Search This Blog

Friday, July 5, 2019

தனக்கு மாத்திரமே அனைத்தும் தெரியும் என்னும் அதிமேதாவிகளிற்காக ....



Pragash Sinnarajah
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப்பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய ஜப்பானில் இருந்து ஒரு குழு வந்திருந்தது. அதில் ஒரு 20 வயது மதிக்கத்தக்க ஒருவன். துறுதுறுவென்று எல்லாரிடமும், பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டுமிருக்கிறான்.
இங்கிலாந்து கம்பெனியின் நிர்வாகிக்கு அந்தச் சிறுவனைக் கண்டதுமே ஏனோ பிடிக்கவில்லை. இரண்டொரு நாளில் இன்ஸ்டலேஷன் பணிகள் துவங்க இருக்க, ஜப்பான் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்.
“ஏப்பா.. அவ்ளோ துட்டுப் போட்டு வாங்கிருக்கோம். சர்வீஸ் டீம்ல சின்னப்பையனைலாம் சேர்த்தி அனுப்பிருக்கீங்க? என்ன டூர் வந்திருக்காங்களா? ஏர்போர்ட்ல இருந்து ரூமுக்கு அனுப்ச்சாச்சு. நாளைன்னைக்கு இன்ஸ்டால் பண்றப்ப அந்தப் பையன் மிஷின்ல கைய வைக்கக்கூடாது ஆமா. அதென்ன சின்னப்புள்ளைக சமாச்சாரமா?” - இதுதான் அவர் அனுப்பிய மின்னஞ்சலின் சாராம்சம்.
உடனடியாக பதில் அஞ்சல் வந்தது. “மன்னிக்க வேண்டும். தவறுதான். நாங்கள், அந்தச் சிறுவனுக்கு பதில் கொஞ்சம் சீனியரை டீமுக்கு அனுப்புகிறோம். அந்தச் சிறுவன் அங்கே இருப்பான். ஆனால் கருவியைக் கையாள மாட்டான்” என்று பதில் வருகிறது. சொன்னபடியே கொஞ்சம் வயதில் மூத்தவர் வருகிறார். குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார். அந்தச் சிறுவனும் அவர்களுடன்தான் இருக்கிறான். ஆனால் அந்த மிஷின் வேலை செய்யும் இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளியே அமர்ந்திருக்கிறான். இந்தக் குழுவினார் டீ ப்ரேக், லஞ்ச் ப்ரேக்கெல்லாம் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்து, இரண்டு நாட்களில் இயந்திரத்தை நிறுவிவிடுகிறார்கள். வேலை வெற்றிகரமாக முடிந்துவிடுகிறது.
வழியனுப்பும்போது, இந்த இங்கிலாந்து கம்பெனி நிர்வாகிக்கு சின்னதாக ஒரு குற்ற உணர்வு. என்ன இருந்தாலும் அவ்வளவு கடுமையாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கக்கூடாது என்று தோன்றுகிறது. அந்தச் சிறுவன் அவன் பாட்டுக்கு சிரித்த முகத்துடனேயே வளைய வருகிறான். அவனிடம் இதைச் சொல்லிவிட்டால் மனது லேசாகிவிடும் என்று உணர்கிறார். குழுவினர் எல்லாரும் இருக்க, சொல்கிறார்:
“ஸாரி.. ஆக்சுவலி பலகோடி ரூபாய் ப்ராஜக்ட். இன்ஸ்டால் பண்றப்ப எதும் சிக்கல் வந்தா அப்பறம், பணம் நேரம்னு பெரிய நஷ்டமாகிடும். அதான் கொஞ்சம் சீனியர் வேணும்னு கேட்டேன். மத்தபடி ஐ லைக் த பாய். துறுதுறுன்னு இருக்கான். ஆனா இந்த டீம்ல இப்படி ஒரு சின்னப்பையன் வந்தது எனக்கு சரின்னு படலை. அதான்..” என்று பாலிஷாகச் சொல்கிறார்.
அந்தச் சிறுவன் அதே புன்னகையுடனே இருக்க, புதிதாக வந்தவர் சொல்கிறார். “இட்ஸ் ஓகே சார். நாங்க வாடிக்கையாளர் கருத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்போம். நீங்க சொன்னதுமே என்னை அனுப்பி வெச்சாங்க. இப்ப மிஷின் நல்லபடியா இன்ஸ்டால் செஞ்சு, ஓடிட்டிருக்கு. ஆனா ஒரு விஷயம்..” தயங்குகிறார்.
”பரவால்ல.. எதாருந்தாலும் சொல்லுங்க”
“நான் அந்தக் கம்பெனில அக்கவுண்ட்ஸ்ல வொர்க் பண்ற ஆளுதான். எனக்கு இந்த மிஷின் பத்தி ஏபிசிடிகூட தெரியாது”
நிர்வாகி அதிர்ச்சியாகிறார். “அப்பறம் இன்ஸ்டலேஷனப்ப வேலை செஞ்சுட்டிருந்தீங்க?”
“இந்தப் பையன்கிட்ட போய்ப் போய்க் கேட்டு அவன் சொல்றத மட்டும் பண்ணினேன் அவ்ளதான்”
“அந்தப் பையன் எப்படி மிஷின் பக்கமே வராம, உங்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் குடுத்திருக்கமுடியும்?”
“முடியும். ஏன்னா, இந்த மிஷினைக் கண்டுபிடிச்சதே அவன்தான்”

No comments:

Post a Comment