Search This Blog

Friday, July 29, 2011

"மனோவசியத்திலிருந்து விடுபடு"

"மனோவசியத்திலிருந்து விடுபடு" 
:.....சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தர் மக்களின் ஆழ்மனங்களில் உள்ள பலம் மற்றும் பலவீனங்களை நன்கு ஆராய்ந்து அறிந்தவர். தொடர்ச்சியாக ஒருவர் கேட்கும் நல்ல மற்றும் தீய விஷயங்கள் எப்படி ஒருவரை பாதிக்கின்றன என்பதைப் பற்றி அவர் கூறுகிறார் கேளுங்கள்.....

' ...நியுயார்க்கிற்கு வரும் ஐரிஷ்காரர்களை நான் (சுவாமி விவேகானந்தர்) கவனித்திருக்கின்றேன். அவர்கள் வரும்பொழுது தாழ்வு மனப்பான்மையுடன், குழிவிழுந்த கண்களுடன், உடைமைகள் அனைத்தையும் இழந்து, கையில் காசில்லாமல், உணர்ச்சியற்றுப் போய், தங்கள் ஒரே உடைமையான துணிமூட்டையை ஒரு கம்பி நுனியில் கட்டி அதைத் தூக்கியபடி, பயந்த நடையும், மிரண்ட கண்களுமாக வருவார்கள். 'ஆனால் வந்த ஆறு மாதங்களில் காட்சி மாறிவிடும். நிமிர்ந்த நடையும், மாறிய உடையும்: கண்களிலும், நடையிலும் அச்சத்திற்குரிய அறிகுறிகளே தென்படாது. காரணம்?

'காரணத்தை நமது வேதாந்தம் விளக்குகிறது' அந்த ஐரிஷ்காரன் தன் சொந்த நாட்டில் வேருப்புனர்ச்சிகளால் சூழப்பட்டிருந்தான். இயற்கை முழுவது அவனிடம் ஒரே குரலில், 'உனக்கு எதிர்காலமே இல்லை, நீ அடிமையாகப் பிறந்தாய், அடிமையாகவே வாழ்வை' என்று கூறியது. 'பிறந்த நாள் முதல் இவ்வாறே கூறப் பட்டு வந்ததால் அவன் அதை நம்பினான்; அவனது ஆன்மா செயல் இழந்துவிட்டது. 'ஆனால் அவன் அமெரிக்காவில் காலடி வைத்தவுடனே, 'நீயும் எங்களைப் போன்ற மனிதன்தான். மனிதனே அனைத்தையும் செய்துள்ளான். உன்னையும் என்னையும் போன்ற மனிதன் எல்லா காரியத்தையும் செய்ய முடியும். வீரம் கொள், என்ற குரல் எல்லாப் பக்கங்களிலிருந்தும் கேட்டது. ' அவன் தலை நிமிர்ந்தான், தான் அவ்வாறே உயர்ந்தவன் என்பதைக் கண்டான். அவனது ஆன்மாவும் விழிப்புற்று எழுந்தது'.

ஐரிஷ்காரனைவிட அன்றைய நம் மக்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர்களாகவும், பாரம்பரியப் பெருமையைப் புறக்கணித்தும் இருந்தனர். இதனால் தான் சுவாமி சிவேகானந்தர் நம் ஒவ்வொருவரிடமும் 
"DE-HYPNOTISE YOURSELF
பலவீனமான மனோவசியத் திலிருந்து உன்னை நீயே விடுவித்துக்கொள்" என்றார்

No comments:

Post a Comment