Search This Blog

Monday, July 4, 2011

கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் வராது: ஆய்வில் தகவல்



கடந்த 1980ம் ஆண்டுகளில் இருந்து கைத்தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கைத்தொலைபேசிகளை அதிக அளவில் பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
இதற்கிடையே சமீபத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, சுவீடன் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இதுகுறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் கைத்தொலைபேசிகளை அதிகம் பயன்படுத்துவதால் அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் மூளை புற்றுநோய் ஏற்படாது. அதற்கான சாத்திய கூறுகள் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் கைத்தொலைபேசி பயன்பாட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment