பண்டைய காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் நமது பூமி 7 லோகங்களை கொண்டது என்றார்கள். அந்த 7- லோகத்தில் நாகலோகமும் ஒன்று. இது எந்தளவுக்கு உண்மை என நாம் நினைத்தாலும் அறிவியல் வளர்ச்சியில் வளர்ந்துவிட்ட மனிதனுக்கு கூட சில விசயங்கள் புரிபடவில்லை (விமானங்கள் காணாமல் போகுதல் உட்பட) என்பது உண்மையாகும்.
நம் தமிழகத்தில் நாகத்திற்கு என பல கோயில்கள் இருந்தாலும் அதைவிட அதிக சக்தி வாய்ந்த கோயில், இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் நயினார் தீவில் அமைந்துள்ள "நாகபூசணி அம்மன்" கோயில் கிட்டத்தட்ட 14,000 வருங்கள் பழமையானது ஆகும்.
இந்த கோயில் நாகர்களால் கட்டப்பட்டது. நாகர்கள் என்பவர்கள் பண்டைய தமிழர்களின் ஒரு பிரிவினர்தான் என வரலாற்று ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கோயில் பல அற்புத ரகசியங்களை உள்ளடக்கியது அணுவில் இருந்து தோன்றி பரிமாண வளர்ச்சி அடைந்த முதல் இனம் தமிழனம் என சான்றுகள் கூறுகின்றன. இந்த கோயில் அமையும்போது நாகலோகத்து நாகர்களும் கூட இருந்து தமிழர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தார்களாம்.
எத்தனையோ ரகசியங்களையும், வரலாறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த கோயிலில் "நாகபூசணி அம்மனை வழிபட்டால் நாக தோசங்கள், கடுமையான "ராகு&கேது தோஷங்கள்" முற்றிலும் விலகும்.
தோல் வியாதிகள், விஷக்கடிகள், திருமணத்தடைகள், புத்திர தோஷங்கள் அனைத்தும் விலகி இன்பம் கிடைக்கும். ஆன்மிக அன்பர்கள் நேரமும், வாய்ப்பும் இருந்தால் அவசியம் "நயினார் தீவு நாக பூசணி அம்மனை" வணங்கிவிட்டு வாருங்கள் உங்கள் துன்பமெல்லாம் மறைந்து இன்பம் கிடைக்கும்...
கடவுள் நம்பிக்கையற்றவர்க்கும் கடவுள் நம்பிக்கை வரவைக்கும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் அதிசயங்கள் ஓர் சிறப்புப் பார்வை!
1. நாகங்கள் அதிகம் உள்ள இடத்தில் நாகப்பாம்பு தென்படுவது எல்லாம் அதிசயமா என்றால் வருடத்தில் 365 நாட்களில் திருவிழா நடைபெறப் போகும் காலங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் மற்றவர் கண்களில் இதுபோன்ற நாகங்கள் தென்படுவதில்லை ஏன்?
2. பரந்துபட்ட ஆலய வீதியிலோ ஏனைய பல இடங்களில் தென்படாத நாகங்கள் அம்மனின் புனித இடங்களான மூலஸ்தானம் மற்றும் இராஜ கோபுரம் தீர்த்தகேணி இதில் மட்டும் அடியவர்கள் கண்ணில் தெரிவது எப்படி.....?
3.கேணியில் நீர் குடிக்க வந்திருக்கும் என்ற சிலபேரின் கூற்றுப்படி பார்த்தால்
பாம்பு வருடத்தில் ஒரு தடவை மட்டுமா நீர் அருந்தும்
நீர் அருந்த நயினாதீவில் வேறு இடம் இல்லையா?
4. மனிதர்கள் நடமாடும் இடங்களில் பாம்பு தென்படாது என்பார்கள்
ஆலய வீதியில் எந்த எந்நேரமும் துப்பரவு பணியில் ஈடுபடுபவர்கள்
கண்ணில் தென்படாத நாகம்
முக்கியமான சில தினங்களில் தென்படுவதெப்படி?
5. தற்போதைய நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் கட்டிட அமைப்பின் படி பாம்புகள் உள் நுழைவது அவ்வளவு எளிதான விடயமல்ல
எவ்வாறு உள்ளே பாம்புகள் தென்படுகின்றன
6. நாகம் பூக்கொண்டு வந்து வழிபட்டதாக வரலாற்றை நினைவுபடுத்தும் பாம்பு வடிவில் இருக்கும் பாம்புசுத்திக்கல் இதுவரை எந்த கடல் சீற்றங்களுக்கோ அல்லது இயற்கை அனர்த்தங்களுக்கோ முற்றாக சேதமடையாமல் நிலைத்திருப்பது எப்படி....?????
7. பல சந்ததிகளுக்கே தெரியாத வன்னிமரத்தின் தோற்றம் இன்றுவரை நிலைத்திருப்பது எப்படி......?
8. மகோற்சவத்தில் 11ம் திருவிழாவான கருட சர்ப்பத்திருவிழாவில் பாம்புசுத்திக்கல் மற்றும் கருடக்கல்லுக்கு பூசையிடும் போது மட்டும் கருடன் அவ்விடத்தில் காட்சி கொடுத்து வட்டமிடுவது எப்படி....?
ஏனைய நாட்களில் அவை போன்ற காட்சி இடம் பெறுவதில்லை
ஏன்?
இவற்றுக்கு விடையில்லாத புதிரான புதிர் நயினாதீவு நாகபூசணி அம்மன் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.....!
No comments:
Post a Comment