தொடர்ந்து வரும் மூன்று கிரகணங்கள்! செய்தி
தொடர்ந்து வரும் மூன்று கிரகணங்கள்!
ஒவ்வொரு 15 நாட்கள் கழிந்ததும் தொடாச்சியாக முன்று கிரகணங்கள் வரவிருக்கின்றன. இதனால் ஒரு மாத காலத்தில் மூன்று கிரகணங்களைக் காணும் வாய்ப்பு மனித குலத்திற்கு கிடைத்துள்ளது.
முதலில் இன்று ஜூன் 1ல் பகுதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இது, இன்று புதன்கிழமை நள்ளிரவு 12.55 மணி முதல் நாளை வியாழன் அதிகாலை 4.37 மணிவரை ஏற்படுகிறது. இரவு நேரத்தில் இது ஏற்படுவதால் இந்தியாவில் இதை காணும் வாய்ப்பு இல்லை. சைபீரியா, வடக்கு சீனா, அலாஸ்கா, நோவா ஸ்காட்டியா ஆகிய நாடுகளில் தெரியும். அடுத்து இரண்டாவதாக, ஜூன் 15ல் முழு சந்திரக கிரகணம் ஏற்பட உள்ளது. இக்கிரகணம் இரவில் நிகழ்வதால், இதை இந்தியாவிலும், மத்திய கிழக்கு, கிழக்கு ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பார்க்கலாம். மூன்றாவதாக, ஜுலை 1ஆம் திகதி பகுதி சூரிய கிரகணம் மீண்டும் ஏற்பட உள்ளது. ஆக, ஒரு மாத காலத்திற்குள் மூன்று கிரகணங்களைக் காணும் வாய்ப்பு மனித குலத்திற்கு கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment