Search This Blog

Wednesday, May 17, 2017

கலைவேந்தன் ம.தைரியநாதன் அவா்கள் (16.05.2017) காலமானார்

ஈழத்து இசைநாடக வரலாற்றில் தனிமுத்திரை பதித்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக முழுநேர இசைநாடகக் கலைஞனாக வாழ்ந்து தன்னையும் தனது குடும்பத்தையும் நாடகக் கலைக்கென்றே அர்ப்பணித்த மாபெரும் இசைநாடக கலைஞன்.
.
இனிமையான கம்பீரக் குரலும் அட்சரம் பிசகாத நடிப்பும் சுருதி தாளம் தப்பாத இசைத்திறனும் அரங்கைத் தன்வசப்படுத்தி விடும் ஆளுமையும் கொண்டதொரு மரபு வழிக் கலைஞன் ஈ
...ழத்து இசைநாடகத் துறையின் முது கலைஞனாகவும் நடிகமணி வைரமுத்துவின் வழி வந்த துறைதோய்ந்த பட்டறிவாளனாகவும் ஈழத்து இசைநாடகக் கலையின் அடையாளமாகவும் வாழ்ந்தவா். தமிழா்களின் தேசியக் கலைச் சொத்தாகத் திகழ்ந்தவா்.

ஆற்றுகையாளனாக மட்டுமல்லாமல் இசைநாடகத்தை அற்புதமாகக் கற்பிக்கும் பேராற்றல் கொண்ட ஆசானாகவும் நெறியாளனாகவும் நின்று நிலைத்தவா்.
முழுமை கண்ட இசைநாடகக் கலைஞன் ஏனெனில் நடிகமணி வைரமுத்து அவா்களின் காலத்தில் அவரோடு நூற்றுக்கணக்கான மேடைகள் கண்ட கலைஞராக விளங்கியவர்.

நகர்ப்புற அரங்குகளில் மட்டும் நாடகம் நிகழ்த்திப் பெயா் பெற்ற கலைஞன் அல்ல தைரியநாதன். ஈழத்தின் கிராமங்கள் அனைத்திற்கும் சென்று நாடகம் நடித்தஇ ஆயிரக் கணக்கான மேடைகள் கண்ட அதி அற்புதக் கலைஞனாக வரலாறு படைத்தவா் . நாடக மேதை நடிகமணி வி.வி.வைரமுத்துவின் மாணவனாக தன் கலைப் பணியைத் தொடங்கிய தை ரியநாதன் அவர்கள் திருமறைக் கலாமன்றத்தின் ஊடாக நாடக பணியாற்றினார். .1997 , 1998 காலப்பகுதிகளில் திருமறை கலாமன்றத்தின் 'வடலிக் கூத்தர்' கலைக்குழுவில் மிக முக்கிய வகிபாகம் ஏற்று எமது பாரம்பரியக் கலைகளை ஐரோப்பிய நாடுகள் வரை காவிவந்து கடத்துகை செய்த ஒப்பற்ற கலைஞர் இவர்.

No comments:

Post a Comment