Search This Blog

Tuesday, June 14, 2011

உலகின் மிகச்சிறிய டையனோசரசின் எலும்புக் கூடு பாகங்கள் கண்டுபிடிப்பு

உலகின் மிகச்சிறிய டையனோசரசின் எலும்புக் கூடு பாகங்கள் கண்டுபிடிப்பு

இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பூமியை தோண்டி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பறவை போன்று வடிவம் கொண்ட மிகச்சிறிய டையனோசரசின் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
சிறிய வால், நீண்ட கழுத்து, நீண்ட குச்சி போன்ற கால்கள், இறகு எலும்புகள் போன்றவை இருந்தன. அதற்கு "ஆஷ் டவுன்" என்று நிபுணர்கள் பெயரிட்டுள்ளனர். இது சுமார் 1 கோடி முதல் 1 கோடியே 45 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து இருக்கலாம் என்று கணித்துள்ளனர்.
பறவை போன்று இருந்தாலும் அந்த டையனோசரசால் பறக்க முடியாத நிலை இருந்திருக்கலாம். அதன் எடை 7 அவுன்ஸ் மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment