Search This Blog

Tuesday, July 2, 2019

சொந்தமாக தொழில் தொடங்க இருப்பவருக்கு மிக முக்கியமான ஆலோசனை என்ன“?!

பலர் என்னிடம் கேட்கும் கேள்வி „சொந்தமாக தொழில் தொடங்க இருப்பவருக்கு நீங்கள் கூறும் மிக முக்கியமான ஆலோசனை என்ன“?!
இந்தக் கேள்விக்கான மறுமொழியை பல வழிகளில் கூறலாம்…
சொந்தமாக தொழில் என்றவுடன் எம் கண்ணுக்கு வருவது ஒரு பலசரக்கு கடை அல்லது வீட்டில் வைத்து செய்யும் ஏதேனும் ஒரு தயாரிப்பு…
ஆனால் இன்றைய உலகில் சொந்த தொழில் என்பது மிகவும் பரந்த பல்வேறு துறைகளை உள்ளடக்கியது.
ஒரு நூலில் நான் படித்தது ஆனால் மிகவும் சரி என்று எனக்கு பட்டது, நான் படித்திருந்தது உங்களுக்கு உதவலாம்..
அந்த நூலின் ஒவ்வொரு பக்கங்களும் தொழிலின் தோல்வியைப் பற்றி மட்டுமே பேசுகின்றன.. இந்த உலகில் மனிதன் தொடங்கும் ஒவ்வொரு தொழிலும் தோல்வியிலேயே முடிகிறது என்று அந்த நூல் சொல்கிறது… எவ்வளவு நாட்கள் கழித்து அந்த தொழில் தோல்வியில் முடிகிறது என்பதே அந்த தொழிலின் வெற்றியாகும்..
சமீபத்தில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் அளித்த பேட்டி ஒன்றை நான் காண நேரிட்டது.. அதில் அவர் உறுதியாகச் சொல்கிறார் அமேசான் ஒரு நாளில் தோல்வியில் முடியும் என்று!! இதன் போது என் கண்முன்னே வந்துபோன காட்சி Ceylinco House(Ceylinco Consolidated) நிறுவனமும் அதன் உரிமையாளர் Lalith Kotelawala அவர்களும்தான்.
இதிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நான் கற்றுக்கொண்ட ஒரு செய்தி என்னவென்றால் நான் செய்யப்போகும் எந்த ஒரு தொழிலும் இறுதியில் தோல்வியில் முடியப்போகிறது. அதை ஏன் மிகப்பெரிய தொழிலாக செய்து என்றோ ஒரு நாள் பெரிய தோல்வியை நோக்கி என் தொழிலை நடத்த கூடாது.….
________________________________________________
ஒரு இடத்தில் சின்ன பெட்டிக்கடை வைக்க முயற்சி/ முடிவு செய்துவிட்டால் ஒரே ஒரு பெட்டிக்கடை மட்டும் வைக்காதீர்கள். குறைந்தபட்சம் 5 அல்லது 6 பெட்டிக்கடைகளை ஒரே வரிசையில் வையுங்கள்.. ஒரு பெட்டிக் கடைக்கு தான் விளம்பரம் என்றும் ஒரே இடத்தில் 5 பெட்டிகடைகள் இருந்தால் மக்கள் தன்னை அறியாமல் அந்த இடத்தை நோக்கி நகர்வார்கள். .

எடுத்துக்காட்டாக BBK, BDP, RENO, MobiFlip மற்றும் OPPO ஒரே நிறுவனத்தின்(Oppo Electronics) அலைபேசி..
Lenova, Medion Motorola, BLADE, ShenQi, Quantum மற்றும் Stoneware ஒரே நிறுவனத்தின் தலைமை நிறுவனமாக கொண்டவை.
நீங்கள் WhatsUp பயன்படுத்தினாலும் அல்லது பேஸ்புக்கின் Messangerரை பயன்படுத்தினாலும் நீங்கள் சுற்றி சுற்றி ஒரே நிறுவனத்தின் பொருளையே பயன்படுத்துவதற்கு பழக்கப்படுத்தப்படுகிறீர்கள்.
_____________________________________________
வேறுபட்ட ஒரு தொழிலை தேர்ந்தெடுங்கள். இந்தத் தொழில் மக்களுக்கு இருக்கும் ஏதேனும் ஒரு சிக்கலைத் தீர்க்க இருக்க வேண்டும்..

அதாவது இன்னொரு விதத்தில் சொல்லப்போனால் நீங்கள் காட்டாத வரை மக்களுக்கு என்ன வேண்டும் என்று அவர்களுக்கே தெரியாது.
எனவே கூடுமானவரை இதுவரை அங்கு கிடைக்காத பொருளை அங்கு விற்கவே படாத பொருளை விற்க முயற்சி செய்யுங்கள் அது உறுதியாக விற்கும்.. ஏனென்றால் மக்கள் ஏற்கனவே கிடைக்கும் பொருளை பார்த்து வெறுப்படைந்து விட்டார்கள்..
எவ்வளவுதான் இட்லியும் தோசையும் சத்துள்ள உணவு என்றாலும் அதன் மீதும் ஒரு நாள் நமக்கு வெறுப்பை வரவே செய்கிறது
இப்படி மேலைநாடுகளில் அவர்களின் உணவுப் பழக்கத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பு புதிதாக உணவு முறைகளை கண்டு பிடிக்கச் செய்தது… அப்படி வந்ததுதான் இந்த Pizza, Burger, Cock, Fanta மற்றும் பல…
_________________________________________
நீங்கள் வலிமை உள்ளவராக மாறுவதற்கான ஒரே வழி அடுத்தவருக்கு உதவி செய்வது மட்டுமே ஆகும்…இதுதான் எனது வளர்ச்சியின் சூத்திரம்!!

உங்களைப் போன்றே தொழில் செய்ய முயலும் உங்கள் பகுதியில் உள்ள சிறு-குறு சேவை வழங்குபவர்களை ஒன்று சேர்க்க முயலுங்கள்…
உதாரணமாக விவசாயம், ஏற்றுமதி தொழிலில் விளங்கும் தொழிலாளர்களை ஒரு செயலி கொண்டு வந்து அதன் மூலம் அவர்களுக்கு அதிகமான தொழிலை பெற உதவுங்கள்..
இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே இதுபோன்று ஒவ்வொரு தொழிலும் உங்களால் ஒருங்கிணைக்கப்பட்டு பலரும் பலன்களை பெறலாம்…
________________________

வேலையை அனுபவித்து அதற்கு இலக்கு வைத்து செயல்படுங்கள் என்பதுதான் தொழில்முனைவோர்களுக்கு நான் சொல்ல விரும்புவது.
வேலையை ஈடுபாட்டுடன் செயல்பட்டால், பணம் புகழ் என அனைத்தும் கிடைத்துவிடும். ஆனால் பணத்தை இலக்காக கொண்டு செயல்பட தொடங்கினால், நீங்கள் நினைத்த பணம் கிடைத்த பிறகு உங்களுக்கு அந்த தொழில் மீது ஆர்வம், நம்பிக்கை, மரியாதை குறைந்துவிடும்.
புலோலியூரான்/யோகீசன்

No comments:

Post a Comment