Search This Blog

Saturday, July 9, 2016

உலகத்தை உலுக்கும் ஒரு சினிமா!


'இல்லாத கடவுள்: நம்பிக்கைகளுக்கு அப்பால்' ஆவணப்படத்தை மிக்கேல் லாஞ்சர் இயக்கியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஆவணப்படத் துக்கான தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பெற்றன. ஆரம்ப கட்ட படப்பதிவுப் பணிகள் ஆறு மாதங்களுக்கு முன்பாக தொடங்கின.
ஆவணப்படத்தை முன்னெடுப்பதற்காக இணைய தளத்தின் வாயிலாக ஆதரவாளர் களிடம் நிதி உதவி கோரப்பட்டது.
பகுத்தறிவாளர், 'தி காட் டெலியூஷன்' நூலாசிரியர் எழுத்தாளர் மற்றும் பகுத்தறிவு மற்றம் அறிவியலுக்கான ரிச்சர்ட் டாக்கின்ஸ் பவுண்டேஷன் நிறுவனர், உயிரியல் அறிவியலாளர் ரிச்சர்ட் டாக்கின்ஸ்,
சமூகவியல் பேராசிரியரும், 'மதசார்பற்ற வாழ்¢வாக வாழ்வது பழைய கேள்விகளுக்கு புதிய பதில்கள்Õ நூலாசிரியருமான பில் சுக்கர்மேன், பத்திரிகையாளரும், இணையத் தின் வாயிலாக அரசியல் அலசல்களைக் கொண்ட வலைக்காட்சி 'இளம்துருக்கியர்' இணையதள அமைப்பின் நிறுவனரும், அமெரிக்காவுக்கான மதசார்பற்ற கூட்டணி அமைப்பின் நிறுவனர் ஹெர்ப் சில்வர்மேன், பகுத்தறிவுக் கூட்டணி அமைப்பின் செயல் இயக்குநர் ஜேசன் ஹீப்,
ஸ்டீஃபெல் சுதந்திர சிந்தனை அறக்கட்டளை நிறுவனரும், 'வெளிப் படையான மதசார்பின்மை' பிரச்சாரத்தைத் தொடங்கியவருமாகிய டாட் ஸ்டீஃபெல் என ஏராளமான பகுத்தறிவு, மதசார் பின்மை கருத்துகளைக்கொண்ட அமெரிக்க வாழ் பிரபலங்கள், மாணவர்கள், மதம் சார்ந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளார்.
இன்றைய உலகில் நாத்திகர்களாக இருப்பதில் உள்ள போராட்டங்கள்குறித்து 'இல் லாத கடவுள்: நம்பிக்கைக்கு அப்பால் இருக்கும் உண்மை' (கடவுள் இல்லாமல் நன்றாக இருக்க முடியுமா?) எனும் புதிய ஆவணப் படத்தில் விளக்கப்பட்டுள்ளது.
நாத்திகர்கள் நம்மிடையே இருந்து வருகிறார்கள். ஆனால், அவர்களை வெளிப்படுத்திக் கொள்ள அச்சப் படுகிறார்கள்.
விமர்சனத்துக்கு ஆளாகக் கூடியவர் களாக நாத்திகர்கள் இருக்கின்றனர். அமெரிக்காவில் 50 விழுக்காட்டளவில் நாத்திகர்களாக இருக்கிறார்கள் என்பதால் 49 விழுக்காட்டளவில் உள்ள கடவுள், மத நம்பிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாம். அவர் களின் குடும்பத்தினர் எவரும் நாத்திகர் களை மணம்புரிந்து கொண்டால் என்ன ஆவது என்று கவலை கொள்கிறார்களாம்.
பன்னாட்டளவில் 13 நாடுகளில் நாத் திகர்ளாக இருப்பதாகக் கூறினால் அவர் களுக்கு மரணதண்டனை என்று உள்ளது.
அமெரிக்காவில் காங்கிரசில் நாடாளு மன்ற உறுப்பினர்கள் 40பேர் தங்களை நாத்திகர்கள் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் நாத்திகர்களாக இருந்து வருகிறார்கள்.
தாராளமாக இருக்கக்கூடிய, நவீன மயமான இன்றைய காலத்தில்கூட, நாத்திகர்களாக இருப்பது மிகவும் கடின மானது. ஆவணத் திரைப்பட இயக்குநர் 'இல்லாத கடவுள்:நம்பிக்கைக்கு அப்பால்' ஆவணப்படத்தில் நாத்திகர்கள் சந்திக் கின்ற அறைகூவல்கள்குறித்து படம் பிடித்துக்காட்டியுள்ளார்.
நாத்திகர்களாக இருப்பவர்களிடையே அற்புதமாக நேர்காணல் கண்டு, அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்ப்புகள், போராட் டங்கள்குறித்தும், அவர்களது விருப்பம் குறித்தும், கடவுள் இல்லாமல் இருப்பதை நிரூபிப்பதுகுறித்து பேச வைத்துள்ளார். அதேநேரத்தில் அனைத்து மத நம்பிக் கையாளர்கள் மற்றும் மதசார்பின்மைக் குழுக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகள்குறித்தும் பேச வைத்துள்ளார்.
ஒரு காட்சியில், கடவுள் இல்லை என்றால், நீதி நெறிமுறைகள் எப்படி இருக்கும் என்று பொதுவாக பேசப்படு கின்ற பதிவுடன், அமெரிக்காவில் கடவுள் நம்பிக்கை மிகுந்துள்ள 12 மாநிலங்களி லிருந்து எடுத்துக்காட்டாக கூறப்பட் டுள்ளது. அம்மாநிலங்களில் அதிகமான அளவில் கொலைகள், வீடுகளில் முறைகேடுகள் மற்றும் பிற குற்ற செயல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் காட்சிப் பதிவுகளாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
மதத்தை அடிப்படையாகக் கொண்டு பரவிவருகின்ற வன்முறைக் கலாச்சாரங் கள்குறித்தும் உள்ள எழுத்துப் பதிவுகள் ஆவணப்படத்தில் விரிவாக இடம் பெற்றுள்ளன.
உலகமே ஒரு குடும்பமாக திகழும் இந்த காலக்கட்டத்தில் பன்னாட்டளவில் நிகழ்ந்து வரும் போர்குறித்த பதிவுகள் ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
ஓர் இலட்சம் டாலர் மதிப்பை இலக் காகக் கொண்டு 1300 பேர் ஆவணப் படத்துக்கு பொருளாதாரத்தை அதிகரித் திட ஆதரவாக இருக்கிறார்கள். ஆவணப் படத்துக்கு 70 விழுக்காடு மிஸீபீவீமீரீஷீரீஷீ.நீஷீனீ இணையத்தின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புவிப்பந்தில் நாத்திகம்குறித்து தவறான புரிதல்கள்குறித்து விளக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஆவணப்படமாக 'இல்லாத கடவுள்: நம்பிக்கைக்கு அப்பால் இருக்கும் உண்மை' புதிய ஆவணப் படம் வெளியா கிறது.
6 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுவர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சி 2016இல் நடந்தது. கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சீசிடம் 26 நாடுகளைச் சேர்ந்த 250 மாணவர்கள் கேள்வி கேட்டு கடிதம் எழுதியிருந்தனர். அதில் 50 கேள்விகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பதிலும் போப்பிடமிருந்து பெற்று ஒரு சிறு நூலக வெளியிடப்பட்டது. (நூலின் பெயர் ‘டியர் போப் பிரான்சிஸ்’ வெளியிடப்பட்டது 1.3.2016). தேர்வு செய்யப்பட்ட 50 சிறுவர்களில் கனடா நாட்டைச் சேர்ந்த ரியான் என்பவனும் ஒருவன். போப்பிடம் அந்தச் சிறுவன் கேட்ட கேள்வி சுவையானது.
“உலகத்தைப் படைப்பதற்கு முன்னர் கடவுள் என்ன செய்து கொண்டு இருந்தார்? எதுவும் படைக் கப்படுவதற்கு முன்னர் உலகமே வெறுமையாகத்தானே இருந்து இருக் கும்? அப்பொழுது கடவுள் தனியாக இருந்தது போன்று உணர்ந்தாரா?” என்பதுதான் ரியான் என்ற சிறுவன் கேட்ட கேள்வியாகும்.
அதற்கு போப் அளித்த பதில் பொருத்தமானதாக இல்லை. உலகத்தைப் படைப்பதற்கு முன்னர் காலத்தை படைத் தார் கடவுள் என்றும், இவையெல்லாம் படைக்கப்படுவதற்கு முன்னர் கடவுள் அன்பை விரும்பினார், அன்புதான் கடவுள் என்றும் வெற்று வார்த்தைகளை போப்பால் கூற முடிந்ததே தவிர சிந்திக்கத் தக்க பதிலை அளிக்க முடியவில்லை.
சிறுவர்களேகூட கடவுள்பற்றிக் கேள்வி கேட்கத் துணிந்துள்ளதை இது காட்டுகிறது.
உலகில் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, சீனா 90, ஜெர்மன் 60, இஸ்ரேல் 57 சதவீதம் பேர் நாத்திகர் களாக உள்ளனர் என்கிற தகவலை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேடு (22.3.2016) வெளியிட்டிருந்தது. முசுலிம் நாடான சவுதியில்கூட 600க்கு மேற்பட்டோர் டிவிட்டரில் தங்களை நாத்திகர்கள் என்று பதிவு செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இனிவரும் காலம் கேள்வி கேட்கும் காலமாகும். கேள்வி கேட்கும் காலம் என்றால் கடவுளும், மதமும், சாத்திரங் களும் அதிலிருந்து தப்பிக்க முடியாது - ஆம், தப்பிக்கவே முடியாது.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

No comments:

Post a Comment