பன்னிரு திருமுறைகள் என்று கூறப்படும்
சைவத் திருமுறைகள் , பல சிவபக்தர்களால் (நாயன்மார்கள்) இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்
சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை திருமுறைகள் என்றும் அறியப்படுகின்றன. இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
1. முதல் திருமுறை ( சம்பந்தர் அருளியது)
2. இரண்டாம் திருமுறை ( சம்பந்தர் அருளியது)
3. மூன்றாம் திருமுறை ( சம்பந்தர் அருளியது)
4. நான்காம் திருமுறை ( அப்பர் அருளியது)
5. ஐந்தாம் திருமுறை ( அப்பர் அருளியது)
6. ஆறாம் திருமுறை ( அப்பர் அருளியது)
7. ஏழாம் திருமுறை ( சுந்தரர் அருளியது)
8. எட்டாம் திருமுறை ( திருவாசகம் ,
மாணிக்கவாசகர் அருளியது)
மாணிக்கவாசகர் அருளியது)
9. ஒன்பதாம் திருமுறை (ஒன்பதின்மர் அருளியது)
10. பத்தாம் திருமுறை ( திருமூலர் அருளிய திருமந்திரம்)
11. பதினொன்றாம் திருமுறை (சிவனடியார் 12 பேர் அருளியது)
12. பன்னிரண்டாம் திருமுறை ( சேக்கிழார் அருளிய பெரியபுராணம்)
10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.
10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.
சிவாயநம
அன்பே சிவம்
அன்பே சிவம்
No comments:
Post a Comment