பொதுவாக சாமுராய் வீரர்களது படங்கள் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் பறைசாற்றுபவையாகவே பெரும்பாலும் அமைகின்றபொழுதிலும் ஒரு சில படங்கள் மறுபுறம் அவர்களது வாழ்விலேற்படும் துன்பியல் நிகழ்வுகளையும் வெளியுலகிற்கு வெளிப்படுத்துவதும் ஆங்காங்கே நிகழ்கின்றது.
Ageing samurai Hanshiro Tsugumo (Tatsuya Nakadai) arrives at the home of Kageyu Saito (Rentarô Mikuni) and asks to commit a ritual suicide on the property, which Saito thinks is a ploy to gain pity and a job. Saito tells Tsugumo of another samurai, Motome Chijiiwa (Yoshio Inaba), who threatened suicide as a stratagem, only to be forced to follow through on the task. When Tsugumo reveals that Chijiiwa was his son-in-law, the disclosure sets off a fierce conflict.
அகிரோ குரோசாவின் 07 சாமுராய்கள் படத்தைத் தொடர்ந்து அவ்வாறான ஒரு துன்பியல் நிகழ்வை வெளிப்படுத்தும் ஒரு திரைப்படமாக 1962 களில் Masaki Kohayashi யினது இயக்கத்தில் Ginichi Kishimoto அவர்களது தயாரிப்பில் Tatsuya Nakadai மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில்
தனது குடும்ப வறுமை, மனைவி , பிள்ளை இருவரதும் மோசமான உடல்நிலையைக் கவனத்திற்கொண்ட சாமுராய் வீரனொருவன் உதவி பெறுவதற்காக ஒரு சாமுராய் தலைவரது இல்லத்தை நாடி தான் Harakiri எனும் சாமுராய் வீரர்கள் மாத்திரமே புரியும் தற்கொலையை புரிய உதவுமாறு கோருகிறான். அவன் தங்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக வந்துள்ளதாகக் கருதி அவனை உடன் தற்கொலை செய்ய அவ்வீட்டிலுள்ளவர்கள் நிர்ப்பந்தப்படுத்தி மிக மோசமாக அவனை தற்கொலைபுரிய வைக்கின்றனர். அவனது நிலையைப் புரிந்துகொள்ளாது நடந்த சாமுராய் வீரர்களை பழிவாங்குவதற்காக அவனது மாமனாகிய மற்றுமொரு சாமுராய் வீரன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே படத்தின் பிரதான கதைக்கருவாக அமைகின்றது.
இத்திரைப்படத்தின் கதையானது Yasuhika Tukiguchi யினது Ibunronin Ki எனும் நாவலை அடிப்படையாக கொண்டுள்ளது. 1619- 1630 வரையான அமைதி நிலவிய காலப்பகுதியில் ஜப்பானில் தங்களது பிரபுக்களை இழந்த சாமுராய் வீரர்களது கவனிப்பாரற்ற நிலை , வறுமை போன்ற விடயங்களை பொதுமக்கள் மாத்திரமன்றி சக சாமுராய் வீரர்களும் புரிய முயற்சிக்காமை, அவர்களது நிலையை அறிய முயற்சிக்காது அவர்களை ஏளனம் செய்தல், தற்கொலையை அங்கீகரித்தல் என்பவற்றினூடாக அவர்களது நிலை எவ்வளவு மோசமாக காணப்பட்டது என்பதை இத்திரைப்படம் தத்ரூபமாக சித்தரிக்கின்றது.
படத்தின் முடிவில் சாமுராய் வீரர்களும்.. ஏன் அனைத்து மனிதர்களும் நம்மைப் போல் இரத்தம் சதை நிரம்பியவர்களே அவர்களது நிலையை புரிய முயற்சிக்காவிட்டாலும் உபத்திரவம் புரியாது இருப்போம் அதுவே உயிர்களுக்குச் செய்யும் உதவி என்பதை இத்திரைப்படம் கோடிட்டுக் காட்டுகிறது.
இத்திரைப்படம் 08 விருதுகளைப் பெற்றதுடன் 2011 கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜப்பானிய திரைப்பட இயக்குனர் Takashi Miike ஆல் 3D திரைப்படமாக Harakiri- Death of a Samurai எனும் பெயரில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Pragash Sinnarajah
No comments:
Post a Comment