Search This Blog

Tuesday, October 28, 2014

தமிழ் மொழியில் அருளிய இந்து வேதத்தில் பெண்கள்


பெண்களில் அருளுலகத்திற்குரிய பெண்கள் என்றும், பொருளுலகத்துக்குரிய பெண்கள் என்றும் இரண்டு வகையாக வேறுபடுத்தி பிரித்துக் காட்டப்படுக்கிறார்கள். இந்துவேதத்தின் தனிச் சிறப்பாகும்.
உலகியலான அல்லது பொருளியலான பெண்கள் மட்டும்
1.ஐந்து வயது முதல் ஏழு வயது வரை உள்ள பெண்கள் பேதை எனவும்,
2.எட்டு வயது முதல் பதினொன்று வயது வரை உள்ள பெண்கள் பெதும்பை எனவும்,
3.பன்னிரண்டு வயது முதல் பதின்மூன்று வயது வரை உள்ள பெண்கள் மங்கை எனவும்,
4.பதினான்கு வயது முதல் பத்தொன்பது வயது வரை உள்ள பெண்கள் மடந்தை எனவும்,
5.இருபது வயது முதல் இருபத்தைந்து வயது வரை உள்ள பெண்கள் அறிவை எனவும்,
6. இருபத்தாறு வயது முதல் முப்பத்தொன்று வயது வரை உள்ள பெண்கள் தெரிவை எனவும்,
7. முப்பத்திரண்டு வயது முதல் நாற்பது வயது வரை உள்ள பெண்கள் பேரிளம்பெண்

எனவும் ஏழு பருவத்தினராக பட்டியலிட்டுக் காட்டப் படுகிறார்கள்.
தெய்வீகப் பெண்களின் ஒன்பது பருவங்கள். அதாவது, பெண்களாகப் பிறந்தவர்களில் தெய்வீக ஆற்றல் உடையவர்கள் இந்துவேதத்தில்,
1.மகள்,
2.வாலை,
3.பிறவிடை,
4.கன்னி,
5.தருணி,
6.நங்கை,
7.குமரி,
8.பெண் (பெண்டு, பொம்பளை)
9.விருத்தை (வீழி)

என்று ஒன்பது பருவத்தினராகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் பொருளுலக வாழ்வில் ஈடுபட்டால் சிறக்க மாட்டார்கள்.
அதாவது, பிறப்பியல் (சாதகம்), வரியியல் (கைரேகை), அங்கவியல் (உறுப்பிலக்கணம்), பெயரியல், மனையியல் எனும் ஐந்தர, ஐந்திர, ஐந்திற கலைகளால் பெண்களைக் கணித்து அவர்கள் அருளுலக வாழ்க்கைக்குரியவர்களா? பொருளுலக வாழ்க்கைக்குரியவர்களா? என்று முடிவு செய்ய வேண்டும். அதன்மூலம், அருளுலக வாழ்க்கைக்குரிய பெண்கள் முழுநேர அருளுலக வாழ்க்கை வாழ அல்லது அருளுலக வாழ்க்கையில் ஆர்வமுள்ள ஆண்களை மட்டுமே தேர்ந்தெடுத்து கணவராக்கிக் கொண்டு வாழ வேண்டும்.
இந்த பொருளுலகப் பெண்கள் அருளுலகத்துக்குரிய ஆண்களை; அதாவது, அருளுலக ஆர்வமும் விருப்பமும் ஈடுபாடும் உடைய ஆண்களை மணந்து கணவனாக்கிக் கொண்டு வாழ்ந்திட்டால்; அருளுலக வாழ்க்கைக்குரிய பெண்கள் பொருளுலக ஆண்களை மணந்து கணவனாக்கிக் கொண்டு வாழ்ந்திட்டால் வாழ்க்கை சிறக்காது, இன்பமாக இருக்காது, அமைதியாக இருக்காது, நிம்மதியாக இருக்காது, நிறைவான வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் கிடைக்காது, இயற்கையான இறப்பு கிடைக்காது..... என்று பொருளுலகப் பெண்களைப் பற்றிய நுட்பதிட்ப ஒட்பமான கருத்தினை விளக்குவதுதான் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் அருளியுள்ள இந்துவேதத்தின் சிறப்பு.
ஞாலகுரு, ஞானாச்சாரியார், கருவூறார்.
'அன்பு சித்தர்'

No comments:

Post a Comment