Search This Blog

Wednesday, December 30, 2015

அமெரிக்கக் குடியரசுத் தலைவரைச் சந்திக்கவுள்ள மகீசன் ஞானசேகரன், யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த மகீசன் ஞானசேகரன் அமெரிக்கக் குடியரசுத் தலைவரை நேரில் சந்திக்கும் பேறுற்றார்.
அமெரிக்கக் குடியரசுத் தலைவரைச் சந்திக்கவுள்ள மகீசன் ஞானசேகரன், யாழ்ப்பாணம், அளவெட்டி, அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்டு, இப்பொழுது அமெரிக்காவின் நியூ சேர்சியில் (New Jersey) வசிக்கும் ஞானசேகரன்-நிர்மலா இணையரின் மகனாவார்.
அனைத்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இடையிலான கல்வித்திறன், சமூகப்பணி ஈடுபாடு, மற்றும் மாணவ தலைமைத்துவம் ஆகிய பல்துறைத் தெரிவுப் போட்டிகளை 2015ஆம் ஆண்டுக்காக நியூ சேர்சிக் கல்வித் திணைக்களம் நடாத்தியது. அனைத்துத் துறைகளிலும் மகீசன் ஞானசேகரன் முதல் இடங்களைப் பெற்றார்.
அமெரிக்க குடியரசுத் தலைவர் பராக்க ஒபாமா Barack Obama சிறப்பிக்கும் நிகழ்வில் பங்கேற்க 2016 பங்குனி 5ம் நாள் அமெரிக்கத் தலைநகரில் (Washington D.C .) அமைந்துள்ள வெள்ளை மாளிகைக்கு (White House) அழைத்துள்ளனர்.
உயர்கல்விப் பெறுபேறு மற்றும் மாணவத் தலைமைத்துவத் திறன் அடிப்படையில் தெரிவு செய்து அமெரிக்க குடியரசுத் தலைவர் சிறப்பிக்கும் முதல் தமிழ் மகன் என்ற பெருமையும் புகழும் மகீசன் ஞானசேகரன் ஊடாக யாழ்ப்பாண மண்ணுக்கு சென்றடைகிறது.
அமெரிக்கத் தலைநகரில் தங்கியிருக்கும் ஒரு வார காலத்தில் மகீசன் ஞானசேகரன் அமெரிக்க குடியரசுத் தலைவர், மாநில அவை, நாடாளுமன்றம் Senators, House of Representatives ஆகியவற்றின் உறுப்பினர், உயர்மட்ட அரசியல் வல்லுனர்களைச் சந்திப்பார். மாணவத் தலைமைத்துவத் திறனின் சிறப்பு மற்றும் மாணவர்களின் உயர்கல்வி தொடர்பாகக் கலந்துரையாடுவார்.
அண்மையில் நியூ ஜெர்சியில் நடந்த பல்கலைக்கழகத் தெரிவுப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மகீசன், அமெரிக்க டாலர் $ 5000 பல்கலைக் கழக புலமைப்பரிசிலுக்கும் உரித்துடையவராகி, உலகின் முன்னிலைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான பிரின்சுடன் பல்கலையில் Princeton University யில் நான்கு ஆண்டுகாலப் பட்டப்படிப்பை தொடரவுமுள்ளார்.
மகீசன் போன்ற திறமையுள்ள தமிழ் மாணவர்கள் புலம் பெயர் நாடுகளில் மென்மேலும் உருவாகி எமது தாய் நாட்டுக்கும் தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துத் தர ஆண்டவனை வழிபடுகின்றோம்.

No comments:

Post a Comment