ஒரு நாளைக்கு ஒருவர் இவ்வளவு ஒலியைத்தான் கேட்க வேண்டும் என்று வரையறை
உள்ளது. இதைவிட அதிகமான சத்தத்தை கேட்கும் போது நரம்பு செல்களை பாதித்து
செவிட்டுத்தன்மை உருவாகிறது. ஒலியின் அளவு டெசிபல் குறியீடுகளால் அளவிடப்படுகிறது.
சாதாரணமாக 60 முதல் 70 டெசிபல் சத்தத்தை கேட்பதால் பிரச்சினை
ஏற்படுத்துவதில்லை. அதற்கு மேல் மிகையான சத்தத்தை கேட்கும் போது காது
நரம்புகள் பாதிப்படைகின்றன.
அதிக இரைச்சல் மிகுந்த இயந்திரத்தில் பணியாற்றும் போது, சத்தத்தை குறைத்துக் கொடுக்கும் உபகரணங்களை பயன்படுத்துவது அவசியம். வேலையின் இடையே குறிப்பிட்ட மணி நேரத்திற்கு ஒருமுறை சற்று நேரம் இரைச்சல் இல்லாத இடங்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
குழந்தை பிறந்து ஒரு வயதானவுடன் பேசத் தொடங்கி விடுகிறது. அப்படி மழலை மொழியில் குழந்தை பேசவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைக்கு பேச்சுத்திறமை கிடைக்கவில்லை என்று இரண்டு மூன்று வயது வரை காத்திருக்கின்றனர். கிராமத்திலோ 10 வயதுவரையில் டாக்டரிடம் காண்பிக்காமல் இருக்கின்றனர். ஒரு வயதிலேயே இதை கண்டுபிடிக்கும் போது காது கேட்கும் கருவியின் மூலம் கேட்கும் சக்தியை கொடுக்க முடியும்.
தீபாவளி, கோவில் விழாக்கள், பண்டிகைகள், ஊர்வலங்களில் வெடி வெடிக்கும் போது அதன் அருகில் நிற்பதும் காதுக்கு ஆபத்தை தரும். வெடிப்பதன் மூலம் உருவாகும் மிகை ஒலி காதுசவ்வை கிழிக்கவும் அல்லது காது நரம்புகளை பாதிக்கவும் செய்யலாம்.
காதுக்குள் அழுக்கு சேர்ந்தால் "பட்ஸ்" மூலம் சுத்தம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால் பட்ஸ் மூலம் சுத்தம் செய்வது தவறான பழக்கம். அழுக்கை வெளியே எடுப்பதற்கு பதிலாக "பட்ஸ்" மூலம் காதுக்குள் தள்ளிவிடும் வாய்ப்பு அதிகம். பொதுவாக அழுக்கு தானாகவே வெளியேறும் விதத்தில் காதின் அமைப்பு அமைந்துள்ளது. அப்படி இருந்தும் காதுக்குள் அழுக்கு அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் டாக்டரை தொடர்பு கொண்டு சுத்தம் செய்யலாம். 6 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது நல்லது.
காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது?
* நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டு பிறக்கும் குழந்தைக்கு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம்.
* கருவுற்றிருக்கும் சமயத்தில் வியாதிகளுக்கு தாய் உட்கொள்ளும் மருந்துகள் குழந்தையின் கேட்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
* கருவுற்றிருக்கும் சமயத்தில் தாய்க்கு வைரஸ் நோய் அல்லது அம்மை நோய் பாதிப்பு இருந்தால் அது குழந்தையின் கேட்கும் திறனை பாதிக்கலாம்.
* பரம்பரை நோய் காரணமாகவும் கேட்கும் திறன் பாதிப்படையலாம்.
மேற்கண்ட காரணங்கள் யாவும் நரம்பை பாதித்து அதன் மூலம் கேட்கும் திறன் குறைந்துவிடுகிறது. இதுதவிர காது சவ்வு பாதிப்பு, காது எலும்புகள் பாதிப்பு, காதில் சீழ்பிடித்தல், காது சவ்வில் ஓட்டை விழுதல், அதிக இரைச்சல் காரணமாக காதுகேட்கும் திறன் பாதிப்படைகிறது. அதாவது சத்தத்தை சரியாக நடத்திச் செல்ல இயலாத காரணத்தால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. காதுக்குள் இருக்கும் எலும்புகள் சரியாக "மூவ்" ஆகாமல் இருந்தாலும் கேட்கும் திறமை பாதிப்படையும்

No comments:
Post a Comment