Search This Blog

Saturday, November 9, 2013

ஆஸ்கார் விருதிற்காக முதன்முறையாக தமிழ்ப்பாடல் தேர்வு!

அண்மையில் உலகெங்கிலும் வெளியீடு கண்டு மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்ற ’லைஃப் ஒப் பாய்’ எனும் திரைப்படம் 2013-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுப் பட்டியலில் 11 வித பிரிவுகளில் முன்மொழியப்பட்டுள்ளது. 

சிறந்த இயக்குனர்

 சிறந்த திரைப்படம்

 சிறந்த திரைப்படவியல்

 சிறந்த திரைப்பட ஒளிப்பதிவு

 சிறந்த அசல் இசை

 சிறந்த அசல் திரைப்பாடல்

 சிறந்த உற்பத்தி வடிவமைப்பு

 சிறந்த திரைப்பட ஒலிப்பதிவு

சிறந்த ஒலிகலப்பு

 சிறந்த திரைப்பட காட்சி வடிவமைப்பு

 சிறந்த ’தழுவல் செய்யப்பட்ட’ திரைக்கதை

 இதில் சிறந்த அசல் திரைப்பாடலுக்காக பாடகி பாம்பே ஜெயஸ்ரீ எழுதிப் பாடிய ‘கண்ணே கண்மணியே’ எனும் தமிழர்களின் தாலாட்டுப் பாடல் ஆஸ்கார் விருதிற்காக முன்மொழியப்பட்டுள்ளது. இதன்வழி ஆஸ்கார் விருதிற்காக முன்மொழியப்பட்ட முதல் தமிழ்ப்பாடல் எனும் பெருமையை பாம்பே ஜெயஸ்ரீ தமிழர்களுக்காகப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அதே சமயம் சிறந்த அசல் இசைக்காகவும் இப்பாடல் முன்மொழியப்பட்டுள்ளது. இப்பாடல் ஆஸ்கார் விருதினைப் பெற வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்போம். மைக்கல் டானா இசையமைப்பில் பாம்பே ஜெயஸ்ரீயின் மயங்க வைக்கும் குரலில் இதோ தமிழர்களின் தாலாட்டுப் பாடல்.
THANKS http://olaichuvadi.blogspot.com

No comments:

Post a Comment