இன்று நாம் காண்பது மச்சாசனம் .மீனை போன்று தோற்றம் கொண்டதால் இது மச்சாசனம் என பெயர் பெற்றது.விரிப்பில்அமர்ந்து வலது காலை இடது தொடையிலும்,இடது காலை வலது தொடையிலும் ஏற்றி பத்மாசனம் போடவும்.பின்பு அதே நிலையில் மல்லாந்து படுத்துக் கொள்ளவும்.கைகளைப் பின்னால் ஊன்றி முதுகைத் தூக்கி வில் போல வளைத்து தலையைப் படத்தில் காட்டியபடி பின் வளைத்து கைகளை எடுத்து,கால் கட்டை விரல்களை பிடித்துக் கொள்ளவும்.தீர்க்கமாக சுவாசிக்கவும்.ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முறை செய்யலாம்.
பலன்கள் ;
சர்வாங்காசனம்,விபரீதகரணி,ஹலாசனம்,மகா முத்ரா போன்ற ஆசனங்களுக்கு மாற்று ஆசனம்,சுரப்பிகள் அனைத்தும் புத்துணர்வோடு வேலை செய்யும்.முதுகெலும்பு பலப்படும்.மார்பு விரிந்து நுரையீரல் நன்றாக வேலை செய்யும்.மலச்சிக்கல் நீங்கும்.மார்புக்கூடு,க்ஷயம்,காசம்,இருமல்,கக்குவான்,மார்புச்சளி போன்றவை நீங்கும்.
No comments:
Post a Comment