காலத்துக்கு ஏத்த மாதிரி, இடத்துக்கு தகுந்த மாதிரி சில நோய் வந்து மனுஷன
பாடாப்படுத்திரும். அதுலயும் சில நோய் இருக்குற இடம் தெரியாது. ஆனா... ஆளை
உண்டு, இல்லைனு ஆக்கிடும்.
இந்த... கால் ஆணி இருக்கே, அது
வந்துட்டா உயிர் போற மாதிரி வலி எடுக்கும். சிலர் என்ன வைத்தியம் செய்றதுனு
தெரியாம பனைவெல்லத்தை கால் ஆணி உள்ள இடத்துல வச்சு தீக்குச்சியை பத்த
வைப்பாங்க. இன்னுஞ்சிலர் பிளேட வச்சு ரத்தம் வர்ற அளவுக்கு ரவுண்ட் ரவுண்டா
அறுத்து எடுப்பாங்க. எவ்வளவு கொடுமையான வைத்தியம் பாருங்க. கைவசம்
எளிமையான வைத்தியமெல்லாம் இருக்கும்போது... எதுக்காக இந்த முரட்டு
வைத்தியம்?
அம்மான் பச்சரிசி
செடினு ஒண்ணு கேள்விப்பட்டிருப்பீங்க. அந்தச் செடியை உடைச்சு, அதுல வர்ற
பாலை எடுத்து, கால் ஆணி இருக்கற இடத்துல தடவி வந்தா... அந்தப் பிரச்னை
ரொம்பச் சொகமா மறஞ்சி போயிரும்.
ஒரு செடியை சிறுசு சிறுசா
உடைச்சு அதில வர்ற பாலை பயன்படுத் தலாம். ஒரு தடவை தடவினதும் குணம்
கெடச்சிராது. தொடர்ந்து ரெண்டு வாரமாவது செஞ்சு பாருங்க. முதல்ல வலி
கொறையும், பிறகு போகப் போக ஆணியும் மறைஞ்சிரும்.
மருதாணி இலை
கொஞ்சம், மஞ்சத் துண்டு கொஞ்சம் ரெண்டையும் எடுத்து மையா அரைக்கணும். ஒரு
நெல்லிக்காய் அளவு எடுத்து, ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி
உள்ள இடத்துல வச்சு கட்டிடணும். தொடர்ந்து 10 நாள் செஞ்சு பாருங்க. துண்டக்
காணோம்... துணியைக் காணோம்னு பாய்ஞ்சி ஓடிப்போயிரும் ஆணி.
சித்திரமூலம் (இதை கொடிவேலி என்றும் சொல்வார்கள். நாட்டு மருந்து கடைகளில்
கிடைக்கும்) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சு
தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி மேல பூசி வந்தா... மூணு நாள்ல குணம்
கிடைக்கும். இந்த வைத்தியம் செய்யும்போது சிலருக்கு அந்த இடத்துல புண்
உண்டாகும். அப்படி வந்தா... ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில ஒரு சிட்டிகை
மஞ்சள்தூள் சேர்த்து குழைச்சு, புண் வந்த இடத்துல பூசுனா புண் ஆறிடும்.
கால் ஆணியும் காணாமப்போயிரும்.
Related Posts : Health
No comments:
Post a Comment