Search This Blog

Thursday, May 25, 2017

குறியியல்-அறிமுகம்

(மொழிபெயர்ப்பு) Mubeen Sadhika

குறிப்பான் மற்றும் குறிப்பீடு என்ற சொற்களின் தேர்வு மூலம் 'ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துக் காட்டும் வேறுபாட்டை'ச் சுட்டிக்காட்ட முடிகிறது என சசூர் குறிப்பிட்டார்(சசூர் 1983,67; சசூர் 1974, 67). இத்துடனும், குறியின் வரைபடத்தில் இருக்கும் கிடைக்கோட்டுடனும், சசூர் ஒலியும் சிந்தனையும்(அல்லது குறிப்பானும் குறிப்பீடும்) ஒரு தாளின் இரு பக்கங்கள் போல் பிரிக்க முடியாதவை என்று சசூர் வலியறுத்தினார்(சசூர் 1983, 111; சசூர் 1974, 113). அவை மூளையில்... 'நெருங்கிய தொடர்பை' 'ஒரு தொடர்புச் சங்கிலிபோல்' கொண்டிருக்கின்றன-'ஒன்று மற்றொன்றைத் தூண்டுவதாக' உள்ளன என்றார்(சசூர் 1983, 66; சசூர் 1974, 66).

இந்தக் கூறுகள் முழுமையாகச் சுதந்திரமானவை என்றும் ஒன்று மற்றொன்றுக்கு முந்தி இருப்பதில்லை என்றும் சசூர் விளக்குகிறார்(சில்வர்மேன் 1983, 103). வாய்மொழிப் பேச்சில் ஒரு குறி உணர்வற்ற ஒலியாகவோ அல்லது ஒலியற்ற உணர்வாகவோ இருக்கமுடியாது. அவர் இரு அம்புக்குறிகளை அவற்றின் பரிமாற்றத்தைக் குறிக்கப் பயன்படுத்தினார். வரம்பும் எதிர் அம்பும் குறிப்பானும் குறிப்பீடும் ஆய்வு நோக்கங்களில் தெளிவாக விளக்கப்படுவதைக் குறிக்கின்றன.
பின் அமைப்பியல் கோட்பாட்டாளர்கள் சசூரிய குறி மாதிரியில் உள்ள கிடைக்கோடான வரம்பைத் தெளிவான பிளவாக-குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையிலுள்ள பிளவாகக் காட்டுவதாக விமர்சித்தார்கள்; அவர்கள் அதை மங்க வைத்து அல்லது அழித்து குறி அல்லது அமைப்பியல் உறவின் புதிய வடிவத்தை உருவாக்க விரும்பினார்கள். சில கோட்பாட்டாளர்கள், 'குறிப்பான் எப்போதும் குறிப்பீட்டிலிருந்து தனித்திருக்கும்...அது தனக்குரிய சுயச்சார்பைக் கொண்டிருக்கிறது' என்றும் விவாதித்தார்கள்(லெக்ட், 1994, 68), இந்தக் குறிப்பு குறியின் இடுகுறித் தன்மை பற்றியதாக இருக்கிறது. அதைப் பின்னர் விவாதிக்கலாம்.

பொதுப்புத்தியின் படி குறிப்பீடு முன்பே இருப்பது போலவும் குறிப்பானுக்கு முன்பே இருப்பது போலவும் தோன்றுகிறது:'உணர்வை பார்த்துக்கொள்ளவேண்டும்,' என்றார் லூயிஸ் கரோல், 'ஒலிகள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும்(ஆலிஸின் விந்தை உலகத்தில் சாதனைகள், இயல் 9) என்றும் கூறுகிறார். இருந்தாலும், சசூருக்குப் பிந்தைய கோட்பாட்டாளார்கள் குறிப்பானுக்கு உள்ளார்ந்த முக்கியத்துவம் தரும் மாதிரியாக சசூரின் மாதிரியைப் பார்த்தது பொதுபுத்தியின் நிலைப்பாட்டுக்கு நேரெதிராக இருந்தது.
லூயி ஹெல்ம்ஸ்லெவ், 'வெளிப்பாடு' மற்றும் 'உள்ளடக்கம்' என்ற சொற்களைக் குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் முறையே பயன்படுத்தினார்(ஹெல்ம்ஸ்லெவ் 1961, 47எஃப்எஃப்). குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையிலுள்ள வேறுபாடு சில சமயங்களில் 'வடிவம் மற்றும் உள்ளடக்கம்' என்ற பிரபலமான இரட்டையுடன் இணையாக்கப்படும். அது போன்ற கட்டமைப்பில் குறியின் வடிவமாகக் குறிப்பானும் உள்ளடக்கமாகக் குறிப்பீடும் பார்க்கப்படுகிறது.
இருந்தாலும், வடிவம் என்பதற்குரிய உருவகமான 'பாத்திரம்' என்பது சிக்கலைத் தரும், ஏனெனில் பொருள் என்பதற்கு நிகராக உள்ளடக்கம் இருப்பதால் அதனை ஆதரிப்பதாக இருக்கும். இது 'விளக்கம் தருவதற்கு முனைந்தச் செயல்பாடிலில்லாமல்' பொருளைப் 'பிரித்தறிய' உதவும் என்றும் அதனால் வடிவம் பொருளாம்சம் தருவதல்ல என்றும் அர்த்தம் கொள்ளப்படக்கூடும்(சாண்ட்லர் 1995 104-6).

No comments:

Post a Comment