Search This Blog

Tuesday, March 16, 2021

திரை இயக்குநன் எஸ்பி ஜனநாதன்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருந்தவர் எஸ்.பி. ஜனநாதன் (வயது 61).  தஞ்சை மாவட்டம் வடசேரியில் பிறந்த இவர் பி. லெனின், பரதன் ஆகியோரிடம் முதலில் பணிபுரிந்து உள்ளார்.  இதன் பின்னர் இயக்குனரானார்.இவரது இயக்கத்தில் வெளியான முதல் படம் இயற்கை.  தேசிய விருது வென்று அவருக்கு பெருமை சேர்த்தது.  இதன்பின்னர் ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.


இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
திரை இயக்குநன் எஸ்பி ஜனநாதன் என்பவன் தனிமனிதன் அல்ல!
ஒருவர் மரித்துப்போகும் போது தான் புரிகின்றது, அவர் நம் ஆளுமையின் எவ்வளவு பகுதியாகி இருந்திருக்கிறார் என்று.
ஒருவர் மரித்துப்போன பின்பு தான் தெரிகின்றது, அவர் நம் மனதின் எவ்வளவு இயக்கத்தினை நிரப்பியிருக்கிறார் என்று.
திரை இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் ஒரு படத்திற்கு, மற்றவர்கள் பத்து படங்கள் செய்தாலும் ஈடாகாது, இது கலைச்செயல்பாட்டின் பரிமாணத்தினை புரிந்துகொள்வதற்கான அளவு என்று மட்டுமே வைத்துக்கொண்டாலும்.
சென்னையில் எனக்கும் சீனிவாசனுக்கும் உறவு என்றால் அவர் மட்டுமே.
சென்னையில் நாங்கள் காலெடுத்து வைத்தபோது, சென்னையின் கரங்களாகி எங்களை அணைத்துக்கொண்டவர் அவர்.
நண்பர்களே, 61, இறந்து போகும் வயது அன்று. நம் புரிதலுக்கும் நாம் வாழ்வை ஏற்கும் விதத்திலும் நாம் எவரும் தொன்னூறையாவது தொடவேண்டும் என்று நான் அழுத்தம் கொடுப்பேன்.
இன்றைய மருத்துவமனையின் அதிகார, நவீன, புதிர் அமைப்புகளைப் பற்றிப் படம் எடுத்த ஓர் இயக்குநர் இறந்து போன விதம் மனதை மிகவும் துன்புறுத்துவதாக இருக்கின்றது.
ஆனால், இங்கே ‘மருத்துவம்’, என்ற சொல்லைத் தொட்டாலே  எல்லோரும் ஒரே கணத்தில் அதிநவீன மருத்துவ வல்லுநர்கள் ஆகித் தாக்குவதை உணரமுடியும்.
எவ்வளவு குற்றவுணர்வு மேலிடுகிறது என்பதைச் சொல்லி முடியாது. நான் தான் பல முறை எழுதியிருக்கிறேனே, அஞ்சலிகளில் உடன்பாடில்லை என்று.
திரை இயக்குநன் எஸ்பி ஜனநாதன் என்பவன் தனிமனிதன் அல்ல. தொகை மனிதன்.
இன்று அவரைப் பார்த்தபோது, கொஞ்சமாய்க் களைத்து வியர்த்திருந்தது போல் இருந்தார். ஆனால், முகத்தில் அதே  புத்துணர்ச்சி. இன்னும் உயிரின் களை முற்றிலுமாய் நீங்கிப்போயிருக்கவில்லை.
உயிர் காப்போரின் உயிர் கைநழுவிப் போகவிடுவதெல்லாம் நாமன்றி யார் சொல்லுங்கள்!
மானுடத்தின் தீவிர நெருப்பாய்ச் சுடர்விட்டவரை அணைந்துபோகச்செய்ததெல்லாம் நாமன்றி யார் சொல்லுங்கள்!

Kutti Revathi

வழக்கமாக ஜனாசாரை அனைவருக்கும் ஒரு மார்க்சிய சித்தாந்த வாதியாக மட்டுமே தெரியும். ஆனால் அவரிடம் தமிழர் வரலாறு தொன்மம் ,கலை பண்பாடு குறித்த அறிவியல் பூர்வமான தேடலும் நுண்ணறீவும் ஒரு டாக்டர் பட்டம் பெற தகுதியான புத்தகம் எழுதும் அளவுக்கு தகவல்களு,ம் இருந்தது பலருக்கும் தெரியாத விடயம்
.
ராஜ ராஜ சோழன் குறித்த திரைப்படம் ஒன்றுக்காக அவர் தஞ்சை பெரிய கோயில் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் போது தமிழர் கட்டிடக்கலையில் இருந்த வியக்க வைக்கும் மேதமையும் ஆற்றலும் அவரை சிலிர்க்க வைத்துள்ளது . தொடர்ந்து அவர் தமிழ் நாடு முழுக்க பயணப்பட்டு இத்துறை சார்ந்த பல அறிஞர்களை சந்தித்து அவர்களுடன் அவர் கருத்து விவாதம் செய்து தெரிந்துகொண்ட தகவல்களை அவ்வப்போது என்னுடன் பகிரும் போது எனக்கு அது புதிய ஜன்னல்களை திறந்து வைத்தது. வெறுமனே தகவல்களாக இல்லாமல் எந்த துறையாக இருந்தாலும் அதன் எண் தசம விகித கணித இலக்கணங்களுடன் உரிய வார்த்தைகளுடன் துல்லியமாக நமக்கு விளக்க முனைவது அவருடைய உரையடாலில் எனக்கு ஆச்சர்யமளித்த விடயம் .
இவ்வளவு தகவல் தெரிந்து வைத்திருந்தாலும் ஒரு புதிய சிறிய வய்து இளைஞன் அவருக்கு தெரியாத புதிய தகவல்களையோ அல்லது புத்தகத்தையோ சினிமவையோ சொல்ல ஆரம்பித்தால் ஒரு குழ்ந்தை போல அவனை வியந்தோதி என்னாபா பயமுறுத்துறியே என குழந்தையாக மாறிவிடுவார் .
அவருக்கு பலமே அவருடைய உதவியாளர்கள் தான் . ஒவ்வொருவரும் இருபது வருடம் இருபத்தைந்து வருடம் அவருடன் பயணிப்பவர்கள் . எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் இவ்வளவு காலம் ஒரே இயக்குனருடன் பயணிக்கும் உதவி இயக்குனர்கள் அவரிடம் மட்டும் தான் . காரணம் அவரிடம் இருக்கும் கம்யூன் வாழ்க்கை. அவருடைய இருப்பிடமே ஒரு கூட்டுப்பண்ணை வாழ்க்கைதான் . சீமான் அண்ணனுக்கு பிறகு ஒரே சமயத்தில் அனைவரும் வட்டமாக அமர்ந்து சமைத்த உணவை பகிர்ந்து சாப்பிடும் அழகை அவரிடம் மட்டுமே பார்த்து நெகிழ்ந்தேன் .
சிலர் முதல் ப்டத்தின் போது இப்படி ஒரு வாழ்க்கையில் துவங்கினாலும் பேரும் புகழும் பெற்றபின் உதவி இயக்குனர்களோடு பழகுவதில் ஒரு இடைவெளி வெற்றியின் அளவைபோல அதிகரித்துக்கொண்டே இருக்கும் . இந்த சூழலில் வைத்து பார்க்கும் போதுதான் ஜனாசார் தோற்றம் எவ்வளவு உயரம் என தெரிய வரும் . அது போல அவரிடம் எனக்கு ஆச்சர்யமளிக்கும் இன்னொரு விடயம் என்னதான் அவர் ருஷய் இலக்கியங்களின் காதலராக இருந்தாலும் அவரை இயக்குவது என்னமோ தமிழ் சினிமாவின் எம் ஜி ஆர் தான் . ஒரு பககம் தொழில் நுட்பத்தில் அபாரமன அறிவும் நவீன அணுகுமுறையும் அவர் படங்களில் இருந்தாலும் ் அதே அளவுக்கு எம் ஜி ஆரையும் அவரது திரைப்படங்களையும் உள்வாங்கியிருந்தார் . சார் எனக்கு சினிமாவில் குரு எம் ஜி ஆர்தான் நீங்க சீன் சொன்னா எம் ஜி ஆர் படத்துல இந்த மாதிரி சீன் வந்துருக்கா அவர் எப்படி இந்த சீனை பண்ணியிருக்கார்னு பாத்துதான் புரிஞ்சுக்குவேன் .. ஏன்னா அவரை விட இந்த மக்களை புரிஞ்சுகிட்டவங்க வேறு யாருமில்ல என்பார் . இயற்கை ஈ .. பேராண்மை போன்ற படங்களின் வெற்றிக்கும் எம் ஜி ஆர் படங்களுக்கும் இருக்கும் கணித பொருத்தப்பாடுகளை என் சினிமா அறிவை வைத்து எப்படியெல்லாமோ ஆய்வு செய்து பார்க்கிறேன் . அதுதான் ஜனாசாரின் வெற்றி .. இல்லாவிட்டால் பெரிய அறிஞர்களே விளக்க முடியாமல் தடுமாறும் மார்க்சிய தத்துவத்தை பேராண்மை படத்தில் ஜெயம் ரவி மூலம் வகுப்பறை காட்சியில் அத்துணை தெளிவாக பல கோடி மனிதர்களுக்கு கொண்டு சென்றிருக்கிறார் . தமிழ் சினிமாவின் சிறந்த காட்சிகளுள் ஒன்றாக அக்காட்சி இன்றும் பரிணிமித்து வருகிறது . அது போலத்தான் கொரோனாகாலத்துக்கு முன்பே ஈ படத்தின் மூலம் பயோவார் குறித்த தகவலை மிக எளிமையாக எடுத்துச்சொல்லியிருந்தார் .
இந்த சமூக அக்கறையும் எளிய மனிதர்களுக்கான வெளிப்பாடும் தான் ஜனாசார்

Ajayan Bala Baskaran

No comments:

Post a Comment