ஈ.
ஈகைக்கு எல்லை எதுவுமே இல்லை.
ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.
உ
உழுத நிலத்தில் பயிரிடு.
உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
உணவுக்கு நெருக்கம்,நட்புக்குத் தூரம்.
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசே மேல்.
உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது.
உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.
உழைத்து உண்பதே உணவு.
உப்பிட்டவரை உள்ளவும் நினை.
உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு
|
Related Posts : Good to Read
No comments:
Post a Comment