Search This Blog

Tuesday, June 21, 2011

கண்ணதாசனின் செப்பு மொழிகள்


 

கண்ணதாசனின் செப்பு மொழிகள் 

1. கயிற்றை வெட்டி விட்டு முடிச்சுப் போட்டால், அந்த முடிச்சு கடைசிவரை கண்ணுக்குத் தெரிந்து கொண்டே இருக்கும். ஒருமுறை பகை வந்து, மீண்டும் எவ்வளவு நெருங்கி பழகினாலும், அந்த பகை மனதில் நின்று கொண்டே இருக்கும் 

2. இன்று நீங்கள் சிரிப்பது நாளை அழுவதற்கு தான் என்றால், அதற்காக இன்று சிரிப்பதை நிறுத்தாதீர்கள். 'நாளை அழுவதை தடுப்பது எப்படி?' இன்று யோசித்துக் கொண்டே சிரியுங்கள்.

3. சரியான தலைவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளாத தொண்டன், நியாயமான சந்தர்ப்பங்களையும் இழந்து விடுகிறான். சரியான தொண்டனை அடையாளம் கண்டு கொள்ளாத தலைவன், உத்தமனாக இருந்தாலும் அயோக்கியனாகக் காட்சியளிக்கிறான்.

4. எதைச் சிந்திக்கிறாய் என்பதிலல்ல, எப்படி சிந்திக்கிறாய் என்பதில் தான் புதிய கருத்துக்கள் வெளி வருகின்றன.

5. விஞ்ஞானிகள் கண்டு பிடிக்காதது எது? கடவுளை தவிர! கடவுள் கண்டு பிடிக்காதது எதுவுமே இல்லை- விஞ்ஞானிகள் உட்பட!

6. கண்ணாடியில் குங்குமத்தை இட்டுவிட்டு நெற்றியை அதற்கு நேரே காட்டினாலும் நெற்றியில் இட்டிருப்பது போலத்தான் தெரியும். அடுத்தவனுக்குப் புத்தி சொல்லிவிட்டு மீண்டும் அதை அவன் உனக்கு சொல்லும்போது கேட்டுக் கொள். உனக்கும் தேவைப்படும்.

7. நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்களோ, என்னிடம் சொல்லி விடுங்கள். ' நான் உங்களிடம் சொல்வதற்கு எதுவுமில்லை!' என்று சொல்லி விடுபவன் நிம்மதியாகத் தூங்குகிறான்.

8. தர்மம் எப்போது வெற்றிப் பெறுகிறது? அது தோல்வியுறும் போது!

9. புகழ் பெருகுவது-பதவி வருவதற்காக! பதவி வருவது- புகழ் போவதற்காக!

10. வீரன் கையில் உள்ள அம்பு பிறரைக்  கொலை செய்யவும்  பயன்படும்; தற்கொலைக்கும் பயன்படும்.


No comments:

Post a Comment