நத்தைச் சூரி குழி மீட்டான் மூலிகை என்றழைக்கப்படுகிறது.அதாவது பிணமாகிக் குழியில் விழுந்தவனையும் மீட்டெடுக்கும் என்பதால் இந்தப் பெயர். நத்தைச் சூரி எண்ணெய் வர்ம பாதிப்புகளில் இருந்து உடலைவிட்டு உயிர் பிரியாமல் மீட்பதாலும் இதற்கு இந்தப் பெயர்.
நத்தைச் சூரி விதையை புறாவும் , காடையும் , கவுதாரியும் , குருவியும் இதை சாப்பிடுவதால் அவற்றுக்கு போக சக்தி மிக அதிகமாக இருக்கிறது.உடலை மிக அதிகமாக இறுக்கும்.உடல் இரும்பு போல ஆகும்.ஒரு மண்டலம் இச்சா பத்தியத்துடன் இருக்க அதிக பலமுண்டாகும்.விந்தை ஸ்தம்பனம் செய்ய உதவும்.இதனால் நூறு பெண்கள் வந்தாலும் இந்திரிய ஸ்கலிதம் ( விந்து நஷ்டம் ) இல்லாமல் , நூறு பெண்களையும் திருப்தி செய்யலாம். ஏனெனில் விந்து ஞானத்துக்கு மிக முக்கியம்.
நத்தைச் சூரி வேரை வாயில் போட்டு மென்று கொண்டு கண்ணில் மண்ணைப் போட்டால் உறுத்தாமல் கண்ணீர் கொட்டாமல் எப்போதும் போல பார்த்துக் கொண்டிருக்கலாம்.கண்ணிற்கு அவ்வளவு வல்லமை அளிக்கும். நோக்கு வர்மம் மற்றவரின் மேல் பிரயோகம் செய்ய கண்ணிற்கு பலம் அளிக்கும் மஹா மூலிகை.இது மட்டுமல்லாமல் மந்திரப் பிரயோகங்களிலும், இதை காலற்ற , உடலற்ற , தலையற்ற நாட்களைத் தவிர்த்து மற்ற முழு நாளில் தூப தீப எலுமிச்சம் பழம் பலி கொடுத்து சாப நிவர்த்தி செய்து எடுத்து இதன் வேரை தாயத்தில் அடைத்து இடுப்பில் அணிய சகல லோக வசியம் , ஞான வசியம் , லட்சுமி வசியம் , சரஸ்வதி வசியம் , பார்வதி தேவி வசியம் சித்திக்கும் என்று மூலிகை ஜால ரத்தினம் கூறுகிறது.நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.
No comments:
Post a Comment