amudu
A WAY OF LIVING
Search This Blog
Wednesday, June 22, 2011
காத்திருத்தல் தொடரும்
விடியாத காலை
பனிசிந்தும் வேளை..
காத்திருந்தேன் ரயில் நிலையத்தில் - என்
பயண ரயிலின் பச்சைகொடிக்காக ..
மெல்லிய ஆடை கொண்டு - தன்
மல்லிகை முகத்தை மூடி ..
கனவு தேவதை வந்தாள்
கனவு உனக்கு தேவையா என்பதுபோல் - அவளது அழகால்
என் கண்ணோரம் இருந்த தூக்கம்
மண்ணோரம் மறைந்து கொள்ள - அந்த
பெண்ணோரம் பார்வை திரும்பியது
என்னோரம் திரும்புமா என்று ? - அவளது அழகால்
எனக்குள் இருந்த ஏக்கம் - தன்
ஜன்னல் கதவை மூடி
வாசற்கதவை திறந்தது ..
அங்கே ஒலித்தது ரயிலின் மணியோசை
எனது பயணத்தின் துவக்கத்திற்கும்
அவளது சந்திப்பின் முடிவுக்குமாய் ..!
... காத்திருத்தல் தொடரும்
Related Posts :
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment