Search This Blog

Monday, December 21, 2015

பேசாம மாடுமேய்க்கப் போயிருக்கலாமோ????????????????

ராமசாமியும், மாடசாமியும் நண்பர்கள்... அருகருகே இருக்கும் வீட்டில் வசிப்பவர்கள்...
ராமசாமி பி.டெக் முடித்தவுடன் வளாக நேர்காணலில் வருடம் நான்கு லட்சம் சம்பளத்தில் வேலை கிடைக்க... அவரின் பெற்றோரும், சுற்றத்தாரும், நண்பர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்கள்... ராமசாமியின் முகம் மகிழ்ச்சியில் பூரித்து பளபளக்க.... இனிமேல் தனக்கு எப்போதும் மகிழ்ச்சிதான் என்று நினைத்துக்கொள்கிறார்...
ஆனால் மாடசாமியோ.. டிகிரியில் தோல்வியடைந்து விடுகிறார்... வீட்டில் வசவுகள் தாங்க முடியவில்லை... வீட்டில் மட்டுமா?... சுற்றத்தார். நண்பர்கள் என்று அனைவரும் கரித்துக் கொட்டுகிறார்கள்...
அதுமட்டுமா?... ஆலோசனைகள் அள்ளி வழங்குகிறார்கள்... இட்லிகடை வை, காய்கறி விற்கப்போ, பெட்டிக்கடை வை, பால் வியாபாரம் செய், மளிகைக்கடை வை என்று..... மாடசாமியின் அப்பாவுக்கோ சொல்லவொண்ணா வேதனை... மகன் இப்படி செய்து விட்டானே என்று... மாடசாமியோ இடிந்து போய் விட்டான்... கடைசியில் ஒரு வழியாய் மனதை தேற்றிக்கொண்டு.. அம்மாவின் நகைகளை வங்கியில் வைத்து இரண்டு லட்சமும், அப்பாவிடம் இரண்டு லட்சமும் கடன் வாங்கி, நான்கு எருமைகள் வாங்கி பால் வியாபாரத்தை ஆரம்பிக்கிறான்...
ராமிசாமி க்ரடிட் கார்டுமூலம் பைக் வாங்குகிறார்... மகிழ்ச்சியாய் அலுவலகம் செல்ல ஆரம்பிக்கிறார்... மாடசாமி டி.வி.எஸ் 50 வாங்குகிறார்... அதில் பால் கேன்களை கட்டிக் கொண்டு பால் வியாபாரத்தை கவனித்துக்கொள்கிறார்... இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்கிறார்கள்... ராமசாமி மகிழ்ச்சி பொங்க ‘ஹாய்’ என்று சொல்லி கையசைக்கிறார்... மாடசாமியோ அவமானத்துடன் தலையைக் குனிந்துகொண்டு ‘ஹாய்’ சொல்லிவிட்டு தப்பித்து வீட்டுக்கு வேகமாக சென்று விடுகிறார்...
ஆறு மாதங்களுக்குப் பிறகு.......
ராமசாமி தான் வாங்கிய பைக் லோனில் 20 சதவீதத்தை கட்டியிருக்கிறார்.... மாடசாமி தன் அப்பாவிடம் வாங்கிய 2 லட்சம் கடனில் 1 லட்சத்தை எப்படியோ கட்டி விடுகிறார்... அதற்குள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிவிடுகிறார்... இப்போது மறுபடியும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறார்கள்... இருவரும் புன்னகைத்துக் கொள்கிறார்கள்... ராமசாமிக்கோ தான் கட்டவேண்டிய லோன் பாக்கி நினைவுக்கு வருகிறது... மாடசாமிக்கோ... தான் இன்னும் கட்டவேண்டிய ஒரு லட்சம் கடன் நினைவுக்கு வருகிறது...
ஒரு வருடத்திற்குப் பிறகு.........
ராமசாமி சம்பள உயர்வை எதிர்பார்க்கிறார்... பொருளாதார மந்த நிலை காரணமாக சம்பள உயர்வு இல்லை.... இப்போது அரை லிட்டர் பாலின் விலை 10 ரூபாயில் இருந்து 14 ரூபாயாகிறது... மாடசாமிக்கு 30% லாபம் கூடுகிறது... அப்பாவிடம் வாங்கின கடனை அடைத்து... அம்மாவின் நகைகளை வங்கியில் இருந்து மீட்டு விடுகிறார்... ராமசாமி தன் பைக் லோனை அடைத்துவிட்டு, சொந்த லோனாக 2 லட்சம் 16% வட்டியில் வெளிநாட்டு வங்கியில் வாங்குகிறார்... அதைக்கொண்டு வீட்டிற்குத் தேவையான பர்னிச்சர்கள், எல்.சி.டி டிவி, லேப்டாப் என்று வாங்கி மகிழ்கிறார்... சுற்றத்தாரும் நண்பர்களும் வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே நன்றாக சம்பாதிக்கிறார் என்று மகிழ்ச்சியோடு பேசிக்கொள்கிறார்கள்... மாடசாமியோ... மேற்கொண்டு 12 எருமைகள் வாங்குகிறார்....
இப்போது இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்... ராமசாமிக்கோ தான் வாங்கிய 2 லட்சம் கடன் நினைவுக்கு வருகிறது... மாடசாமியோ கம்பீரமாக புன்னகைக்கிறார்... காரணம் அவருக்கு எந்த கடனும் இல்லை....
இரண்டு வருடங்களுக்குப் பிறகு...
ராமசாமிக்கு 10% சம்பள உயர்வு வருகிறது... அதைக் கொண்டாட குறைந்த வட்டியில் கார் லோனில் கார் வாங்குகிறார்...அந்த சமயத்தில் மாடசாமி... எருமைகள் மேய இடம் போதாமையால் 2 ஏக்கர் நிலம் வாங்குகிறார்... மேலும் அதில் மேய இரண்டு டஜன் எருமைகளும் வாங்குகிறார்... இப்போது பாலின் விலை 30% அதிகரிக்கிறது... இப்போது மாடசாமியின் வருமானம் 200% அதிகரிக்கிறது... மாடசாமி ஒரு ஆட்டோ வாங்கி... பால் வியாபாரத்தை கவனிக்கிறார்... இப்போது இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்... ராமசாமி கடன்வாங்கி வாங்கிய காரிலும், மாடசாமி சொந்த ஆட்டோவிலும் இருக்க..... இருவரும் புன்னகைத்துக் கொள்கிறார்கள்.....
நான்கு வருடங்களுக்குப் பிறகு..........
ராமசாமி 40 லட்சம் கடனில் அடுக்குமாடியில் ஒரு ப்ளாட் வாங்குகிறார்... மாடசாமியின் எருமைகளின் எண்ணிக்கை நூறைத் தொடுகிறது....மாடசாமி சொந்தமாய் ஒரு வீடு கட்டிக் கொள்கிறார்..... இப்போது மீண்டும் பாலின் விலை உயர்கிறது.... லிட்டர் விலை 40 ரூபாய்... மாடசாமியின் வருமானம் ராமசாமியின் வருமானத்தை விட 500% உயர்ந்திருக்கிறது... வேறு வழி இல்லாமல் மாடசாமி ஒரு ஸ்கோடா காரும், ஒரு இன்னவோ காரும் வாங்குகிறார்.... இப்போது இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள்.... ராமசாமிக்கோ 40 லட்சம் கடனை நினைத்து பயங்கர டென்சன்... அதேமாதிரி மாடசாமிக்கோ சொந்தமாய் பால் பவுடர் தொழிற்சாலை ஆரம்பித்த டென்சன்... இப்போது அவரிடம் 25 பேர் தொழிலாளிகளாய் வேலை செய்கிறார்கள்....
ஐந்து வருடங்களுக்குப் பிறகு.....
ராமசாமியின் வருட வருமானம் 7 லட்சமாய் உயர்ந்திருக்கிறது... ஆனால் மாடசாமிக்கோ சொத்தின் மதிப்பு நான்கு கோடியாகவும், மாத வருமானம் 5 லட்சமாய் இருக்கிறது...
*
*
*
*
2008 ல் பாலின் விலை... லிட்டர்15 ரூபாய்... இப்போது 40 ரூபாய்... அப்போது தங்கம் பவுன் 12,500. இப்போது பவுன் 25,000. ஐந்து வருடங்களாக பொறியாளர்களின் சம்பள உயர்வு 30% மட்டுமே... ஆனால் பெரும்பாலான மக்கள் பொறியாளர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாக எண்ணிக்கொண்டுள்ளார்கள்......
கதையின் நீதி..... பேசாம மாடுமேய்க்கப் போயிருக்கலாமோ????????????????

No comments:

Post a Comment