இந்த வாரம் வெளியிடப்பட்ட ஆய்வுத் தகவல் ஒன்றில் 47 வீதமான பேஸ்புக் பாவனையாளர்கள் தமது பேஸ்புக் பக்கங்களில் தகாத வார்த்தைகளைப் பிரயோகித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை கடந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆல்கஹால் பற்றிப் பேசும் இளங்கலைப் பட்டதாரி மாணவர்களுக்கு அதிக நண்பர்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுகள் ஒன்லைனில் நம்முடைய நடத்தையில் உள்ள புதினங்களையே காட்டுகிறது.
கிட்டத்தட்ட 600 மில்லியன் பேர் பேஸ்புக் பாவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆய்வுகள் எமது கலாசாரங்கள், மதிப்புகள், நன்னடத்தைகள், மாறும் உறவுமுறைகள் போன்றவை குறித்த ஆழ்ந்த புரிந்துணர்வை வழங்குகிறது.
என்னை இன்னும் நீங்கள் நம்பவில்லையா? கீழே தரப்பட்டுள்ள விடயங்களை வாசித்துப் பாருங்கள்.
1.பேஸ்புக்கில் தம்முடைய முதலாளியுடன் நட்புக்கொள்வதை 56% அமெரிக்கர்கள் பொறுப்பற்றதனம் என நினைக்கின்றனர்
2010ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, பெரும்பாலான அமெரிக்கர்கள் தம்முடைய முதலாளிமாருடன் பேஸ்புக்கில் நட்பு வைத்திருப்பதை சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கிறது.
இதேவேளை 62 வீதமானோர் ஒரு மேலாளர் தனது பணியாளருடன் பேஸ்புக்கில் நட்பு வைத்திருப்பதை தவறு என்றுள்ளனர். அதேவேளை 76 வீதமானோர் தம்முடைய வயதை ஒத்தவர்களுடன் நட்புக்கொள்வதைப் பரிந்துரைத்துள்ளனர்.
2.பேஸ்புக் தொடர்பு சுட்டிகளில் (links) 90 வீதமானவை பாலியல் தொடர்பானவை
2010ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் மே மாதம் வரையில் சமூக ஊடக விஞ்ஞானி டேன் ஷெரெல்லா மேற்கொண்ட ஆய்வில் 12,000 பேஸ்புக் தொடர்பு சுட்டிகள் செய்தித் தளங்கள் மற்றும் ப்ளொக்களிலிருந்து பகிரப்பட்டவை என தெரியவந்தது. இதில் ஏனைய விடயங்களை விட 90 வீதமானவை பாலியல் பற்றிய விடயங்களாகவே இருந்தன.
அதேவேளை, பேஸ்புக்கில் பகிரப்பட்ட விடயங்கள் எதிர்மறை எண்ணங்களைவிட நேர்மறை எண்ணங்களையே அதிகம் வெளிப்படுத்துவனவாக அமைந்திருந்தமையும் கண்டறியப்பட்டது.
3.தனி நபர்களை விட பேஸ்புக்கில் உறவுகளைக் கொண்டிருப்பவர்கள் மகிழ்ச்சியானவர்கள்
2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொண்டாடப்பட்ட காதலர் தினத்தன்று பாவனையாளர்களின் பேஸ்புக் பதிவுகளைக் கொண்டு உறவுமுறைகளை மையப்படுத்தி நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் முடிவின் படி உறவில் இருப்பவர்கள் தனியாக இருப்பவர்களை விட சற்று அதிகமாக மகிழ்ச்சியாக உள்ளார்கள். விகிதாசாரப்படி தனியாக இருப்பவர்களை விட திருமணமானவர்கள் மற்றும் திருமண ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பவர்கள் சற்று அதிகமாகவே மகிழ்ச்சியாக உள்ளார்கள். அதோடு வெளிப்படையான உறவில் இருப்பவர்கள் தனி நபர்களை விட குறைவான மகிழ்ச்சியுடனே உள்ளார்கள்.
4. பேஸ்புக் வழியாக 21 வீதமானோர் உறவு முறிவுகளைப் பெற்றுள்ளார்கள்
1000 பேரில் (70% ஆண்கள்) மேற்கொள்ளப்பட்ட 2010ஆம் ஆண்டு ஆய்வில் 25 வீதமானவர்கள் பேஸ்புக் வழியாக உறவு முறிவுகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டது. இதில் 21 வீதமானவர்கள் பேஸ்புக்கில் தாம் தனி நபர் (Single) என உறவு முறைப் பகுதியில் மாற்றத்தை ஏற்படுத்தி தமது உறவுமுறையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
இதில் ஆண்களே அதிகமானவர்கள். இருந்தாலும் பெரும்பாலானவர்கள் பேஸ்புக் வழியாக முறிவுகளை ஏற்படுத்திக் கொள்வதில்லை என தெரியவந்துள்ளது.
5.85 வீதமான பெண்கள் தமது பேஸ்புக் நண்பர்களால் தொந்தரவு செய்யப்பட்டுள்ளார்கள்
பேஸ்புக்கில் உள்ள பெண்களை அவர்களது நண்பர்கள் சிலவேளைகளில் தொல்லை செய்வதுண்டு. மார்ச் மாதம் இடம்பெற்ற ஆய்வில் 85 வீதமான பெண்கள் அவ்வாறான அனுபவத்தைப் பெற்றுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
6.25 வீதமான குடும்பத்தவர்களுக்கு பேஸ்புக் தரவுகளை இரகசியமாகப் பாதுகாக்க முடியும் என்பது தெரியாது
2010ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நான்கில் ஒரு விகிதமான குடும்பத்தவர்களுக்கு பேஸ்புக் கணக்கினை தாம் விரும்பிய படி பாதுகாப்புக் கட்டளைகளைப் பயன்படுத்திப் பாதுகாக்க முடியும் என்ற விடயம் தெரியவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதில் குழந்தைகளைக் கொண்டுள்ள குடும்பத்தவர்களில் 26 வீதமானவர்கள் தம்முடைய குழந்தைகளின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை அவை பிரச்சினைகளுக்கு உட்படுத்தப்படும் என்பதை அறியாமல் பேஸ்புக்கில் வெளிப்படுத்தியுள்ளனர்.
தனிப்பட்ட கணக்குக் கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்தி 74 வீதமானவர்கள் அவ்வாறான தவறுகளை மேற்கொள்வதில்லை எனவும் தெரியவந்துள்ளது.
7.48 வீதமான பெற்றோர்கள் தமது குழந்தைகளுடன் பேஸ்புக்கில் நண்பர்களாகியுள்ளனர்
உங்கள் பிள்ளைகளுடன் பேஸ்புக்கில் நண்பர்களாக இணைந்திருப்பது சரியானதா இல்லையா என்ற கேள்விக்கு 48 வீதமானவர்கள் சரியானது தான் என பதிலளித்துள்ளார்கள்.
அதேவேளை பேஸ்புக் அல்லது மைஸ்பேஸ் பாவனையை குழந்தைகள் எந்த வயதில் ஆரம்பிக்கலாம் என்ற கேள்விக்கு 26 வீதமான பெற்றோர்கள் 18 வயதிற்குப் பிறகு எனவும் 36 வீதமானவர்கள் 16 முதல் 18 வயது வரையில் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 30 வீதமானவர்கள் 13 முதல் 15 வயது வரை எனவும் 8 வீதமானவர்கள் 13 வயதிற்குக் கீழ் எனவும் தமது கருத்துக்களை பதிந்தள்ளனர்.
8.47 வீதமானவர்கள் கெட்டவார்த்தைகளை தமது பேஸ்புக் பக்கத்தில் பாவித்துள்ளார்கள்
இது முன்னரே உங்களுக்குத் தெரியப்படுத்திய விடயம் தான். இவ்வாறான வார்த்தைகள் பாவனையை பேஸ்புக் பாவனையாளர்களில் பாதிப்பேர் சௌகரியமானதாகவே கருதுகின்றனர். அவ்வாறு அதிகம் பாவிக்கப்பட்ட கெட்ட வார்த்தை எது என தெரியுமா? அதிகம் யோசிக்காதீர்கள் F இல் தொடங்கும் அந்த வார்த்தை தான்.
9.48 வீதமானவர்கள் தமது முன்னாள் காதலர்களின் ப்ரபைல்களை அதிகம் பார்வையிடுகின்றனர்
இதனால் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. புதிய தொழில்நுட்பங்கள் அதிக உணர்ச்சிகளைத் தூண்டுவனவாக இருந்தாலும் நம்மில் பெரும்பாலானவர்கள் அவ்வாறான நடத்தைகளைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவே உள்ளனர்.
10.35 வயதிற்கு கீழ்பட்ட 36 வீதமானவர்கள் பாலுறவிற்குப் பின்னர் சமூக வலைத்தளங்களைப் பாவிக்கின்றனர்
2009ஆம் ஆண்டு ஆய்வொன்று சமூக வலைத்தளங்கள் இளம் வயதினர் வாழ்வில் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது என பரிந்துரைக்கிறது. 35 வயதிற்குக் கீழ்ப்பட்ட 36 வீதமானவர்கள் பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின்னர் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றைப் பார்வையிடுகின்றனர்.
No comments:
Post a Comment