Search This Blog

Thursday, July 28, 2011

ஓய்வு நேரத்தில் பணம் பண்ணலாம் வாங்க...



வரப்புயர  ! அவ்வையார் அந்த காலத்திலேயே ஒரு மன்னனை , அதியமான்  னு நினைக்கிறேன்..  வாழ்த்த இந்த வார்த்தையை  சொன்னாங்க. இந்த ஒரே வார்த்தையிலேயே .. அந்த மன்னனுக்கு தேவையான வாழ்த்து கிடைச்சிடிச்சு .. 

வரப்புயர நீர் உயரும்.. நீர் உயர நெல் உயரும். நெல் உயர குடி - ( அந்த குடி இல்லீங்கண்ணா ) மக்கள் வாழ்க்கை உயரும். குடி உயர கோன் (அரசன்) உயர்வான் ...  இதே மாதிரி தான் சார்.. நம்ம வாழ்க்கையும் உயரணும்..  

முதல்லே உங்க மனைவி, குழந்தைகள் , பெற்றோர் நல்லா இருக்கணும். நீங்க இவங்களை நல்லா கவனிச்சுக்கணும். முக்கியமா இவங்க உங்களை மதிக்கணும் . புஜ பல பராக்கிரமம் இங்கே எடுபடாது. பயம் வேற . மதிப்பு வேற. அதுக்கு நீங்க திறமை சாலியா இருக்கணும். 

ஆம்பளைக்கு மதிப்பு எப்போ வருது ? அவர் பணம் சம்பாதிக்கிற திறமைலே வருது.. பணம் நியாயமா, நேர்மையா சம்பாதிக்கணும்.. அடுத்தவங்க வயித்துலே அடிச்சு , சம்பாதிக்க கூடாது.. அப்படி வர்ற பணம் , உங்களை மட்டும் இல்லாம , உங்க தலை முறையவே பாதிக்கும்..

சரி, நாம படிச்ச படிப்புக்கு ஏற்ப ஒவ்வொருத்தரும், ஒரு வேலை , இல்லை சொந்த தொழில் னு சம்பாதிக்க முயற்சி பண்றோம்.. இதை தாண்டி என்ன பண்ணலாம் னு யோசிக்கிறப்போ தான்.... இந்த " ஓய்வு நேரத்தில்  பணம் பண்ற வித்தைகளைப் " பத்தி - எனக்கு தெரிஞ்ச வரைக்கும் உங்க கிட்டே பகிர்ந்துக்கலாம்னு ஐடியா வந்தது.. இதிலே பல வகைகளைப் பார்க்க விருக்கிறோம். உங்களுக்கு எது சூட் ஆகுதோ , அதை நீங்க எடுத்துக்கலாம். .... !

சரி , இந்த " வரப்புயர " எதுக்கு சொல்ல வந்தேன்னா , ஒரு அஞ்சு வருஷம் முன்னாலே , வேலை சம்பந்தமா பரிதாபாத் லே ஒரு கம்பெனிக்கு  போயிருந்தேன் . ஒரு பிசினெஸ் டீல். பெரிய கிரேன் உற்பத்தி செய்ற கம்பெனி. அந்த கம்பெனி சேர்மன் பையன் - மோஹித் குலாட்டினு பெயர். வெரி எங் . முப்பது வயசு தான் இருக்கும். எல்லாம் பேசி முடிச்சிட்டு சாயந்திரம் டின்னேர்லே பேசுறப்போ , " மோஹித் , லைப் லே என்ன எய்ம் வைச்சு இருக்கிறீங்க ?" னு கேட்டேன்.  சொன்ன பதில். சும்மா நச்சுனு இருந்தது. "ரொம்ப சிம்பிள் பாஸ். கியூட் டா , ஒரு மெர்சிடிஸ் நான் சம்பாதிச்சு வாங்கணும் , அப்புறம் இதோ - "black Label " தினம் ஒன்னு , நண்பர்கள் கூட உக்கார்ந்து சாப்பிட உடம்பு வெச்சுக்கணும் " னு அந்த விஸ்கி பாட்டில் காமிச்சாரு. அந்த விஸ்கி எப்படியும் ஒரு ஏழு ஆயிரம்னு நினைக்கிறேன் விலை. 

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.  தினம் ஒரு பத்து ஆயிரம் செலவு பண்ண , நீங்க ஒரு அம்பதாயிரமாவது சம்பாதிக்கணும். ஒரு  மெர்சிடிஸ் கார் வாங்க - ஒரு முப்பது லட்சம் குறைஞ்சது வேணும். அந்த கார் பார்க் பண்ண , ஒரு நல்ல வீடு வேணும்.. உங்க கையிலே ஒரு கோடி இருந்தா , இதைப் பத்தி எல்லாம் யோசிக்கலாம்.  ம்ம்ம்..

தினம் விஸ்கி லிமிட்டா சாப்பிட , உடம்பு பலம் வேணும் . உங்க உடம்பை நீங்க மதிச்சு , தினம் ஒரு மணி நேரமாவது உடற் பயிற்சி செய்யனும்.   இது எல்லாத்துக்கும் - மேலே எல்லோருக்கும் கிடைச்சு இருக்கிற அந்த 24 மணி நேரத்தை - பக்காவா திட்டமிட்டு வேலைகளை செய்யனும்..   நமக்கும் இந்த மாதிரி நச்சுனு ஒரு Aim , லட்சியம் , இலக்கு இருக்கணும். இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு - நாமே எப்படி இருக்கப்போறோம் கிறதை - இப்போ இருந்தே திட்டமிட்டு - க்ளியரா மூவ் பண்ணனும்..

நானும் , யோசிச்சுப் பார்த்தேன்.. அந்த பையன் நினைச்சு இருந்தா , அவருக்கு இருக்கிற வசதிக்கு பென்ஸ் வாங்கிடலாம். ஆனா, தானே சம்பாதிச்சு வாங்கனும்னு சொன்னது ரொம்ப பிடிச்சு இருந்தது. ஏன், என்னாலே வாங்க முடியாது ? அஞ்சு வருஷம் வேண்டாம்.. ஐயா, ஒரு பத்து வருஷம்.. ! why not ? முடியுமே.. இலக்கு வைச்சாச்சு..ஆண்டவன் அனுக்கிரகம் கிடைக்கணும். பார்ப்போம்..

பணம்  , பணம்னு இந்த உலகமே  ஓடுதே.. நாம ஏன் அந்த மாதிரி போகணும்.. கிடைச்சதை வைச்சு நிம்மதியா இருக்க முடியாதா? ஏன், முடியாது.. ? முடியும்.. ஆனா, உங்களுக்கு சம்பாதிக்கிற திறமை இருந்தா, அதை ஏன் சார் நீங்க utilise பண்ணக் கூடாது..? ஐயா , உங்களுக்கு காசு வேண்டாம்.. நீங்க நல்ல விதமா சம்பாதிச்ச காசு , உங்க புள்ளை குட்டி அனுபவிக்கட்டுமே.. அதுக்கு அப்புறம், நிம்மதியா , முழு நேரமா கோவில் , குளம்னு போங்க.. குடும்பத்தை இன்னும் நல்லா , அக்கறையா கவனிங்க.. அதுக்கு முன்னே.. நிறைய சம்பாதிங்க..! சரியா?
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSSLfwlr6jQpfU3AxPWdVVQh4eE4I_D1zgUlB2dgHv_EcNzEIrWHA
சரி, இப்போ இன்னொரு நண்பரை பத்தி சொல்றேன். கர்நாடகாவிலே ஒரு ஆட்டோ மொபைல் கம்பெனிக்காக சர்வீஸ் என்ஜினியரா இருக்கிறாரு.வயசு முப்பதுக்குள்ளே தான் இருக்கும். படிச்சது  டிப்ளோமா மெக்கானிக்கல் . பத்து வருஷம் experience . சம்பளம் ஒரு முப்பது  ஆயிரம்  கையிலே  வருது. போன மாசம் ,  ஹூப்ளி ஒரு வேலையா போயிருந்தப்போ , மீட் பண்ணினோம்..

ரெண்டு மாசம் முன்னாலே , புது டொயட்டோ இனோவா கார் வாங்கி இருக்கிறாரு. 14 லட்சம்.  பக்காவா  T - போர்டு வாங்கி , டிராவல்ஸ் ஓடுது. அவர் வாங்குற சம்பளத்துக்கு - கண்டிப்பா வாய்ப்பு கம்மி தான். ஏன், லோன் கூட கஷ்டம் தான். எனக்கு ஒரே ஆச்சர்யம். எப்படின்னு கேட்டேன்.. ? நம்ம கம்பெனி சம்பளம் தவிர , மாசத்துக்கு - 40 ஆயிரம் சம்பாதிக்கிறேன் சார் . வார வாரம் - 10 ஆயிரம் வரும். அப்படி ஒரு வாய்ப்பு. ஒரு வருஷமா, அந்த காசு தொடவே இல்லை. அதுலே ஒரு ஆறு லட்சம் இருந்தது. மீதிக்கு லோன் போட்டேன். இதுக்கு மேலே டியூ கட்டவும் , அந்த மாதிரி வர்ற காசுலே இருந்து தான். சம்பளத்தை தொடப்போறது இல்லே.  டிராவல்ஸ்லே வர்ற காசு வைச்சு - ஒரு டெம்போ டிராவலர் வாங்கணும்.  ஒரு நாலு வருஷம் சார்.. பெங்களூர் லே ஒரு வீடு வாங்கணும். அவுட்டர்லே ஒரு நாலு ஏக்கர் தோப்பு வாங்கணும்.. அதுக்கு அப்புறம் டிராவல்ஸ் மட்டும் பார்த்துக்கிட்டு - நிம்மதியா வீட்டோட இருக்கணும். என்னோட வண்டிகளுக்கு , சர்வீஸ் மெயிண்டனன்ஸ் பார்க்கிறதுக்கு ஒரு ஒர்க் ஷாப் ஆரம்பிக்கணும். அப்படியே சைடு பை சைடு மத்த வண்டிகளுக்கும் பார்க்க ஆரம்பிக்கலாம். அது போதுமே சார்.. நம்ம கையிலே தொழில் இருக்கு ... வேற என்ன சார் வேணும்..? 

எப்படி , இந்த மாதிரி உனக்கு தோணிச்சுன்னு கேட்டேன்.. ? " சார், நீங்களே சொல்லுங்க. மாச மாசம் டார்கெட் கொடுக்கிறீங்க. குட்டிக்கரணம் அடிச்சாதான் , அதுக்கிட்டே போக முடியும். டார்கெட் ரீச் ஆயிட்டா பரவா இல்லை. இல்லைனா, ஒரு அஞ்சு நாளைக்கு தினம் உங்களுக்கு டைம் கிடைக்கிறப்போ எல்லாம் திட்டுவீங்க. நான் நாலு பேர்கிட்டே  எரிஞ்சு விழனும்.. எதுக்கு இந்த பொழைப்பு னு தோணிச்சு ?

எத்தனை நாள் கம்பெனிக்கு வேலை பார்த்துக்கிட்டு இருக்க முடியும்? நீங்க எந்த கம்பெனி க்கு வேலை பார்த்தாலும், உங்க சம்பளம் கூட , கூட , உங்க முதுகு குனிய ஆரம்பிக்கும். வேற வழி கிடையாது பாஸ்.  பாட்டு வாங்கித்தான் ஆகணும்,... கம்பெனி சேர்மன் கிட்ட அதிகமா " ஏத்து " வாங்குறது , அந்த கம்பெனியிலேயே அதிகமா சம்பளம் வாங்குற GM  மா தான் இருப்பார். அவர் வாங்கினதை , இன்னொரு ஆளுக்கு  பாஸ் பண்ண , அவர் நாலு பேருக்கு பாஸ் பண்ண - கடைசி வேலை பார்க்கிறது ஒரு பத்து பேரா இருக்கும்.   சம்பளம் வருது .. கை நிறைய வருது.. ஆனா , அதை வைச்சுக்கிட்டு எத்தனை பேர் சந்தோசமா , குடும்பத்துக்கு டைம் ஸ்பென்ட் பண்ண முடியுது ?  அதனாலே வேற ஏதாவது பண்ணனும்னு தோணிச்சு ...

கிரேட் யார்.. லவ்லி ! ஆல் தி பெஸ்ட் னு வாழ்த்து சொல்லிட்டு வந்தேன்.. நான் செய்ய தவறுனதை , கண் முன்னே நம்ம ஆளு ஒருத்தன் பண்றானேனு ஒரு சந்தோசம்... !!

சரி , அந்த வாரம் பத்து ஆயிரம் எப்படி வருதுன்னு சொல்லவே இல்லையே.. ! சொன்ன விஷயம் என்ன தெரியுமா?  சப்பை மேட்டருன்னு நான் எக்கச்சக்கமான பேருக்கு சொன்ன விஷயம். ... ! நான் சொன்னா , நீங்களே அட போங்க சார் னு சொல்லுவீங்க..!   எல்லாமே பெரிய பெரிய டுபாக்கூர் விஷயம்னு சொல்வீங்க. ...! 


RMP னு ஒரு விஷயம் கேள்விப்பட்டு இருக்கீங்களா? MLM ( Multi level marketing ) கான்செப்ட் தான். Detail லா ஒரு அரை மணி நேரம் அதைப் பத்தி சொன்னாரு. இனிசியல் ல ஒரு எட்டு ஆயிரம் இன்வெஸ்ட் பண்ணினாராம். பண்ணினதும் உங்களுக்கு மெம்பர்ஷிப் கார்ட் கொடுப்பாங்க. அதிலே நிறைய products இருக்கு. எட்டு ஆயிரம் மதிப்புக்கு நீங்க உங்களுக்கு தேவையான பொருள் வாங்கிக்கலாம். நீங்க கொடுத்த வேல்யூ க்கு ஒரு 80 % வொர்த்  தாவது அந்த மெட்டீரியல்  இருக்கும்னு வைச்சுக்கோங்களேன்..   அவரு ஒரு ரெண்டு பேரை join பண்ணி விடனும்.  லெப்ட் - ரைட் join பண்ணினா உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்குமாம். அந்த ரெண்டு பெரும் எவ்வளவு பேரை சேர்க்கிறாங்களோ  , அதுக்கும் உங்களுக்கு பைசா வருமாம். இப்படியே add ஆகிக்கிட்டே  போகுது.. 

வார வாரம் பேமென்ட் வருமாம். ஒரு குறிப்பிட்ட லெவல் தாண்டினதும் , நீங்க diamond லெவலோ  , ஏதோ சொல்றாங்க. அது வந்தாச்சுனா , மாசம் உங்களுக்கு அம்பதாயிரம் வந்துக்கிட்டே இருக்குமாம். என்னமா திங்க்  பண்ணுறாங்க  ..? 


நம்ம ஆளு சேர்த்து விட்ட ரெண்டு பெரும் தீயா வேலை செய்ற ஆளுங்க போலே. பட்டையை கெளப்பி இருக்காங்க. எல்லாத்துக்கும் மேல நேரம் நல்லா இருந்து இருக்கு.. பின்னிப் பெடல் எடுக்கிறாங்க. இவரும் தனக்கு தெரிஞ்சவங்க, போனவங்க , வந்தவங்கனு முடின அளவுக்கு சேர்த்து விட்டிருக்கார்.   இது வரைக்கும் அவருக்கு கீழே 256 pair இருக்கிறாங்களாம். இதிலே ஒரு 20 % active ஆ இருந்தாலே போதும்.. உங்களுக்கு பைசா வந்துக்கிட்டே இருக்கும்னு சொல்றாப்ல.   என்ன , முதல் லே சேர்வங்களுக்கு ஈஸி . Circuit நீளமாக ஆக உங்களுக்கு நல்லது. 


இன்னும் கொஞ்சம் விசாரிச்சா , SPEAK ASIA , AUM GLOBAL னு நிறைய இருக்குது.. அதை எல்லாம் பின்னாலே பார்ப்போம்.. ! 


No comments:

Post a Comment