Search This Blog

Friday, June 17, 2016

Marathi movie Court திரைப்படம் : கோர்ட்




திரைப்படம் : கோர்ட்
இயக்கம் : சைதன்ய தமானே
மராட்டி மொழி (ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன்); 1 மணி நேரம், 58 நிமிடம்; 2015

 கிண்டல், கேலி மாதிரி ஒரு அட்டகாசமான உணர்வு எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன், மனிதனுக்கு மட்டுமே உள்ள ஸ்பெசல் உணர்வு அது.

கோர்ட்'ன்னு ஒரு மராத்தி படம் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கான கடைசி சுற்றுக்கு போயிருக்குன்னு கேள்விபட்டு அதை பார்த்தேன்.. செமயான Sattire - Sarcasm flow... எப்படி விவரிக்கிறதுன்னே தெரில...

இந்தியாவின் red-tapism முறையை ஓட்டு ஓட்டுன்னு சீரியஸா ஓட்டுறாங்க... ரொம்ப மெதுவா போற படம், ஆனா ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிக்கும் எகத்தாளம், கிண்டல்.. படம் முழுக்க சீரியஸா போகும் ஆனா நம்ம முகத்துல புன்னகை தான் இருக்கும்...

எந்த காட்சிக்கும் விளக்கம் கிடையாது, ஜட்ஜ் ஒரு சீரியஸ் விவாதம் பண்ணும் போது அவருடைய உதவியாளர் பின்னனியில் மொபைல் ஸ்க்ரீனை பாத்துட்டு இருப்பது கிண்டல்ன்னா அந்த பொண்ணு முகத்துல இருக்கிற புன்னகை மகா கிண்டல்...

ஒரு கேஸ் அறிமுகம் ஆன உடனே ஜட்ஜ் இன்னிக்கு உங்க கேஸ் விவாதம் பண்ண முடியாது உங்களுக்கு வாய்தா தாறேன்னு சொல்வார்.. அந்த பொண்ணு எதுக்கு சார்ன்னு கேக்கும் அதுக்கு ஜட்ஜ் சொல்ற பதில் " நீ ஸ்லீவ்லெஸ் சட்டை போட்டிருக, இது கோர்ட்டை அவமதிக்குது'ன்னு.

சரமாரியா சரவெடி லந்துகள்... படத்துல இன்னோரு அம்சம் அதன் இயற்கையான சவுன்ட். தேவையில்லாத இசை எங்குமே இல்லை.. அதனால படத்தோட நாம ஒன்றிடறோம், எந்த அளவுக்குன்னா ஒரு காட்சியில கோர்ட் ரூம் லைட்டை எல்லாம் அணைச்சிட்டு பணியாளர் கதவை மூடிட்டு போவார், நாம ரூமுக்குள்ள இருக்க இவர் கதவை மூடுறாரேன்னு தோணும். அந்த அளவுக்கு...

படத்தோட கதையே செம நக்கல், ஒரு துப்புரவு தொழிலாளி குழிக்குள்ள இறங்கி துப்புரவு செய்யும் போது இறந்துடுறார், அவர் எந்த பாதுகாப்பு சாதனங்களும் அணிந்திருக்க வில்லை. அதுக்கு 1008 காரணம் இருக்க அதை எல்லாம் விட்டுட்டு அரசாங்கம் அந்த ஏரியாவில் தெருப்பாட்டு பாடும் ஒருத்தரை கைது செய்கிறது. அது சொல்லும் காரணம் இவர் பாடிய பாட்டில் இருந்த கருத்தினால் தான் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார் என்பது.

அந்த காரணத்தை நியாயபடுத்த அரசு தரப்பு எடுக்கும் கோமாளி கூத்துகள் தான் படம். ஆனால் எந்த இடத்திலும் இது புரிய வைக்க முயற்சி இல்லை.. திரைப்படம் அதன் போக்கில் இயங்கி நம்மை உள்ளே இழுக்கும் வகையில் ஒரு மேக்கிங். அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

கதைச் சுருக்கம் :
நாராயண் காம்ப்ளே எனும் ஒரு வயதான, மராட்டிய நாட்டுப்புறப் பாடகர் மீது ஒரு விசித்திரமான வழக்கு பதிவு செய்யப் படுகிறது. அவர் பாடிய ஒரு பாடலைக் கேட்டு மலக்குழியில் வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார் என்பது தான் அந்த வழக்கு.
நாராயண் காம்ப்ளேவுக்கு ஆதரவாக வினய் வோரா எனும் வசதியான, மெத்தப் படித்த வழக்கறிஞர் வாதாடுகிறார்.
அரசு வழக்கறிஞராக நூதன் எனும் பெண் வாதாடுகிறார். காம்பளே பற்றியும் இந்த வழக்கின் அனர்த்தம் பற்றியும் எந்த அக்கறையும் கொள்ளாமல், எப்படியாவது பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிற மத்தியத் தர வாழ்க்கை வாழ்கிற, குடும்பம், வேலை இவற்றுக்குள் அல்லாடுகிற பெண்மணி.
இவர்களை எதிர்கொள்கிற நீதிபதி சதாவர்தே எதைப் பற்றியும் கவலைப் படாமல் தனது பழமை வாய்ந்த மதிப்பீடுகளையும் சட்டப் புத்தகத்தையும் நிலைநாட்ட முனைபவர்.
இந்த வழக்கைச் சுற்றியே அமைக்கப்பட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த, எள்ளல் நிறைந்த, நம்மை மூச்சு முட்ட வைக்கிற திரைக்கதை கொண்ட யாரையும் வில்லனாகக் காட்டாத, நீதித்துறை எனும் எந்திரம் எதிர்கொண்டிருக்கும் வியாதியை வெளிக்கொணரும் படம் இது.
கதாப்பாத்திரங்களின் பின்புலம், தனிப்பட்ட வாழ்க்கை அவர்களின் வேலையிலும் பிரதிபலிப்பதை நாம் உணரமுடிகிறது.
ஆனந்த் பட்வர்த்தனின் "ஜெய்பீம் காம்ரேட்" எனும் ஆவணப்படமும் மும்பையில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் துப்பாக்கி சூட்டைக் கேள்விப்பட்டு மனம் வெறுத்துப்போன விலாஸ் கோக்ரே எனும் இடதுசாரி அரசியல் பாடகரின் தற்கொலையிலிருந்து தான் தொடங்கும்.
கோர்ட் எனும் இந்த முழுநீளத் திரைப்படமோ ஒரு பாடகரின் புரட்சிப் பாடலைக் கேட்டு ஒரு துப்புரவுத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார் என்று தொடங்கும்.
கோர்ட் வெனிஸ், வியன்னா, ஹாங்காங், மும்பை, மாஸ்கோ, சிங்கப்பூர், மெக்சிகோ திரைப்பட விழாக்களில் விருது பெற்றது.
சிறந்த படத்திற்கான தேசிய விருதும் பெற்ற படம் கோர்ட்.
இந்தியா சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படம்.







A courtroom drama usually offers at least some of the following elements: a fiery orator, high stakes, an evolving case, thrilling arguments and some degree of resolution—even if it’s not a happy one. “Court" offers none of these elements. The oration from the lawyers practically dares you to stay awake. The case itself is jaw-dropping in its staidness. The arguments are routinely filled with jargon, and this jargon may even be irrelevant. For most of its 116-minute runtime, a resolution appears quixotic.
And yet, Indian filmmaker Chaitanya Tamhane’s first feature is a masterpiece, one of the best films of the year. How did this happen?
“Court” deals with an aged Marathi folk singer living in Mumbai, Narayan Kamble, who’s arrested on a bizarre accusation. The state alleges that a song he performed drove a manhole cleaner to commit suicide, and that he is therefore responsible for the man's death. The case comes to the attention of Vinay Vora (Vivek Gomber), a well-educated and well-off lawyer who picks up Narayan’s fight. He’s up against the public prosecutor Nutan (Geetanjali Kulkarni), who couldn’t be bothered with the plight of Narayan or the logic of the case. Together they’re in front of Judge Sadavarte (Pradeep Joshi), who doesn’t care for anything except upholding his archaic morals and interpretation of the law. In the funniest scene in this surprisingly funny film, the Judge refuses to hear a case because the plaintiff, a woman, is wearing a sleeveless top. There are times when it feels as though the real accused in "Court" are India's judicial system and society.
Nearly 60 years ago, Sidney Lumet locked the “12 Angry Men” of a jury inside one room. The setting’s claustrophobic nature would help viewers understand why people’s lives deeply influenced how they interpreted the law and cold, hard facts. Tamhane takes the opposite means to achieve a similar end. His script, carefully structured but not gaudily so, considers the characters’ lives outside the courtroom as essential to comprehending what they do once inside it. This approach is integral to the movie’s humanistic tone. No character is a villain hell-bent on destroying Narayan’s life. They are all just cogs in an unfair machine.
The viewers follow Vora as he attends a posh club with his bourgeois friends, and shops for cheese and wine without looking at the price tags. Clearly, he can afford to pick up a case so obviously headed towards a dead-end, and no wonder he continues speaking English in the courtroom even though it wins him neither favor nor friend. “Court” also shows Nutan for who she might be in real life: a competent woman who tries to juggle her professional duties with her responsibilities as a mother and wife, all while working for a promotion. Forget ignoring the price tags, for her even using olive oil in cooking is a matter of fantasy to be discussed with commute buddies.
There is a moment where it feels like “Court” could end. It seems to have made a point. The viewer has understood what this universe entails. And the filmmaking builds up to a memorable closing shot. But then the film goes on. Over a coda that’s perplexing at first, Tamhane unveils his trump card. With a series of scenes that are remarkable in their assuredness, he underlines, emboldens, and italicizes the purpose of his film.
The acting elevates the words on the page and makes them sing. Gomber, who also produced the film, brings a sense of lumbering calm to his affluent lawyer character. At one point, after being shockingly reminded of what a regressive environment he lives in, he breaks down. It’s not just his sadness that’s moving; it’s his exhaustion. Kulkarni is pitch-perfect as a middle-class Maharashtrian woman. The way she reads out the list of charges against the accused in fluent but monotonous English, only to segue into Marathi when she’s done, is hilarious in its accuracy. Some cast members were untrained, non-professional actors. In the case of the woman who plays the deceased’s widow, it’s eerie how unaffected the scene is before you realize that it’s reality. (The woman is widowed in real life. Her husband was a manhole worker.)
The seemingly interminable drawl of the case is echoed in the filmmaking style, with cinematographer Mrinal Desai utilizing lengthy, static takes. Scenes continue a few seconds or even minutes after the point where other filmmakers might have opted to cut. This ends up adding to the film’s authenticity; the action doesn’t feel directed by force as much as it feels captured by fluke. It’s also a showcase for the impeccable detailing in the film’s environment. As one character gets assaulted outside a restaurant, the framing allows you to see the security guard escape into the safety of the building, while the unending take forces you to watch what he’s successfully hiding from.

That, perhaps, is why “Court” ends up being a great courtroom drama: it treats the audience as both witness and jury and lays out a sprawling argument for them to ponder over. It’s hard to shake this one off long after the credits have rolled.


No comments:

Post a Comment