன்டர்நெட் 90களில் பிரபலமானது. 1993 ஆம் ஆண்டில் மிக வேகமாக இதன் பயன்பாடு பரவியது. 5 கோடிப் பேரை ரேடியோ சென்றடைய 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சி அதே அளவில் சென்றடைய 13 ஆண்டுகள் ஆனது. இன்டர்நெட் இந்த இலக்கை அடைய 5 ஆண்டுகளே ஆனது. இன்றைய நவீன உலகில் இன்டர்நெட் பல பயன்களை அளித்த போதும், அவை மற்றொரு இருளான பக்கத்தையும் கொண்டிருக்கின்றன. தினசரி, தாங்கள் வாங்கிய பொருட்களுக்குக் கட்டணம் கட்டுவதிலிருந்து பொழுதுபோக்கிற்காக விளையாடுவது வரை இன்டர்நெட்டில் எவ்வளவு நேரம் செலவழிக்கின்றோம் என்பதே தெரியாமல் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். மன அழுத்தத்துக்கும் இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பதற்கும் நெருங்கிய பிணைப்பு இருக்கிறது.

செலவழிக்கும் நேரம் அதிகம் ஆக ஆக மன அழுத்தமும் அதிகமாகிறது. இவர்களில், 18 பேர் ஒரு நாளைக்கு மிக அதிக நேரம் இன்டர்நெட்டில் செலவழிக்கின்றனர். இவர்களை “இன்டர்நெட்டுக்கு அடிமையானவர்கள்’ என்று வகைப்படுத்தலாம். சாதாரண மக்களை விட இன்டர்நெட்டில் நேரம் அதிகமாக செலவழிப்பவர்களின் மன அழுத்தம் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கிறது

சிகரெட், மது போல இன்டர்நெட்டும் ஒரு போதை என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், அதனைப் பார்க்க முடியவில்லை என்றால், என்ன பதைபதைப்பு ஏற்படுகிறது. மெயில் பார்க்க முடியவில்லை, என் பேஸ்புக் நண்பர்களுடன் செய்தி பரிமாற முடியவில்லை என்று அத்தனை பேரும் பதற்றம் அடைகின்றனர். பித்துப் பிடித்தவர் போல மாறுகின்றனர். இங்கிலாந்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள ஆயிரம் பேரை இது குறித்து கருத்து கேட்ட போது, சிகரெட்டுக்கு எப்படி, அதனைப் பயன்படுத்துபவர்கள் அடிமையாகிறார்களோ, அதே போலத்தான் இன்டர் நெட்டுக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், ஒருவர், அது என் ஒரு கையை வெட்டியது போல இருக்கும் என்றார். 

இவர்களில் பெரும்பாலானவர்கள் பேஸ்புக், ட்விட்டர், மெயில் ஆகியனவற்றின் தொடர்பு கிடைக்காமல் போவதே இந்த மனநிலைக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர். இரவு படுக்கப் போகும்போது பேஸ்புக், ட்விட்டர் அப்டேட் செய்து படுக்கைக்குச் செல்வதைப் பழக்கமாகப் பலர் கொண்டுள்ளனர். எனவே இது தடைப்படுகையில், தூக்கம் வராமல் தவிக்கின்றனர்.
ஆனால், இந்தக் கணக்கெடுப்பில் 21% பேர், இன்டர்நெட் இல்லை என்றால், ஆஹா! இன்று விடுதலை; சுதந்திரமாக இருப்பேன் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை கருத்தில் கொண்டு இண்டர்நெட்டை பயன்படுத்துவது அனைவருக்கும் நல்லதுதானே?   

இணையத் தளங்களின் தொகுப்பு :சாயி பாபா 

No comments:

Post a Comment