மார்புப் புற்றுநோய்க்கான ஒரு அற்புத மருந்து உலகில் எல்லா விதமான புற்று நோய்க் கட்டிகளையும் எதிர்த்துப் போராடக் கூடிய ஒரு ஆயுதமாக அமையும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நியுகாஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இந்தக் கண்டுபிடிப்புத் தகவலை கடந்த வாரம் வெளியிட்டுள்ளனர். மார்புப் புற்றுநோய்க்கு எதிராக பாவிக்கப்படும் சில மாத்திரைகளை இப்போது வேறு புற்றுநோய்களுக்காகவும் பயன்படுத்த முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாத்திரைகளைப் பாவிப்பதால் ஏற்படும் குமட்டல், களைப்பு போன்ற பக்க விளைவுகளும் பெருமளவுக்கு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. PARP inhibitors வகையைச் சார்ந்த மருந்துகளே இப்போது மார்புப் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்தை ஏனையவகை புற்று நோய்க் கட்டிகளைக் குணப்படுத்தவும் பயன்படுத்தலாம். புற்றுநோய்க் கட்டிகளை முற்றாக அழித்து அவை தாமாகவே சீரடைய இந்த மருந்துகள் உதவுகின்றன. மேலும் இவை உடம்பின் ஆரோக்கியமான ஏனைய கலங்கள் பாதிப்படையாமல் செயற்படுகின்றன. புற்றுநோய்க்கான ஏனைய சிகிச்சைகளான கெமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை என்பன மூலம் உடலின் ஆரோக்கியமான கலங்கள் பாதிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. |
Search This Blog
Monday, July 4, 2011
அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment