தருமம் பொருள் காமம்வீடெனு நான்கு
முருவத்தா லாய பயன்
எங்கும் நிறைந்திருக்கும் பரவெளி இவ்வுடலெனும் உருவம் கொண்டதன் பயனானது அறநெறி,செல்வம், காமம் மற்றும் தன்னைத் தானறிந்து பரவெளியாம் வீடு அடைதல் என்பதாகும்.
ஓசை பரிசமுருவஞ் சுவை நாற்ற
மாசை படுத்து மளறு
உயிர் காந்த சக்தியின் மாற்றங்களான(பஞ்ச தன் மாத்திரைகள்) ஒலி, ஊறு உணர்வு, காட்சி, சுவை, மணம் என்ற அடிப்படை இச்சைகளே வினைப்பதிவுகளை உருவாக்கும்.
பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந்
தரமாறிற் றோன்றும் பிறப்பு
பரவெளிச் சக்தியானது தன்னுள் இணைந்து விண்,வாயு, அக்னி,நீர், நிலம் என்ற ஐம்பூதங்களுள் உயிராக விளங்குவதால் பிறப்பு என்பது உருவாகிறது
ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத்
தோதிய நூலின் பயன்.
கல்வி என்பதின் பயன் ஆதிப் பொருளாய் நிற்கும் இறைநிலையை உணர்வதாகும்
No comments:
Post a Comment