இன்றைவரை பலருக்கு தெரியாத,,பலர் இப்பவும் இளையராஜா இசை அமைத்த பாடல் என்று நினைக்கும் " ஆவாரம்பூவு ஆறேழு நாளா ....." பாடல் கேட்கும்போது எல்லாம் நினைப்பது இதை இசை அமைத்த வி எஸ் நரசிம்மன் ஏன் தமிழ் சினிமாவில் இசை அமைக்கும் விதி இல்லாமல் போன நிகழ்வு .
இசைஞானி இளையராஜாவின் முக்கிய வயலின் கலைஞ்சராக நிறையப் பாடல்களின் பின்னால் ஆஸ்தான கெளரவத்தோடு இருந்த வி.எஸ்.நரசிம்மன் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய "அச்சமில்லை....அச்சமில்லை.." படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டவர்
தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகப் பணியாற்றியது மிகச் சொற்பப் படங்களே. " அச்சமில்லை அச்சமில்லை " , " புதியவன் " , " ஆயிரம் பூக்கள் மலரட்டும், " " கல்யாண அகதிகள் " போன்ற படங்களோடு அவர் இசை அமைப்பு முடிந்து விட்டது.
வி.எஸ்.நரசிம்மன் தமிழ் சினிமாவில் வரும் பாடல்களுக்கு அதன் பின்னணி இசைகளுக்கு வயிலினை வைச்சு இழுத்தாலும் அவருக்கு மேலைத்தேய கிலாசிக்கள் இசை வடிங்களில் பயங்கரமான அறிவு இருக்கு.அதன் நுணுக்கம் எல்லாம் மிகத் தெளிவாகத் தெரிந்த ஒருவர்.
அவரோட இளமைக் காலத்தில் கமலஹசனை விட அழகான ஒருவர். அவரை ஏன் தென்னிந்திய தமிழ் சினிமா ஒரு ஹீரோவாகக் கொண்டுவரவில்லை என்பது போன்ற குழப்பங்கள் நிறையவே இருக்கு. பிரதாப் போத்தன் போல அவரின் முகத்தில் ஒருவித கவர்ச்சி இருந்து இருக்கு அவரின் அந்தக்கால புகைப்படங்கள் பார்க்கும்போது
இளையராஜாவின் " How to name it " அல்பம் இசைத் தொகுப்பில் வரும் அவரின் வயலின் சத்தம் மெட்ராஸ் சேம்பர் இசைக்குழு (Madras Chamber Orchestra)எனும் கிளாசிகல் வயலின் குழுவில் வயலின் கலைஞராக இருந்துள்ளதோடு அடங்கிப் போய் விட்டது...."
ஆவாரம்பூவு ஆறேழு நாளா..." பாடல் ஒரு வித்தியாசமான பாடல் அது இசை அமைக்கப்பட்ட விதம் ஒரு அத்புதம்,,,ஒரு கிராமத்து பெண்ணின் காத்திருந்த காதல் ஏக்கத்தை ஸ்ட்ரிங்ஸ் என்ற வயலின் போன்ற வாத்தியங்களில் பின்னி எடுத்த கவிதை இந்தப் பாடல்,,,இந்தப் பாடலில் அருமையான பேஸ் கிட்டார் ட்ரக் இருக்கு பாடல் முழுவதும் .
No comments:
Post a Comment