Search This Blog

Wednesday, June 22, 2011

அணு அண்டம் அறிவியல்-34a

அணு அண்டம் அறிவியல்-34a




பழங்காலம் தொட்டே மின் ஆற்றலும் காந்த ஆற்றலும் வேறுவேறு என்று மனிதர்கள் நினைத்து வந்தார்கள். மைக்கேல் ஃபேரடே
உலகின் முதல் மின் மோட்டாரை உருவாக்கி இவை இரண்டும் ஒரே ஆற்றலின் இருமுகங்கள் என்று கண்டுபிடித்தார்.

மின் காந்த அலைகள் எப்படிப் பரவுகின்றன என்ற விளக்கத்தை ஜேம்ஸ் க்ளெர்க் மாக்ஸ்வெல்அளித்தார். மின் காந்த அலைகள் வெற்றிடத்தில் பரவ முடியும் என்றும் அவை பரவ எந்த ஊடகமும் தேவையில்லை என்றும் அவர் விளக்கினார். மின் காந்த அலைகள் எப்படி செல்கின்றன என்று படத்தில் பாருங்கள். மின் புலமும் காந்தப் புலமும் ஒன்றை ஒன்று அணைத்துக் கொண்டு மின் காந்த அலைகள் ஒளிவேகத்தில் பயணிக்கின்றன.மின் புலம் உச்சம் பெறும் போது காந்தப்புலம் பூச்சியமாகவும் காந்தப்புலம் உச்சம் பெறும் போது மின்புலம் பூச்சியமாகவும் இருக்கிறது. மாக்ஸ்வெல் இந்த மின் காந்த அலைகளின் வேகத்தைக் கணக்கிட்ட போது அவை ஒளிவேகத்தில் பயணிப்பது தெரிந்தது. இதில் இருந்து ஒளியும் ஒரு வித மின் காந்த அலை தான் என்று மாக்ஸ்வெல் கண்டுபிடித்துச் சொன்னார். 

ரேடியோ அலைகள் போல, மைக்ரோவேவ் அலைகள் போல, ஒளியும் ஒருவித மின்காந்த அலை!

No comments:

Post a Comment